Category: குடி அரசு 1927

ஓர் மறுப்பு 0

ஓர் மறுப்பு

திருப்பூரில் பார்ப்பனரல்லாதார் நபரால் கூட்டப்போகும் ஒரு போலி மகாநாட்டிற்கு எதிரிடையாய் ஒரு மகாநாடு கூட்டப் போவதாகவும் அதற்கு ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர் முதலியோர்கள் வரப்போவதாகவும், பார்ப்பன பத்திரிகைகளில் வெளியாய் இருக்கிறது. இது கொஞ்சமும் ஆதாரமற்றது. இதற்கு மறுப்பு அசோசியேட் பிரஸ் பிரதிநிதியிடம் நேரில் தெரிவித்தும் பத்திரிகைகளில் வெளியாகவில்லை. நம்மை பொருத்தவரை அப்பேர்பட்ட மகாநாடு கூட்டுவதைப் பற்றி கொஞ்சம் கூடக் கருதவில்லை என்றும் கூட்ட லாமா என்று பலர் யோசனை கேட்பதற்குங்கூட அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். குடி அரசு – மறுப்புரை – 14.08.1927

ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா 0

ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா

ஈரோடு முனிசிபாலிட்டியாரால் ஒரு ஹைஸ்கூல் திடீரென்று ஏற்படுத் தினதின் கருத்தையும், அதன் பேரில் மஹாஜன ஸ்கூல்காரர்கள் முதன் மந்திரிக்கு எழுதியதின் பேரில் ³ ஹைஸ்கூலில் 4 வது 5 வது பாரங்களை எடுத்துவிட வேண்டுமென்று மந்திரி உத்திரவு போட்டார் என்பதையும், 2,3 வாரங்களுக்கு முன்பு ‘குடி அரசில்’ எழுதியிருந்தோம். முதன் மந்திரியின் இந்த உத்திரவின் பேரில் ஈரோடு சேர்மென் சில பலமான சிபார்சுகளைப் பிடித்துக் கொண்டு போய் அதாவது நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு எதிரிடையாய் கக்ஷி சேர்ப்பதாய்ச் சொல்லி, அந்த உத்திரவை மாற்றி மறுபடியும் ஒரே அடியாய் 4வது, 5வது, 6 வது பாரங்கள் வைத்துக்கொள்ள உத்திரவு போடும்படி கேட்க, நமது மந்திரியார் அதே மாதிரி உத்திரவு போட்டார். தவிரவும் இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க இதே மந்திரி யை ஆரம்பத்தில் முனிசிபல் சேர்மன் சீமான் சீனிவாச முதலியார் கேட்டுக் கொண்ட பொழுது, வருவதாய் வாக்களித்து விட்டு மறுபடி, யார் யாரோ முதல்...

தஞ்சை ஜில்லா பிரசாரம் 0

தஞ்சை ஜில்லா பிரசாரம்

அச்சுயமரியாதை அடையவே இப்போது நாம் ஆங்காங்கு பார்ப்பன ரல்லாதார் சங்கம் என்பதாகவும், பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கம் என்ப தாகவும் ஏற்பாடு செய்து வருகிறோம். வகுப்புப் பெயரால் ஏன் சங்கத்தை நிறுவ வேண்டும்? என சிலர் கேட்கலாம். நமது நாட்டில் வகுப்புகள் இருந்து வருவதை யாவரும் மறைக்க முடியாது. ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்புக்கு என சங்கங்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பாருக்கும் பொதுக் குறைகள் பலவும் மற்ற வகுப்பார்களால் சில குறைகளும் இருந்து கொண்டுதான் வருகிறது. அவற்றை நிவர்த்தித்துக் கொள்ள அந்தந்த வகுப்பார் தனித்தனியாய் முயற்சித்துத் தான் ஆக வேண்டும். நமது குறையை மற்றொரு வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு போதிய நிலைமை இன்னமும் ஏற்படவில்லை. நமது குறையை மற்ற வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு முன் அந்த மற்ற வகுப்பாரால் நாம் கொடுமை செய்யப்படாமலும் குறைகளுண்டு பண்ணப்படாமலும் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்கு இருப்பதாய் சொல்லிக்...

திராவிடன் 0

திராவிடன்

‘திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி வந்தபடி அதாவது திராவிடன் பத்திரிகையின் ஆசிரியத் தொழிலையும் நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்வது என்பதாக முடிவு ஏற்பட்டு விட்டதால் அநேகமாக இம்மாத முடிவுக்குள்ளாகவே ஏற்றுக்கொள்ளக்கூடும். தன வணிக நாட்டு சுற்றுப் பிரயாணத்திற்குப் பிறகு உடல்நிலை சற்று கெட்டுப்போய் இருக்கிறது. ஆதலால் ஒரு வாரம் குற்றாலம் போய் அங்கி ருந்து கொண்டே சென்னை போக வேண்டிய விஷயங்களைப் பற்றி ஏற்பாடு செய்யலாமென்பதாக நினைத்திருக்கிறோம். அநேகமாக 17 தேதி அல்லது 18 தேதி இவ்விடமிருந்து குற்றாலத்திற்கு புறப்படுவதாயிருக்கலாம். அங்கி ருந்து இம்மாத முடிவுக்குள்ளாகவே சென்னை செல்ல உத்தேசம். ஆங்காங்குள்ள நண்பர்கள் அதற்குள்ளாக ஒரு 500 சந்தாதாரர் களையாவது சேர்த்து அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். திராவிடனை ஒப்புக் கொள்ளும்படி நமக்கு கட்டளை இட்ட சுமார் 500க்கு மேற்பட்ட நண்பர்களில் அநேகர் அதாவது ஒருவர் நாம் ஒப்புக்கொண்ட அன்றே 100 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும் மற்றவர்...

அரசியல் புரட்டு 0

அரசியல் புரட்டு

இதுகாலை இந்திய நாட்டை சுயமரியாதை அடைய முடியாமலும் விடுதலை பெறமுடியாமலும் உண்மையாய் தடுத்துக்கொண்டிருப்பவை எவை என்பதாக ஒரு அறிஞன் யோசித்துப் பார்ப்பானேயாகில் இந்துமத இயக்கமும் இந்திய அரசியல் இயக்கமுந்தான் என்பதாகவே முடிவு செய்வான். நம் மக்களின் சுயமரியாதைக்கு இடையூறாயிருப்பது இந்து மதம் என்பதை அநேக தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். இது போலவே இந்திய அரசியல் இயக்கத்தால் நமது விடுதலை தடைப்பட்டு அடிமைத்தன்மை பலப்பட்டு வருவதையும் பலதடவை பேசியும் எழுதியும் வந்திருப்பதுடன், இவ்விரண்டும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும் சுயநலத் திற்கும் பார்ப்பனர்களால் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். எனினும், இதுசமயம் அரசியல் புரட்டைப் பற்றியே இத்தலையங்கம் எழுதுகிறோம். உதாரணமாக அரசியல் இயக்கம் தோற்றுவித்த காலத்திலேயே இதை தோற்றுவித்தவர்கள் கருத்தென் னவென்பதை யோசித்தால் விளங்கும். அதாவது அரசாங்க உத்தியோகத்தில் இந்தியர்கள் சமஉரிமை பெறவும், அரசாங்க அதிகாரத்தில் பங்கு பெறவும், அரசாங்கத்தையே நடத்திக்கொடுப்பதற்கு கட்டுப்பட்டு அரசாங்க சேவை செய்யவுமே தான் கருத்துக்கொண்டு நமது...

‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு 0

‘மகாத்மாவும் வருணாச்சிரமமும்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு

மகாத்மா காந்தி வருணாசிரமத்தைப் பற்றி மைசூரில் பேசியதாக சென்ற வாரம் குடியரசில் குறிப்பிட்ட விஷயத்தின் விபரமாவது. “…………………….தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் இந்து சமூகத் திலிருந்து விலகுவதற்கு முன்னால் சுயராஜ்யம் சித்திக்குமென்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்து மதத்தில் நான் அறிந்த மட்டில் வருணாசிரம தர்மம் ஒரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு வருணத்தாரைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்க இடமில்லை. ஒவ்வொரு வருணாத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப் பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத் தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்கு சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறை வேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமண னுடைய முக்கிய தர்மம். எளியவர்களை பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம் பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வர்ணத்தினர்களும் தத்தம் தர்மங் களை கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். ( இந்த இடத்தில் வைசியர்,...

பொழுது புலர்ந்தது                                                பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்) 0

பொழுது புலர்ந்தது பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)

தேர்தல்களைப் பற்றி அடிக்கடி நாம் எழுதி வந்திருக்கிறோம். அதா வது தேசத்தின் பெயரையும் காங்கிரசின் பேரையும் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் பதவி பெறுவதற்காகவும், அவர்களுக்கு கிடைக்காது என்று தோன்றும் சமயங்களில் உண்மை சூத்திரர்களான, அவர்கள் அடிமைகளுக் காவது கிடைக்கும்படி பார்க்கவுமே இதுவரை வேஷம் போட்டுக்கொண்டு வந்தார்கள் இப்போதும் போடுகிறார்கள், இனியும் போடப்போகிறார்கள். இதைப்பற்றி சுமார், 5, 6 வருஷ காலமாகவே நாங்கள் வாதாடி வரு கிறோம். நாம் காங்கிரசிலிருந்த காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் காங்கிரசின் பேரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்து அனேகமாக வெற்றி பெற்றுக்கொண் டே வந்தோம். கடைசியாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடும், கல்யாணசுந்தர முதலியாரும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாகி காஞ்சீபுரம் மகாநாட்டில் இதை நிறைவேற்ற அனுமதித்து விட்டார்கள். அந்த சமயத்தில் கூட நமக்கு அதை எதிர்த்துப் பேச சவுகரியம் கொடுக்காமல் நாம் தண்ணீர் சாப்பிடுவதற் குள் இந்த தீர்மானத்தை பிரேரேபித்து ஆமோதித்து முடித்து விட்டார்கள்...

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள் 0

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

மதுரை மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலூகா மகாநாடுகள் நடத்தப்பட வேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வட ஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட ஆற்காடு ஜில்லாக் காரர்கள் ஜில்லா மகாநாடு நடத்த கமிட்டி முதலியதுகள் நியமித்து துரிதமாய் முயற்சி எடுத்து வருகிறார்கள். இம்மகாநாடுகள் அநேக மாய் இம்மாத முடிவிலோ மார்ச்சு மாத ஆரம்பத்திலோ நடக்கக் கூடும். மற்ற ஜில்லாக்காரர்களும் அதாவது செங்கற்பட்டு, தென் ஆற்காடு, திருச்சி, ராமனாதபுரம், திருநெல்வேலி முதலிய ஜில்லாக்காரர்கள் எதுவும் செய்த தாக நமக்குத் தகவலே இல்லாமலிருக்கிறது. ஆதலால் அவர்களும் சீக்கிரம் முயற்சி எடுத்து சீக்கிரத்தில் மகாநாடுகள் நடத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகி றோம். பார்ப்பனர்கள் பணம் சேர்க்கவோ தங்கள் ஆதிக்கத் திட்டங்களை நிறைவேற்றவோ எப்படியாவது தந்திரங்கள் செய்து அவர்கள்...

மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம் 0

மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம்

யாதாவது ஒரு காரியத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போனவர்களும், தனக்கென தனிமரியாதை இல்லாமல் போய் விட்டதே என்று விசனப்பட்டுக் கொண்டு இருப்பவர்களும், தனக்கென ஒரு தனிக்கட்சி சேர்க்க முயலுவது பெரும்பாலும் இயற்கை. யோக்கியமான முறையில் சமாதானம் சொல்லி எதிரிகளை வெல்ல முடியாத கூட்டத்தார்களும் தங்களது ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விட்டதாகக் கருதுகிறவர்களும், ஏதாவது சில சோணகிரி களையும் பேராசைக்காரரையும் பிடித்து தனிக்கட்சி உண்டாக்கி, அவர்களைக் கொண்டு தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக மற்ற யோக்கியமான கட்சியுடன் போராடுவதும், போராடச் செய்வதும் இயல்பு. இக்காரியங்களை அடிக்கடி நாம் அனுபோகத்தில் பார்த்து வருகிறோம். பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாக ஒரு கட்சி தோன்றியது முதல் அக்கட்சிக்கு இடையூறாக நமது நாட்டில் இதுவரை எத்தனை கட்சிகள் தோன்றி மறைந்தன? அதற்கு எதிரிடையாக எத்தனை எத்தனை எதிரிகள் தோன்றி மறைந்தார்கள்? இனியும் எத்தனை தோன்றித் தோன்றி மறையப்போகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இதனுண்மை விளங்காமல் போகாது. இவ்வ ளவு எதிரிடைகள்...

இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்? 0

இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?

நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லை யென்றும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும் இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமையில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் அதாவது பார்ப்பனர்களால் சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப் படுகிறதும் 100-க்கு 97 பேருக்கும் மேலான எண்ணிக்கைக் கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும் சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசி மக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும், பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய், கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக்கூடாதது மான கொடுமை தத்துவத்தை கொண்டது என்றும் மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், ஐரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும், அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்துவிட வேண்டிய...

பரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி 0

பரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி

நமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும் வேற்றரசர்களால் ஜயிக்கப்பட்டதற்கும் அன்னிய நாட்டரசுகள் ஆதிக்கம் பெற்றதற்கும் பார்ப்பன மந்திரித்துவம்தான் முக்கிய காரணமென்பது கர்ண பரம்பரையாகவும் சரித்திர வாயிலாகவும் அனுபோக பூர்த்தியாகவும் நாம் அறிந்த விஷயம். திருவாங்கூர் ராஜ்யம் சென்ற 100 ´ காலத்திற்கு 22 மந்திரிகளில் 93 ´ காலம் 20 மந்திரிகள் பார்ப்பன மந்திரிகளாகவே இருந்து துர் மந்திரித்துவ ஆதிக்கம் செலுத்தி வந்ததின் பலனாய் இப்போது அந்த ராஜ்யத்தில் 100 – க்கு 50 பங்கு ஜனங்கள் அன்னிய மதஸ்தர்களாவதற்கு இடம் கொடுத்து வந்திருக்கிறது. 40 லட்சம் ஜனத்தொகையில் 20 லட்சம் ஜனங்கள் அன்னிய மதஸ்தர்கள். எந்த பார்ப்பன மந்திரியாவது இதைப்பற்றி கவனித்தவரே அல்லர். அன்றியும் நமது மக்களைப் பறிகொடுத்து பாதிரிமார்களுக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து வெள்ளைக்கார கவர்னர்களது சிபார்சு பிடித்து பெரிய பட்டங்களும் உத்தியோகங்களும் சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கிறார் களே அல்லாமல் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் அதிகாரம் செலுத்த வேயில்லை....

மகாத்மாவும் வருணாசிரமும் I 0

மகாத்மாவும் வருணாசிரமும் I

மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத் திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலை நிறுத்த அதே பேச்சை வியாக்கி யானம் செய்வதில் பாடுபடுகிறார். இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மை யான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது. தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக்...

தஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும் 0

தஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு நமது பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பொறாமை என்னும் போதையில் பட்டு கண்டபடி உளறு கிறார்கள். இத்தேர்தலில் நடந்த தப்பிதம் என்ன என்பதையும் இதனால் யாராவது பிரசிடெண்டு ஸ்தானத்திற்கு நிற்பது ஞாய விரோதமாய்த் தடைப் பட்டு விட்டதா என்பதையும் ஒருவராவது எழுதவேயில்லை. தலைவர் பதவி காலியாவதற்கு முன்னாலேயே தேர்தல் நடத்தி விட்டார் என்று ஒரே மூச்சாக சத்தம் போடுகிறார்கள். இது ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தானாகவே நடத்திய தேர்தலா கவர்ன்மெண்டாரே இந்தப்படி தேர்தல் போடும்படி உத்திரவு அனுப்பினார்களா என்பதை தெரிவிக்காமல் வீணாய்க் கத்துவதின் ரகசியம் என்ன? எப்படியாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின் பேரில் பாமர ஜனங் களுக்கு ஒரு கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தனமே அல்லாமல் இதில் வேறு ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதா? இம்மாதிரியே ஒரு பார்ப்பனப் பிரசிடெண்டும் கொஞ்ச காலத்திற்கு முன் செய்து கொண்டதைப் பற்றி இப்பார்ப்பனப்...

சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா! 0

சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா!

சபையோர்களே! நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப் பட்டிருக்கும் புகழ்ச்சிக்கு நான் பாத்திரனல்லன். நான் உங்களோடு சேர்ந்த ஓர் குடித்தனக்காரனாகவும், சகோதரனாகவும் பழகி வந்தவனாகையால் உங்கள் மத்தியில் நான் இவ்வளவு மதிக்கப்படுவதையும் புகழப்படுவதையும் கண்டு வெட்கம் அடைய வேண்டியவனாகவே யிருக்கிறேன். காரியதரிசி யார் வாசித்த அறிக்கை ரிப்போர்டிலிருந்தே இச்சங்கம் தனது கடமையைச் சரிவர செய்து வந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. நம் நாட்டில் எத்தனை யோ சங்கங்கள் தோன்றினாலும் உங்கள் சங்கங்கள் போல் 12, 14 வருடங்க ளாக உயிருடனிருக்கும் சங்கங்கள் வெகு சிலவேயாகும். ஆரம்பத்தில் ஊக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சீக்கிரம் உயிர் போய் இருந்த இடமே தெரி யாமல் போவது வழக்கமாயிருக்கின்றது. அது போலவே நம் நாட்டில் அநேகம் தோன்றி நின்று போயிருக்கின்றன. இச்சங்கத்தின் வளர்ச்சிக்குக் காரணம், இச்சமூகத்தினருக்கு தங்கள் சமூக முன்னேற்றத்திலிருக்கும் அக்கரையே காரணமாகும். நான் அநேக சங்கங்களுக்கு அழைக்கப்பட்டுப் போயிருக்கிறேன். எங்கெங்கு வியாபாரிகளால் சங்கங்கள் நடத்தப்படுகின்ற னவோ...

ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு 0

ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு

கொஞ்ச நாளைக்கு முன்பு ‘சுதேசமித்திரன்’ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எழுதுகையில், “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டுவரும் நடவடிக் கையையும் பேசிவரும் பேச்சையும் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்ரீமான் நாயக்கர் சென்னை கவர்னர் வீட்டுக்கு கட்டித் தூக்கிக் கொண்டு போகப்படு வார் என்று தோன்றுகிறது” என்று எழுதி இருந்தது, அதாவது ஸ்ரீமான் நாயக்கர் சர்க்காருக்கு அவ்வளவு தூரம் நல்ல பிள்ளையாய் போய்விட்ட தாகவும், சர்க்காருடன் சேர்ந்து விட்டதாகவும், இனி சர்க்காரையே ஆதரிப் பார் என்றும் ஜனங்கள் நினைக்கும்படியாக எழுதியிருந்தது. அது எழுதிய திலிருந்து நாயக்கரும் தனக்கு ஏதாவது சர்க்கார் “சன்மானம்” வரும் என்றே எதிர்பார்த்தார். கடசியாக அவர் பேரில் போடப்பட்டிருந்த இரகசியப் போலீசு கூட எடுபடாமல் இன்னமும் தொடருவதுடன் கலக்ட்டரும் போலீசாரும் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள். இது எப்படியோ இருக்கட்டும் ஆனால் சதா சர்வ காலம் சர்க்காரை தாக்குவதாக வேஷம் போட்டு பார்ப்பனரல் லாதாரை தாக்குவதாலேயே...

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி 0

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக் கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப் போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக் கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுய மரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டு பிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சி யாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே ருஜுப்பிக் கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு...

கீழேவிழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம் 0

கீழேவிழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்

நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறை வேறி இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகிய வர்கள் சம்மதமும் அரசர் பெருமான் சம்மதமும் பெற்று சட்டமாகிவிட்டது. இனி மகந்துகள், மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதுபோல் மறுபடியும் இதைப் பற்றி திருத்தவோ புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல. நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட் ரேட் வீட்டிற்குப் போய் தனியாய் தன்னைப் பற்றி கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லு கிறீர் என்று கேட்டால் “எஜமானர்...

பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை 0

பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை

ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப் பட்டும், அவரைப் பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமானமான கொடுமையும் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களும் கேட்போர் மனதை பதைக்கும்படி யாகவே இருக்கும். ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் அவருடைய ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானம் காலியாகும். ஆதலால் அவர் மறுபடியும் பிரசிடெண்டு தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாகும் படியாக லோகல் போர்டு இலாக்கா மந்திரியாகிய டாக்டர் சுப்பராயன் அவர் களை ஜில்லா போர்டு மெம்பராக நியமனம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். போர்டு வைஸ்பிரசிடெண்டும் போர்டின் மூலம் கவர்ன்மெண்டுக்கு சிபார்சு செய்தார். மந்திரி, பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நினைத்தோ நியமனம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் மேல் ஜில்லா போர்டு மெம்பர் களில்...

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு 0

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு

பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைப்பதற்காக ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பிரயத்தனத்தின் முதல் பாகம் ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கள் வேளாளர் என்பதாகவும், அந்த வேளாளரைக் காப்பாற்ற வேண்டி யது வேளாள கனவான்களின் கடமை என்பதாகவும் கிளப்பி விட்டு சில வேளாள கனவான்கள் பெயரால் திருப்பூரில் ஒரு மகாநாடு என்பதாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் நமது செட்டியா ருக்கு என்ன வந்தது என்பதை பொது ஜனங்கள் நன்றாய் யோசித்து பார்க்க வேண்டும். ஸ்ரீமான் செட்டியாரின் கொள்கை என்ன என்பதை பொது ஜனங்கள் முதலில் சிந்தித்தால் மற்றது விளங்கும். “உன் பிறப்போ பத்து என் பிறப்போ எண்ணத் துலையாது” என்பதாக மகா விஷ்ணுவைப் பார்த்து ஒரு புலவன் பாடினான் என்கிற கதைபோல் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் அரசியலில் தலையிட்ட பிறகு அவரது அரசியல் பிறப்பு எண்ணத் துலையாது என்றே சொல்லவேண்டும். சமீபகாலமாக அவரது...

நமது நாட்டுக்கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம் 0

நமது நாட்டுக்கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம்

இம்மாதம் 15 தேதி இரவு ஈரோட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத் துக்கு சுற்றுப் பிரயாணம் புறப்பட்ட நாம் 25 தேதி பகல் ஈரோடு வந்து சேர்ந்தோம். 16 தேதி காரைக்குடி, 17 தேதி சிவகங்கை, 18 தேதி தேவகோட்டை, 18 தேதி இரவு பள்ளத்தூர், 19 தேதி காலை புதுவயல், 19 தேதி மாலை கண்ட னூர், 20 தேதி காலை சிறாவயல், திருப்பத்தூர் 20 தேதி மாலை, 21 தேதி காலை வடக்கூர், 21 தேதி மாலை நெற்குப்பம், 22 தேதி அமராவதிப் புதூர், 23 தேதி தஞ்சை, 24 தேதி திருச்சிக்கும் சென்றுவிட்டு 25 தேதி ஈரோடு சேர்ந்தோம். சுற்றுப் பிரயாணம் சரீரத்திற்கும், மனதிற்கும் மிகவும் திருப்தியளித்து வந்த தென்றே சொல்ல வேண்டும். போகுமிடங்களிலெல்லாம் அன்று மலர்ந்த சுயமரியாதை புஷ்பங்களான தனவணிக வாலிபர்களின் உற்சாகமும் ஆவலும், எழுச்சியும் இதற்கு முன் எங்கும் கண்டதில்லை என்றே சொல்லு வோம். சுருக்கமாகக் கூற...

பத்திரிகைகள் 0

பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற் கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோக்ஷம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங் களையும் ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர் களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசீயம், தேசீயப் பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசீயப் பத்திரிகைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திகொண்டு நம்மை தாழ்த்தி மிதித்து மேலேறி பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக்கொண்டு விட்டார்கள். இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தா யிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக்கொண்டிருக்கிறது. பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும்...

ஓர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது ” 0

ஓர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது ”

‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள்” என்றும் ‘சுதேசமித்திரனி’ல் “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் டாக்டர். சுப்பராயனைக் கண்டு பேசினார்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே ‘மந்திரிக்கு உபசாரம்’ ‘மந்திரிகளின் பிரசாரம்’ என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதி இருக்கின்றன. எனவே இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப் படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த ஒருவன் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்ப தாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும், மந்திரி தனது வேலையை காப்பாற்றிக் கொள்ளும்...

இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும் 0

இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும்

நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும், அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தனியாக தொழிற்கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்க வேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ் வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தாரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர் களும் தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக்காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர். ஆனால் இப்போது தொழிலாளர்கள் விஷயத்தில் மிகுதியும் அறிவுள்ளவர் என்று சொல்லும் ஸ்ரீமான் ஜோஷி முதல் கொண்டு அதையே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதாவது சென்னையில் கூடின தொழிலாளர் மகாநாட்டுத் தலைவரான ஸ்ரீ ஜோஷி “ஒரு...

தஞ்சை ஜில்லா பிரசாரம் 0

தஞ்சை ஜில்லா பிரசாரம்

அக்கிராசனாதிபதியே! சகோதரி சகோதரர்களே! நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கிறேன். ஒரு காலத்திலும் இதுபோன்ற மக்கள் உணர்ச்சியும் எழுச்சியும் கூட்டமும் வரவேற்பு உபசாரம் முதலியதுகளும் நான் கண்டதே இல்லை. நம்முடைய எதிரிகள் “வகுப்பு இயக்கங்கள் மாண்டு விட்டன”, “வகுப்புப் போராட்டங்கள் குழிதோண்டி புதைக்கப் பட்டன”, “பார்ப்பன ரல்லாதார் கட்சி ஒழிந்து விட்டது”, “இனி நம் இஷ்டம்போல் கொள்ளை அடிக்கலாம்” என்று சொல்லுகிற காலத்தில் எப்போதும் இருந்ததை விட எண் மடங்கு அதிகமாய் நமது கட்சியினுடையவும், இயக்கத்தினுடையவும் உணர்ச்சி வலுத்து வருகிறதுடன் நமது கொள்கையை ஒப்புக்கொள்ளுவதாக புதிது புதிதான இடங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வருகின்றன. இன்றைய தினம் எனக்குச் செய்யப்பட்ட வரவேற்புகளும், ஊர்வலங் களும், வரவேற்பு உபசாரப் பத்திரங்களும் அதன் மூலம் காட்டிய உணர்ச்சி களும், ஊக்கங்களும் கண்டிப்பாக எனக்காக அல்ல என்பதையும் அது களுக்கு நான் கொஞ்சமும் தகுதியுள்ளவன் அல்ல என்பதையும் எல்லோரை யும் விட...

கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும் 0

கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்

கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும் அத னால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டுவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது பஞ்சாப் படுகொலையின் போது இராஜப் பிரதிநிதி அவர் களை திருப்பி அழைக்க வேண்டும், திரு ஒட்வியரைத் திருப்பி அழைத்து விட வேண்டும். திரு. டயரை தண்டிக்க வேண்டும் என்பதாக நாட்டாரெல் லோரும் ஒன்று கூடி காங்கிரசில், கான்பரசில் சந்து பொந்துகளில் எல்லாம் தீர்மானித்த காலங்களில், திரு ராஜப் பிரதிநிதிக்காவது, திரு ஒட்வியருக் காவது, திரு, டயருக்காவது ஒரு சிறு கலக்கமும் கவலையும் இல்லாமல் இத்தீர்மானங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோயமுத்தூர் மகாநாட்டில் “உத்தியோகம் கிடைக்காமல் ஏமாந்து போன யாரோ சிலர்” கூடி செய்தார்கள் என்று சொல்லும்படியான ஒரு திரு. கவர்னர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கவர்னரை தலையெடுக்க வொட்டாமல் இன்னம் படுக்க வைத்து விட்டது. யார் என்ன செய்தாலும் பயப்பட மாட்டோம் என்றுசொல்லிக்கொண்டு இருந்த மந்திரிகளை...

காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும் 0

காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும்

கோவை மகாநாட்டில் பார்ப்பனரல்லாதாரில் சிலர், காங்கிரசில் சேர்ந்து அதைக் கைப்பற்றி காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு செய்து வரும் கொடுமைகளையாவது செய்யாமல் தடுக்கலாம் என்பதாக பேசின காலத்திலும் எழுதின காலத்திலும் நாம் அதை ஒப்புக்கொள்ளாமல் ஆnக்ஷபித்து வந்தது யாவருக்கும் தெரிந்திருக்கலாம். நாம் ஆnக்ஷபித்த தாவது, காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை நிறுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணங்கொண்டல்ல, மற்றென்ன வென்றால், காங்கிரசை நாம் கைப்பற்ற முடியாது என்றும், காங்கிரசுக்கு நம்மில் யாராவது போனால், பார்ப்பனர்களுக்கே அதிக பலம் ஏற்படும் என்றும், எப்படியாவது அதற்குள்ள செல்வாக்கை ஒழிக்க அதிலுள்ள அயோக்கியத்தனத்தையும், அக்கிரமத்தையும் வெளியில் இருந்து கொண்டு வெளியாக்குவது தான் மேல் என்றும் சொன்னோம். பாமர மக்கள் எல்லாரும் இதை ஒப்புக் கொண்டார் களாயினும், படித்த கூட்டத்தாரில் பலரும் அரசியல் வாழ்வுக்காரரும் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அதற்காகவே நாம் வேண்டுமென்றே நடு நிலைமை வகித்ததோடு, நாம் சொன்னது சரியா தப்பா என்று அறிய...

ஜென்மக்குணம் போகுமா? 0

ஜென்மக்குணம் போகுமா?

சுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத் திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத் தோ, ஆசை வார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக்கொள்ளப்படுகிறதென்றும் பலதடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். அது போலவே இப்போது சட்டசபைத் தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்கபலம் இருக்கிறது என்பதாகக் கருதி இப்போது சட்டசபைக்கு பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள். அதாவது – முதலாவதாக தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமல்ல. இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லி தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுவிட்டு இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள். இத்தீர்மானம் கொண்டு வந்தது கோவை ஜில்லா பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரே ஆவார். கோவை ஜில்லாவில்...

சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும் 0

சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும்

சமூகத் தொண்டிற்கும் “அரசியல்” தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமூகத் தொண்டிற்கு பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப் பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம். நம்மைப் பொருத்தவரை அரசியலின் பேரால் கூடுமானவரை உழைத் தாகி விட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை. அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாச தோஷமே அல்லாமல் வேறல்ல. இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்துவிட்டு, மக்க ளுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத் தொண்டில் சேர்த்து,...

அதுவானாலும் கிடைக்கட்டும் 0

அதுவானாலும் கிடைக்கட்டும்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் பார்ப்பனருக்கு ஒரு “வஜ்ஜிரக் கோடாரி”. அதாவது தைரியமாய் யாரையும் வைவார். அப்படி வையவும் அவருக்கு சில சௌகரியமுண்டு. என்ன வென்றால் ……….. “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட்படுத்துவதானால் உலகில் மனிதனுக்கு வேறு வேலை செய்ய நேரமே கிடைக்காது” என்று வசவு கேட்போர் ஒவ்வொரு வரும் நினைக்கும்படியாகவும், “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட் படுத்தலாமா” என்று ஊரார் வையப்பட்டவரை கேட்கும்படியானதுமான ஒரு சௌகரியம் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு உண்டு. இதனால் இன்னும் வைய முடியுமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வாய்வலித்தால் மாத்திரம் வசவுத்தடை ஏற்படுமேயொழிய மற்றவர்களால் தடை ஏற்படுத்த முடியவே முடியாது. இந்த வசவைப் பார்த்து ஆனந்தப்படும் பாக்கியம் நமது பார்ப் பனர்களுக்கு யிருப்பதால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் ஒரு வஜ்ஜிரக் கோடாரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ பாவம்! “அவ்வஜ் ஜிரக் கோடாரிக்கு” அவரால் வேலை வாங்கிக் கொண்ட சுயராஜ்ஜியக் கட்சியார் சட்டசபைத் தலைவர் ஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார்கள். தொலைந்து போகட்டும் அதுதான் பார்ப்பனர்...

சிறா வயல் 0

சிறா வயல்

சகோதரர்களே! உங்கள் வரவேற்பு பத்திரத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாதானாலும், என்னைப்பற்றிய புகழுரைகள் போக மீதி உள்ள வாசகங்கள் எனது கொள் கையை தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு அதன்படி நடப்பதோடு அதை மற்று அனுபவத்திலும் கொண்டு வர தங்களுடைய சம்மதத்தை தெரிவிக்கின்றன. ஆதலால் அதைப்பொருத்தவரை வந்தனத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் ஏதோ பிரமாதமான காரியங்கள் செய்துவிட்டதாகவும், பெரும் தியாகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவ்விதமாகச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. ஜெயில் வாசத்தைப் பற்றி சொல்லியிருப் பது மிகவும் வேடிக்கையானது. ஜெயிலுக்குப் போவதனால் பெரிய கஷ்ட நஷ்டம் ஒன்று மில்லை. சந்தோஷமாகவும், சாந்தியுடனும் ஓய்வெடுத்துக் கொள்ள மனிதனுக்கு ஜெயிலை விட வேறு இடம் இல்லை. ஜெயிலில் இருக் கிற காலம் வரை வெளியில் தொண்டு செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறதே என்கிற ஒரு கவலை தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஆனால் வெளியில் வந்தால் முன்னிலும் அதிகமாக வேலை செய்யக்கூடிய ஆற்றலும் எழுச்சியும்...

எங்கும் பார்ப்பன ஆதிக்கமே 0

எங்கும் பார்ப்பன ஆதிக்கமே

கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக் காக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலூகா போர்டிலும் பிராமண ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ எல்லா உத்தியோகங்களையும், பார்ப்பனர்களே வெகுகாலமாகக் கொள்ளை யடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது. பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையாலேயேதான் நம் நாட்டில் பார்ப் பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின் பார்ப்பனருக்கு இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக்கூடாது. பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு சர்க்காரிலுங் கூட ஆதரவு காட்டிவந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்க நமது ஜில்லா லோகல் போர்டு ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்களே தலைவர்களாயிருந்தும், இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அநியாயமாகும். பார்ப்பனரல் லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு லாயக்கில்லை யென்று போர்டார் நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை....

மதுரைத் தீர்மானங்கள் 0

மதுரைத் தீர்மானங்கள்

மதுரைத் தீர்மானத்தைப்பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர் களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பன ரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை முதலியவை மாத்திரமல்லாமல் நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையும், விடுதலையும், செல்வமும் அத்தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன. அவை மாத்திரமல்லாமல் நமது அரசியல் முறையில் கட்டுண்டு அனுபவித்து வரும் கொடுமைகளுக்கும் நிவர்த்தி மார்க்கம் அவற்றிலேயே அடங்கியிருக்கின் றன. அன்றியும் நாம் நம் நாட்டு மக்கள் என்றே சொல்லிக் கொள்ளும் பார்ப்ப னர்களால் மிதிக்கப்பட்டு அனுபவித்து வரும் இழிதகைமைகளிலிருந்து மீளும் நெறியும் அவற்றிலேயே அடங்கிக் கிடக்கின்றது. இன்னமும் இவை போன்ற மக்களின் நாட்டின் கோடிக்கணக்கான கொடுமைகள் என்னும் வறுமை முதலிய வியாதிகளுக்கும் ‘சஞ்சீவி’ என்று சொல்லத்தக்கதேதான் நமது காந்தியடிகள் இந்தியாவின் எல்லாக் குறைகளும் நீங்குவதற்காக கண்டுபிடித்த “பர்டோலி தீர்மான”மாக்கும் நமது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்

காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும் அது முதல் வேறு தனிப்பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும். அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும் ராமனாதனும் அனுப்பிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர் மகாநாட்டில் பிரேரேபிக்கக் கூட அனுமதிக்காமல் சட்டத்தின் பெயரைச் சொல்லி தள்ளிவிட்டதினாலேயே மேற்கூறியவர்கள் வெளியேறினார்கள் என்பது ³ மகாநாட்டிற்குப்பிறகும், ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு ஆகியவர்கள் அவ்வகுப்புவாரி உரிமைக்கு விரோதமாய் பிரசாரம் செய்ததும் சில இடங்களில் ஆதரித்ததும் ஆகிய காரியங்களும் நேயர்களுக்குத் தெரியும். கடைசியாக கோவை மகாநாட்டில் வகுப்புவாரி உரிமையை அடிப்படையாகக் கொண்ட காங்கிரசுக்கு நம்மை அழைத்ததும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தை ஏற்றுக்கொண்டதும் வாசகர்களுக்குத் தெரிந்ததே. இப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புது ஆதரவு. அதாவது நமது நாட்டிற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் எந்த வகுப்பார் தங்களுக்கு...

செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு 0

செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு

நம்நாட்டு பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலை நிறுத்த ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஆயுதங்களான மதத்தின் பேரால் வேதம், சாஸ்திரம், புராணம், சடங்கு, கோயில், தீர்த்தம், யாத்திரை, மடாதிபதி, குருக்கள், புரோகிதன் என்பவை போன்ற புரட்டுகளைப்போலவே, அரசியல் பெயரால் காங்கிரஸ், சுயராஜ்யம், ஒற்றுமை,தேசீயம், உரிமை அதிகாரத்தில் பங்கு, ஆங்கிலப்பள்ளிக் கூடம், வக்கீல்வேலை, நியாயஸ்தலங்கள் முதலிய புரட்டுகளையும் உற்பத்தி செய்துகொண்டு அதன் மூலமாகவும் நம்மையே ஏமாற்றி அடிமைப்படுத்தி ஆதிக்கம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் என்ப தைப்பற்றி இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். நமது மக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஆயுதங்களை உபயோகப்படுத்தும்போது நமது பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரான நமது சமூகத்தாரையே அடிமை களாக்கி அவர்களைக் கொண்டே அவர்கள் மூலியமாகவே நம்மீது பிரயோ கித்து வருகிறார்கள் என்பதைப் பற்றியும் பல தடவைகளில் எழுதி வந்திருக் கிறோம். அந்த விஷயங்களை வாசகர்கள் அனுபவத்தில் உணர்வதற்கு அடிக்கடி நிகழும் பல சம்பவங்களை எடுத்துக்காட்டியும் வந்திருக்கின்றோம். அப்பேர்ப்பட்ட அனுபவ நிகழ்ச்சிக்கு உதாரணத்தை...

யாருக்கு புத்திவந்தது? 0

யாருக்கு புத்திவந்தது?

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக் கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கு இப்பொழுது தான் புத்திவந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள். இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் கதரைக் கட்டாயமாக உடுத்த வேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது. பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும் போது கட்டிக் கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள் மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக் கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லாரும் கதர் கட்டி விடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும் கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப் பனர்கள் ஒரு...

பார்ப்பனர்களின் ஒற்றுமை 0

பார்ப்பனர்களின் ஒற்றுமை

கொஞ்ச நாளைக்கு முன் இந்தியாவிலிருந்து இந்தியர்களின் ஊழிய ராகவும், ஒரு இந்தியராகவும், இந்துவாகவும் உள்ள ஸ்ரீமான் சர்.டி. விஜய ராகவாச்சாரியார் இந்திய பிரதிநிதியாக கனடாவுக்கு அனுப்பியதும் அங்கு போய் தென்னை மரம் இருக்கும் வரை குடித்துத்தான் தீருவோம். பிரிட்டி ஷாரின் ஆதிக்கத்தையே இந்தியர்கள் விரும்புவதோடு, இதைக் கடவுள் அனுப்பியதாக இந்தியர்கள் பாவிக்கிறார்கள் என்றும், ஆங்கில நாகரீகத் தையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு உதாரணமாக எனது குமாரத்தியே தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் சொன்னதாக பத்திரிகைகளில் வந்தது ஞாபகமிருக்கும். அதையே ஸ்ரீமான் சு.மு. ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு திருப்பூர் முனிசிபல் சங்கத்தார் வரவேற்புப் பத்திரம் வாசித்துக்கொடுத்த காலையில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எடுத்துச்சொல்லி நமது ஸ்ரீமான் செட்டியார் அப்படிப் பேசாமல் சுதந்திரத்தோடும் ஆண்மையோடும் பேசினதாக குறிப்பிட்டிருந்தார். இதை மறுப்பதற்கு, இதில் யாதொரு சம்பந்தமும் இல்லாதவரும் இன்னமும் ஒத்துழையாதாரென்று வேஷம் போட்டுக்கொண்டிருப்பவ ருமான ஸ்ரீமான் ஊ. இராஜகோபாலாச்சாரியார் மகாத்மாவின் “யங்...

பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும் 0

பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்

இம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார் கள். ஆனால், ஸ்ரீமான் ஞ.கூ. ராஜன் அவர்கள் சென்னையிலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும் அதற்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்ப தாலும் குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவதை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலூகா, கான்பரன்சுகள் கூடப் போவதாகவும், பல இடங்களில் பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்லா தார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால், ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை தெரிவித்துக்...

காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம் 0

காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம்

இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட் டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என அறிகிறோம். சென்ற வருடக் காங்கிரசுக்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான். சீனி வாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்கு செலவு செய்தது போல் பணம் கொடுக்காவிட்டாலும் டாக்டர். அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்ட தான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக்கொண்ட பிறகுதான் நமது பார்ப்பன “தேச பக்தர்கள்” என்போர்கள் டாக்டரை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். அந்த விலை எது என்றால் அதுதான் “மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டியதில்லை” என்று சொன்னதாகும். டாக்டர். அன்சாரி அவர் கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாக சொல்வதை மற்ற மகமதி யர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி நமது பார்ப் பனர்களுக்கு அவசியமில்லை. எப்படியாவது அவர் காரியத்தை சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும். இப்போது ஸ்ரீமான்கள் ஒரு கந்தசாமி செட்டியாரையும், ஒரு முத்துரங்க முதலியாரையும், ஒரு குப்புசாமி முதலியா...

பார்ப்பனரின் அரசியற் புரட்டு 0

பார்ப்பனரின் அரசியற் புரட்டு

இரட்டை ஆட்சியும் வகுப்பு வாதமும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஒழிந்ததா? அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா? என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப் பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். ஒத்துழையாமை என்பது மும்மர மாய் இருந்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகளின் மூலம் அதை ஒழிப்பதற்கு பிரயத்தனப்பட்டது வாசகர்கள் அறிந்ததுதான். அதாவது கல்கத்தா தனிக் காங்கிரசின் போது தெருவில் போகும் பிச்சைக் காரரையெல்லாம் பிடித்து அவர்களுக்கு நாமம் போட்டு சென்னை மாகாணப் பிரதிநிதி என்று ஏமாற்றி ஆள்களைச் சேர்த்தும் அங்கும் தோற்றுப் போனதும், சென்னையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், காரியதரிசி களாகவும், இருந்த பார்ப்பனர்களான ஸ்ரீமான்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார் , ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் ராஜீநாமாக் கொடுத்து வெளியேறி ஒத்துழையாமையையும், மகாத்மாவையும், வாய் கொண்ட மட்டும் வைதும், பழி சுமத்தியும் பார்த்தும் முடியாமல் போனதும், அட்வொ கேட் ஜெனரலாயிருந்து மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அதை ராஜீனாமாக் கொடுத்து...

மந்திரிகளின் நிலை 0

மந்திரிகளின் நிலை

கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சி அழியும் வரை மந்திரி முதலிய உத்தியோகம் ஒப்புக்கொள்ளுகிறதில்லை என்கிற தீர்மானம் செய்யப்பட்ட வுடன் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. எதனாலென்றால் மதுரை மகாநாட்டிலேயே “இந்த சட்டசபை உள்ள வரை மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவதில்லை” என்று தீர்மானித்திருந்தும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்து வந்தார்கள். அதற்கு உண்மை யான காரணம் “இந்த மந்திரி சபையை ஆதரிப்பதின் மூலம் பார்ப்பனரல்லா தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளால் சென்ற 6 வருட காலமாய் ஏற்பட்ட நன்மைகளையும், முற்போக்குகளையும் ஒழித்து பழையபடியே அரசாங்க பதவிகளையும், மற்றுமுள்ள ஸ்தாபனங்களையும், பார்ப்பன அக் கிரகாரத்திற்கே சுவாதீனமாக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் மேல் அதை ஆதரித்து வந்ததோடல்லாமல்” “ஜஸ்டிஸ் கட்சியார் இந்த கவுன்சிலில் மந்திரி உத்தியோகம் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், அடுத்த கவுன்சிலிலாவது உத்தியோகம் பெற்றுக் கொள்வார்களாதலால் நாங்கள் தற்கால மந்திரிகளை ஆதரிக்கிறோம்” என்று (ஓணாய் ஆட்டுக்குட்டி கதைபோல்) சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சொல்லுவதன் மூலம் இன்னும்...

பிறப்புரிமையும் அதன்  தடைகளும் 0

பிறப்புரிமையும் அதன் தடைகளும்

மனிதப்பிறவி பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக்கொண்டது மனிதனுடைய பிறப்புரிமை என்பது தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத்தான் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். “கொடுமை கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை” என்பது எனது தாழ்மையான அபிப் ராயம். உலகில் உள்ள ஜீவகோடிகளில் எல்லாவற்றினும் மனிதப்பிறப்பே மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும் மனிதராகப் பிறப்பது மிகவும் கொடியது என்பதும் மனிதனைப்போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வ ளவோ சந்தோஷத்துடனும் அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ் வதை நாம் பார்க்கிறோம். அவைகளில் சிலவற்றிற்கு கஷ்டமும் அந்நியரால் கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும் மனிதனைப் போல் உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை...

நமது வேலை 0

நமது வேலை

“குடி அரசு” பத்திரிகை தோன்றி 27 மாதங்கள் ஆகின்ற தெனினும் அதன் மூலம் தேசத்திற்கும் சமூகத்திற்கும் நமக்கு சரி என்று தோன்றிய வழியில் நம்மால் கூடிய தொண்டை ஆற்றி வந்திருக்கிறோம் எனினும் செய்யவேண்டிய வேலை எவ்வளவோ பாக்கி இருக்கிறது. முன் ஒரு சமயம் நாம் எழுதியதுபோல் “குடி அரசு” பத்திரிகை வேலை மாத்திரம் அல்லாமல் அதன் கொள்கையைப் பரப்ப மக்கள் மனதில் பதியச் செய்ய ஊர் ஊராய் திரிந்து பிரசாரமும் செய்ய வேண்டிய பொறுப்பு இனியும் எவ்வளவோ மடங்கு அதிகமாயிருந்து வருகிறது. கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குள் இனி அபிப்பிராய பேதம் இருக்காது என்றும், பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்போர்களும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நமது கொள்கைகளை பிரசாரம் செய்யும் என்றும், நமக்கும் போதிய ஓய்வு கிடைக்கும் என்றும், பல நண்பர்கள் கருதினார்கள். இப்போது அவைகள் ஒரு வினாடி கனவு போலவே முடிந்து விட்டது. பார்ப்பன ரல்லாதார் கக்ஷியிலேயே யார் யாரை நமது...

ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல் – சித்திரபுத்திரன் 0

ஈரோட்டில் புதிய ஹைஸ்கூல் – சித்திரபுத்திரன்

ஈரோட்டில் மகாஜன ஹைஸ்கூல் என்பதாக ஒரு பள்ளிக்கூடம் பல பெயர்களுடன் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. இது இருக்கும் போதே லண்டன் மிஷின் என்கிற ஒரு கிருஸ்தவ மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மேல்கொண்டு ஒரு ஹைஸ்கூலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாக ஆரம்பித்தர்கள். அந்த மிஷின்காரர் தங்களது செல்வாக்கால் கல்வி இலாக அதிகாரிகளையும் நீதிநிர்வாக இலாகா அதிகாரி களையும் கொண்டு தங்களாலான உபத்திரவமெல்லாம் செய்து பார்த்தும் மேற் படி மகாஜன ஹைஸ்கூலை அசைக்க முடியவே இல்லை. சில பையன் களுக்கு சம்பளத்தைக் குறைத்தார்கள். பையன்கள் பெற்றோர்களுக்கு அரசாங்கத்தில் சிபார்சு செய்து உத்தியோகம் வாங்கிக்கொடுப்பதும் கௌரவ உத்தியோகம் செய்வித்துக் கொடுப்பதும், ஆண்பிள்ளைகள் வகுப்புக்கு பெண்களை உபாத்தியாயர்களாக வைப்பதும், உள்ளூர்கட்சி பிரதிகட்சிகளில் கலந்து கொண்டு கட்சிக்கு விரோதமாய் மற்றொரு கட்சிக்கு அனுகூலமாக உண்மையற்ற விஷயங்களை கோர்டில் சாட்சி சொல்லுவதும் இன்னும் எவ்வளவோ கூடா ஒழுக்கமான காரியங்களை எல்லாம் செய்து பார்த்தார்கள். எவ்வளவு...

கோவை மகாநாடு 0

கோவை மகாநாடு

தலைவருக்கு :- கோவை மகாநாடு ஜில்லா மகாநாடாக கூட்டுவதா யிருந்த காலத்தில் முதல் முதல்ஸ்ரீமான் குமாரசாமிரெட்டியாரவர்கள் பெயரை வரவேற்புக் கமிட்டிக்கு சொன்னவுடன் வெகு குதூகலமாக ஏற்றுக்கொண் டார்கள் என்றும், ஸ்ரீமான்கள் ரெட்டியாரவர்களுக்கு எழுதினவுடன் தேசத் திற்கு ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடனைச்செய்யும்படி கூப்பிடும் போது தான் எவ்விதத்திலும் ஆnக்ஷபனை சொல்லுவதில்லை என்று சொல்லி ஒப்புக்கொண்டார்கள். மறுபடி இது மாகாண மகாநாடாய் மாறினவுடன் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள்தான் ஜில்லா மகாநாடென்று ஒப்புக் கொண்டதா கவும் இப்போது மாகாண மகாநாடாய்விட்டதால் வேறு யாரையாவது தெரிந்தெடுத்துக்கொள்ளும்படி எழுதிவிட்டாறென்றும் மறுபடி சென்னை தென்னிந்திய நலஉரிமைச்சங்கமும் வரவேற்புக் கமிட்டியும் ஸ்ரீமான் ரெட்டி யாரவர்களையே வேண்டிக்கொண்டதாகவும், அவர் யாதொரு தடையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாறென்றும் சட்டசபையில் ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளியாக்கிவிட்ட வீரர் என்றும் மற்றவர்களைப் போல் அவர் படாடோபம் செய்து கொள்ளாமல் அடக்கத்திலிருப்பவர் என்றும் இம்மகாநாடு நடத்தும் விஷயத்தில் யாதொரு பிரயாசையும் எடுத்துக் கொள்ளாமல் தனது...

மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும் 0

மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்

இம்மாதம் நடந்த மகாநாடுகளில் உபசரணை அக்கிராசனர். மகா நாட்டுத் தலைவர் ஆகியவர்களின் பிரசங்கங்களைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அநுகூலமாய் பேசியவற்றையும் பேசினவர்களையும் புகழ்ந்தும் அதற்கு விரோதமாய் பேசியவர்களை இகழ்ந்தும் எழுதியிருக்கின்றன என்றாலும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகை களில் பெரும்பாலும் தங்களுக்கென கொள்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாமல் அவற்றையே பின்பற்றித் திரிகின்றன. இதற்காக பொதுமக்கள் பணமும் நேரமும் எவ்வளவு வீணாய்போகிறதென்பதைக் கவனிப்பவர்களுக்கு துக்கம் ஏற்படாமலிருக்க முடியாது. சிலபத்திரிகைகள் “பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர் ஒத்துழைப்பைப்பற்றி பேசிவிட்டார். ஆதலால் பார்ப்பனரல்லாதாருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது” என்பதாக அளவுக்கு மீறி துக்கப் படுவதாகவும் வெட்கப்படுவதாகவும் வேஷம் போட்டிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களில் சிலர் அதாவது மாதம் 5000, 10000 சம்பளம் வாங்கியவர் களும் தங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு முதல் சர்க்காரில் மாதம் 500, 1000, 2000, 3000 உத்தியோகம் பெற்று கொள்ளை அடிக்கிறவர்களும் ஒன்று சேர்ந்து மிதவாத மகாநாடு என்பதாகக் கூட்டி “சர்க்காரோடு ஒத்துழைக்க வேண்டும். தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும்...

சத்தியாக்கிரகம் 0

சத்தியாக்கிரகம்

சத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரி கைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதிவந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீ அவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதி பர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக. குடி அரசு – குறிப்புரை – 10.07.1927

கோயமுத்தூர் டவுன் ஹாலில் மாபெருங்கூட்டம் 0

கோயமுத்தூர் டவுன் ஹாலில் மாபெருங்கூட்டம்

சகோதரர்களே! என்னைப்பற்றி ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அதிகமாக கூறிவிட்டார். என்னை தங்களது இயக்கத்தின் தலைவர் என்றும் நான் சொல்லுகிறபடியே நடக்கப் போவதாகவும் சொன்னார். இவ்விஷயம் எனக்கு மிகவும் வெட்கத் தையும் பயத்தையும் கொடுக்கிறது. ஒரு காலத்திலாவது நான் தலைவனாய் இருந்ததே கிடையாது. தலைமைத்தனமும் எனக்குத் தெரியாது. அதற் குண்டான குணங்களும் என்னிடத்தில் இல்லை. நான் ஒரு தொண்டனாகவே இருந்து வர பிரியப்படுகிறேன். எனக்கு தொண்டு செய்வதில் அதிக ஆசை இருக்கிறது. ஆதலால் என்னை ஒழுங்கான வழியில் நடத்தி என்னிடம் சரியானபடி வேலை வாங்கிக்கொள்ளுங்கள். நேற்றைய மகாநாட்டில் தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தார்களில் இஷ்டப்பட்டவர்கள் காங்கிரசில் சேரலாமென்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இவ்வித தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமே நமக்கு ஏற்பட்டிருக் கவில்லை. தெ. இ. ந. உ. சங்கத்தாரில் தனிப்பட்ட நபர்கள் காங்கிரசில் சேர்வதை இச்சங்கத்தின் எந்த விதியும் தடுப்பதில்லை. காங்கிரசில் சேர்ந்தவர்களும் ஏற்கனவே இதிலிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்....

பார்ப்பனர் விஷமப் பிரசாரம் 0

பார்ப்பனர் விஷமப் பிரசாரம்

மதுரை முனிசிபல் சேர்மனுக்குµ 1க்கு ரூ. 900 சம்பளம் கவுன்சிலர் களால் நிர்ணயிக்கப்பட்டவுடன் அச்சேர்மென் ஒரு பார்ப்பனரல்லாதாரா யிருப்பதோடு பார்ப்பனர்களின் தாளத்திற்குத்தகுந்தபடி ஆட மறுப்ப வராயிருப்பதால் நமது பார்ப்பனர்கள் ஒப்பாரி வைத்தழுது கூச்சல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மதுரை முனிசிபாலிட்டி யானது சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் லக்ஷத்து நாற்ப தினாயிரம் ஜனத்தொகையும், சுமார் 3. 4 லக்ஷ ரூபாய் வரும்படிக்கு மேற் பட்டதுமான பெரிய முனிசிபாலிட்டி. அதன் சேர்மென் ஸ்ரீமான் ஆர்.எஸ். நாயுடு பாரிஸ்டர் பரீiக்ஷ தேரினவரும் பாரம்பரியமாய் பெரிய குடும்பத் தைச் சேர்ந்தவருமான ஒரு கண்ணியமான கனவான். மதுரை மகா ஜனங் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அவரது வேலையையும் மதுரைப் பட்டணத்தின் நிலைமையையும் உத்தேசித்து பெரும்பான்மையான கவுன்சிலர்களால் µ 1க்கு ரூ. 900 கொடுக்க வேண்டும் என்று அபிப்பி ராயப்பட்டு அந்தப்படி தீர்மானித்து இருக்கிறார்கள். இதனால் பொறாமை கொண்ட பார்ப்பனர்களிற் சிலர் தங்கள் ஜாதிப்...

கோவை மகாநாட்டின் முடிவு 0

கோவை மகாநாட்டின் முடிவு

சிறிது காலமாய் நமது மக்கள் இடையில் பிரஸ்த்தாபப்படுத்திக் கொண்டிருந்த கோவை மகாநாடு முடிவு பெற்றுவிட்டது. இதனால் நமது நாட்டுக்காவது சமூகத்திற்காவது ஏற்பட்ட பலன் என்ன என்று யோசிப்போமானால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லி ஆக வேண்டும். தீர்மானத்தின் வாசகங்கள் சர்வ ஜாக்கிரதையாக அமைக்கப் பட்டிருந் தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எவ்வளவு சாமார்த்தியமுள்ளதாயிருந்தாலும் தீர்மானத்தின் பலன் நமது முன்னேற்றத்தை தடுத்து விட்டதென்றே சொல்லுவேன். தீர்மானத்திற்குப் பிறகு இந்த ஒரு வாரத்திற்குள் மக்கள் நிலைமையும் மனப்பான்மையையும் பார்க்கும் போது பொது ஜனங்களுக்குள்ளாக ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்கிற உணர்ச்சி பரவுவதற்கு ஆதாரங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த உணர்ச்சிக்கு நமது பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் ஒரு புறமிருந்தாலும், இப்போது நம்முடன் வந்து புதிதாக சேர்ந்தவர்கள் தங்களது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள இம்மாதிரி திரித்து கூற வேண்டிய தவசியமாயிருந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ளவர்களின் மனப்பான்மை யும் நடத்தையுமே முக்கிய காரணமாயிருக்கிறது என்பதையும் நான்...

நல்ல இடி 0

நல்ல இடி

சேலம் பார்ப்பனருக்கும் அவர்களது வால் பிடித்துத் திரிபவர்களுக் கும் நமது முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் நல்ல இடி கொடுத்ததாக தெரிந்து நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். ஆனாலும் காண்டா மிருகத்தோல் படைத்த அப்பார்ப்பனருக்கும் அவர்களது அடிமைகளுக்கும் அது கொஞ்சமாவது சொரணை உண்டாகுமா என்பதுதான் நமது கேள்வி? அதாவது கனம் சுப்பராயனவர்களை சேலம் பார்ப்பனர்கள் தங்கள் டிக்கட் பாக்கட்டில் போடுவதற்காக “லிட்டரரி சொசைட்டி” என்கிற ஒரு பார்ப்பனக் கூட்ட நிலையத்தில் ஒரு கூட்டம் கூட்டி அவரை வானமளாவப் புகழ்ந்தும் இதற்கு முன் மந்திரியாய் இருந்தவர்களை ஆசைதீர வைதும் பேசினார்களாம். இதற்குப் பதிலளிக்குமுகத்தான் கனம் சுப்பராயன் இம்மாதிரி ஒருவரை, உத்தியோகம்விட்டுப் போனபின் வைவது இழிவு என்றும், நாளைக்கு என்னையும் இப்படித்தான் வைவீர்கள் என்றும், இப்படிச் செய்வது உங்களுக்கு யோக்கியதை அல்ல வென்றும் சொன்னாராம். வைததில் பெருமை கொண்டவர்களும் வைததைக் கேட்டு ஆனந்தம் கொண்டவர் களும் வெட்கித் தலைகுனிந்தார்களாம். இதோடு இந்தப் புத்தியை விட்டு...