ஸ்ரீ வரதராஜுலுவின் வண்டவாளம் – I
மாயவரம் மகாநாட்டைப் பற்றி ஸ்ரீ வரதராஜுலு நாயுடு செய்த சூழ்ச்சி களைப் பற்றியும், அதுகள் பலிக்காமல் மகாநாடு செவ்வனே நடந்தேறிய பிறகும் அம்மகாநாட்டைப் பற்றியும், அதில் நிறைவேறிய தீர்மானங்களைப் பற்றியும் பொறாமை கொண்டு குரோத புத்தியோடு கண்டித்து எழுதிய பான் மையைப் பற்றியும் சென்ற வாரம் விபரமாக ஒவ்வொரு விஷயமாய் பிரித்து பிரித்து எடுத்துக் காட்டி பொது மக்களுக்கு விளங்கும்படி தக்க சமாதானமும் எழுதியிருந்தோம். அதற்கு பதில் என்கிற முறையில் “தமிழ்நாடு” பத்திரி கையில் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு நாம் எழுதியதில் ஒரு வரியாவது எடுத்துப் போட்டு அதற்கு சரியான சமாதானமாக ஒரு வரியாவது எழுதுவதற்கு யோக்கியதை இல்லாமல் போனதோடு பயங்கொள்ளித்தனமாய், “நய வஞ்சகம்,” “கடைசி வார்த்தை” என்ற தலைப்புகளின் கீழ் “பழைய விரோதம்,” “வெகுநாளைய கெட்ட எண்ணம்” என்கிற வார்த்தைகளைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொண்டு, அதுகளை சரணாகதி அடைந்து தப்பிக்கப் பார்க்கிறார். “நாயக்கரின் நயவஞ்சகம்,” “பழைய விரோதம்,” “வெகு...