வினாக்கள்… விடைகள்…!
ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை. – செய்தி
விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க…
மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது. – விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு
சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும்.
– தேவஸ்தானம்
இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா…?
இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள். – பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி
அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்?
இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
சபாஷ்! இதுக்குப் பேருதான் ‘பாரத மாதா’ ஆட்சி!
பெரியார் முழக்கம் 04112015 இதழ்