சர்.சி.பி. அய்யரின் விஜயம்

சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித் தனங்களும் போலீசாரின் அலக்ஷியமும், சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியும் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜினிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழைய படி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பலவந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத்தெரு விலும் மூர் மார்க்கட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரியவில்லை. “முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக் குத்தான் கேடு, வாழை முள்ளின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு” என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத் தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப் பட்டாலும் பார்ப்பனரல்லா தாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள்.

குடி அரசு – சிறு குறிப்பு – 24.10.1926

You may also like...

Leave a Reply