சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சி என்பதற்கு உதாரணம்

சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாக வடநாட்டில் லாலா லஜபதிராயவர் களும் பண்டித மாளவியா அவர்களும் வேலை செய்து வருவது உண்மை. ஆனால் சுயராஜ்யக் கட்சியார் தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு ஆட்களை நிறுத்தியதில் லாலா லஜபதிராயவர்களுக்கு விரோதமாய் மாத்திரம் நிறுத்தி யிருக்கிறார்களே யொழிய பண்டித மாளவியாவுக்கு எதிரியாய் யாரையும் நிறுத்தவேயில்லை. இதன் காரணம் என்னவென்றால் லாலாஜி வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கையும் கவலையும் இல்லாதவர்; பண்டிதரோ வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிரந்தரப்படுத்தவே ஒவ் வொரு நிமிடமும் உயிர் வாழ்பவர். ஆதலால் பண்டிதருக்கு எதிரியில்லா மல் செய்துவிட்டு லாலாஜிக்கு மாத்திரம் எதிரியை நியமித்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர் கட்சி என்பதற்கு புத்திசாலிகளுக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 07.11.1926

You may also like...

Leave a Reply