அருஞ்சொல் பொருள்
அசார்சமாய் – பொருட்படுத்தாமல்
அசூயை – அவதூறு, பொறாமை
அஞ்ஞானம் – அறியாமை
அபகீர்த்தி – இகழ்ச்சி
அபயம் – அடைக்கலம்
அமயம் – பொழுது, உரிய காலம்
அருமைக்காரர் – கொங்குவேளாளர் சமூகத்தில் மண விழாவை நிறைவேற்றும் அதே சமூகத்தைச் சார்ந்த ஒருவர்
ஆக்குப்புரை – சமையற்கூடம்
ஆஸ்தபம் – இடம், பற்றுக்கோடு
இச்சகம் – நேரில் புகழ்தல்
இடை – எடை
இத்துணை – இவ்வளவு
இரங்குதல் – ஈடுபடுதல்
இரக்ஷhபந்தனம் – மந்திராட்சர யந்திரக் காப்பு
ஈனஸ்திதி – இழிநிலை, கீழ்நிலை
உபசரணை – வரவேற்பு
உளைமாந்தை – கடுமையான நோய், உட்புண்
கர்ணகடூரம் – செவிக்கு கடுமையாக
காமியர் – காமவேட்கையுள்ளவர்
காயலா – காய்ச்சல், உடல்நலக்குறைவு
காலகதி – காலப்போக்கு, விதி
குச்சு புகுந்து – சேலையின் முன் மடியை இழுத்து
குலாம் – அடிமை
கும்பகோணம் வேலை – சூழ்ச்சி செய்தல், மோசடி செய்தல்
சங்கதன் சுத்தி – மதம் மாறியோரை மீண்டும் இந்துக் களாக்கும் சடங்கு
சம்ரம்மாக – களிப்பாக, நிறைவாக
சமாராதனை – பார்ப்பனருக்கு உணவளித்தல்
சர்க்கா – கை இராட்டினம் ( நூல் நூற்பது )
சல்லா – மெல்லிய துணி
சிசுஹத்தி – கருச்சிதைவு
சிரார்த்தம் – இறந்தோர்க்குச் செய்யும் சடங்கு
சிலாகித்தல் – புகழ்தல்
சுற்றுத்திரவு – சுற்றறிக்கை
சூசனை – குறிப்பு
தத்தம் – ஈகை, கொடை
தத்தாரிகள் – கண்டபடி திரிவோர்
தத்துக்கும் – பாய்ச்சலுக்கும்
தர்ப்பணம் – தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
பிதிரருக்கும் நீர்க்கடன்
தவக்கப்பட்ட – தாமதம், தடைபட்ட
தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு
தாயாதி – ஒருகுடியில் பிறந்த உரிமைப் பங்காளி
திருப்பாட்டு – வசைச் சொல்
தின்மை – தீமை
தீர்க்க திருஷ்டி – தொலை நோக்குப் பார்வை
துராசாரம் – ஒழுக்கக் கேடு, தீயொழுக்கம்
தூர்த்தகன் – காம வெறியன், கொடியோன்
தூஷi(ன)ண – பழி, இகழ்ச்சி
தோமர்கள் – கூட்டத்தார்
நடை முதல் – நடப்பிலுள்ள ஆண்டு
நசித்து – அழித்து
நிஷ்டூரம் – கொடுமை
பஞ்சாங்கத்திற்கே – புரோகிதத் தொழிலுக்கே
பங்கா – கூரையில் தொங்கவிடப்பட்டு வெளி யில் இருக்கும் ஆள் கயிற்றை இழுக்க விசிறிபோல் காற்றை வீசும் ஓர் அமைப்பு
படிற்றொழுக்கம் – காமம்
பரிசாரகம் – ஏவற்றொழில், சமையல் தொழில்
பரோபகாரம் – பிறர்க்குச் செய்யும் உதவி
பறபறக்கும் – மிக விரைதல்
பக்ஷபாதங்கள் – ஒரு தலைச் சார்பாக
பாப்பர் – பொருளிலி, இல்லாதவன், நொடித்தவன்
பாராயணம் – முறைப்படி ஓதுதல்
பரிசாரகன் – சமையற்காரன், ஏவற்காரன்
பாரியாள் – மனைவி
பாஷாண்டி – சமய நூல் வல்லோன்
பாச(ஷ)hணம் – நஞ்சு
பிரத்தியக்ஷத்தில் – காட்சியில், காட்சியளவில்
பிரஸ்தாபித்தல் – அறிவித்தல்
பீஸாப்பிடாமல் – வழி வழி உரிமையாகாமல்
பிரீதி – விருப்பம், விழைவு, அன்பு
பூளவாக்கை – தகுதி
மரித்தல் – இறப்பு
மிட்டா – வட்டார ஆட்சியாளன்
ஜன்மிகள் – நிலவுடைமையாளர்கள்
லூச்சாத்தனமாக – கீழ்த்தரமாக
மாதுரு துரோகி – தாய்க்கு இரண்டகம் செய்வோன்
மாதுரு காமி – தாய்மீது காமுறுவோன்