சந்தேகம் உறுதியாய் விட்டது
ஸ்ரீமதிகள் துரைகண்ணு அம்மாள், பார்வதியம்மாள் ஆகிய இரு பெண்கள் பெயரால் பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்கு கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்பிரசாரமும் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்தவு டனேயே இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆண்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரியென்று மெய்ப் பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால் சுயராஜ்ஜி யக் கக்ஷி உயிர்நிலையான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆnக்ஷபங் களை பொது ஜனங்கள் லக்ஷ்யம் செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின் றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.11.1927