திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?
கருநாடக மாநில அரசு திப்பு சுல்தானுக்கு அரசு விழா எடுத்ததை சகித்துக் கொள்ள முடியாத மதவாத சக்திகள் நடத்திய கலவரத்தில் இரண்டு பேர் பலியாகி விட்டனர். நடிகர் ரஜினிகாந்த், திப்பு சுல்தானாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், பார்ப்பனர்கள் இல.கணேசனும், இராம. கோபாலனும், ரஜினிகாந்தை நடிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். திப்பு சுல்தான் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? தனது தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து, 1782இல் 29 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்து, மைசூர்ப் போரில் வீரமரணம் எய்தியவன் திப்பு சுல்தான். பிரிட்டிஷ் ஆட்சியை தனது படை வலிமையால் நடுங்க வைத்தவன். 1791இல் சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான சாரதா கோயிலை மராட்டியப் படை கொள்ளையடித்து, 17 இலட்சம் மதிப்புள்ள கடவுள் சிலை, நகைகளை வாரிச் சென்றது. அப்போது சிருங்கேரி மடத்தின் பார்ப்பன சங்கராச்சாரி சச்சிதானந்த பாரதி உயிர் தப்பி,...