ஆதித்திராவிட மகாநாடு

காட்பாடிக்கடுத்த பிரம்மாபுரம் என்கிற ஊரில் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஆ. ஊ. ராஜா ஆ.டு.ஹ. அவர்கள் அக்கிராசனத்தின் மீது கூட்டப்பட்ட ஆதிதிராவிட மகாநாட்டில் தலைவர் செய்த உபந்யாசத்தின் முக்கிய நோக்கத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தி சாம்பலாக்க வேண்டும் என்பதாகப் பேசியிருப்பதுடன் அதை பறிமுதல் செய்யவேண்டும் என்று தீர்மானமும் செய்திருப்பதானது அச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சுயமரியாதையை விளக்குகிறது. தவிர வீதியில் நடக்க உரிமை வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கும் தீர்மானமும் அது போன்ற மற்றும் மனித உரிமை கேட்கும் தீர்மானமும் இந்த நாட்டில் மக்கள் சுய மரியாதையடைவதற்கு தகுந்த யோக்கியதை இல்லையென்று காட்டுவதற்கு உதவியாயிருக்கின்றது. எனவே சுயமரியாதை பெற்ற பிறகுதான் சுயராஜ்யம் என்பதைப்பற்றி யோசிக்க இடமுண்டு என்பதற்கு இந்த ஆதிதிராவிட மகாநாடே போதுமான அத்தாக்ஷியாகும் என்பது நமது அபிப்பிராயம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 30.10.1927

You may also like...

Leave a Reply