காங்கிரஸ் தலைவியாகிய ஸ்ரீமதி சரோஜினி தேவியின் வாக்கு “ஜஸ்டிஸ் கட்சியை நான் வரவேற்கிறேன்”

“நான் தென்னிந்திய பார்ப்பனர்களின் யோக்கியதையை நன்றா யறிவேன். அப்பொல்லாப் பார்ப்பனர்களின் கொடுமையினால்தான் பார்ப்பன ரல்லாதாரியக்கம் உண்டாக வேண்டியதாயிற்று. அவர்கள் தங்களை உயர் வாய்க் கருதிக்கொள்ளும் அகம்பாவத்தை நான் பலமாய் வெறுக்கிறேன். பார்ப்பனரல்லாதாரியக்கம்தான் எல்லா வகுப்பாரும் சமமாய் முன்னேற் றமடைவதற்கு உதவியாயிருக்கிறது. எல்லா வகுப்பாருக்கும் சமமான உரிமை பங்கு கிடைக்குமட்டும் இந்த பார்ப்பனரல்லாதாரியக்கம் (ஜஸ்டிஸ் கட்சி) உயிருடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆதலால் இந்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை (ஜஸ்டிஸ் கட்சியை) நான் மனப்பூர்வமாய் வரவேற்கிறேன். பார்ப்பனரல்லாதார் தங்களுடைய நிலை மையை அறிந்து நியாயமான உரிமை பெறுவதற்கு இது சமயம் விழித்துக் கொண்டதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என பெல் காமில் 1924-´ கூடிய அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸ் மஹா நாட்டில் தேசீய காங்கிரஸ் தலைவியான ஸ்ரீமதி சரோஜினி தேவியே பேசி யிருக்கிறார் களென்றால் மற்றபடி அதன் பெருமையைச் சொல்ல வேண்டுமா? ஆதலால் இத் தேர்தலில் சமத்துவத்திலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள யோக்கிய மான பார்ப்பனரல்லாதார் யாருக்கு ஓட்டுச் செய்ய வேண்டுமென்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கிறோம்.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 07.11.1926

You may also like...

Leave a Reply