ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று ஐரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார் கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார். நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார் கள். ஆகவே அவர் அவ்வளவு தூரம் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகின்றது. இப்படி ஐரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும் வரவேற்றுக்கொண்டாடத்தக்க வராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான ஐரோப்பியரல்லாத – பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அரிசி பதம் பார்த்தால் போதும் அல்லவா?

குடி அரசு – கட்டுரை – 30.10.1927

You may also like...

Leave a Reply