Category: தலைமை அறிக்கை

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி : ”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்” ‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’ – ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி. முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி. 1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ் தொடர்ச்சி: ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் லோகு – ரூ. 1,00,000/- ரமேஷ்-ஜீவராணி – ரூ. 20,000/- 3. நெமிலி திலீபன் – ரூ. 20,000/- ஹேமலதா, சென்னை – ரூ. 20,000/-      (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 02052019 இதழ்

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய  பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் பா.ம.க.வினர் திட்டமிட்ட கலவரத்தில் இறங்கி தலித் மக்களின் வீடுகளைத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தொல் திருமாவளவன் சின்னம் பானை என்பதால் பானைகளை வீதிகளில் போட்டு பா.ம.க.வினர் உடைத்துள்ளனர்.  இதைத் தட்டிக் கேட்டார்கள் என்பதற்காக தலித் மக்களின் வீடுகளை பொன்பரப்பி கிராமத்தில் கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். பா.ம.க.வுடன் இந்து முன்னணியினரும் இதில் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ‘கீழ் விஷாரம்’ வாக்குச் சாவடியைக் கைப்பற்ற பா.ம.க.வினர் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர். அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகளை பா.ம.க.வினர் போட்டுள்ளனர். ‘இந்து’ ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது. வீடியோ பதிவுகளும் வெளி வந்துள்ளன. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். மதுரை முருகேசன் வாசுகி – ரூ.20,000/- விடுதலை இராசேந்திரன் – ரூ.20,000/- சென்னை அண்ணாமலை (எம்.ஜி.ஆர். நகர்)-ரூ.20,000/- (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 25042019 இதழ்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்கு வதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை....

பொன்பரப்பி – ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள்

பொன்பரப்பி – ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள்

பொன்பரப்பில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் : வாக்கு பதிவுக்கு பிறகு அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தலித் மக்கள் வீடு தாக்கப்பட்டு இருக்கின்றன. சில பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வாக்குச் சாவடியை கைப்பற்றுவதும் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கின்றன. தேர்தல் ஆணையம் இது குறித்து தகவல் கேட்டிருப்பதாக தேர்தல் ஆணைய தலைவர் அறிவித்திருக்கிறார். வாக்குச் சாவடிகளை கைப்பற்ற வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களும் பேசி சர்ச்சைக்குள்ளானதை இங்கு நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாதி அரசியலை முன்வைத்து ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாக்கு சாவடிகளை தங்களுடைய ஜாதி வாக்குச்சாவடி களாக மாற்றிக் கொள்வதும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களையும் அவர்களது சின்னங்களை அவமதிப்பதும் தங்கள் கட்சிக்கு ஆதரவு இல்லை என்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் ஜனநாயகத்தில் ஆழமாக கூறியிருக்கிற ஜாதி வெறியை தான்...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்குவதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை. வீட்டின்...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

  “திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு தீர்மானம்” திருப்பூர் 20.03.2019 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின் அடக்குமுறைகளை சந்தித்தோம் நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து...

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா அனுப்பிய தோழர்களுக்கு – இதழ் ஒரு வார இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா அனுப்பியவுடன் அடுத்த இதழ் உடனே கிடைக்கும் என்று தோழர்கள் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால் சந்தா கிடைக்கப் பெற்று முகவரிப் பட்டியலில் இணைத்து சந்தாதாரருக்கு சென்றடைவதற்கு இடையில் ஒரு இதழுக்கான கால அவகாசம் தேவையாகிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா செலுத்திய பிறகு ஒரு இதழ்கூட கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாகத்தின் கோளாறு. உடனே அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதழ் விட்டு விட்டு கிடைக்கவில்லை என்றால் அது உள்ளூர் அஞ்சலகத்தின் கோளாறு. அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஒரு முறை புகார் அளித்தால் இந்த கோளாறை சரி செய்து விடலாம். இதழ் குறித்து தொடர்புக்கு: 9841 489896 (பொறுப்பாளர்) 9444 115133 (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 07032019 இதழ்

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது” – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு (2011 ஆம் ஆண்டு திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். (2016 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

வெளி வந்து விட்டது ‘கருஞ்சட்டைக் கலைஞர்’

வெளி வந்து விட்டது ‘கருஞ்சட்டைக் கலைஞர்’

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருச்செங்கோட்டில் நிகழ்த்திய கலைஞர் குறித்த விரிவான உரை நூல் வடிவம் பெற்றுள்ளது. விலை : ரூ.30 தொடர்புக்கு : 9841489896 / 044-24980745 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”பிப்ரவரி 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள்* 🗞🖋 *வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள்* 💯 *கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு* 📜 *10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு* 📢 *பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்* 🌍 *மோடி பூமியின் காவலரா?* 💸 *பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி* 👶 *மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள்* இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 *அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-* 💰 *தனி இதழ் விலை – ₹ 20/-* *தொடர்புக்கு : 7299230363*

உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு குறித்த விவாதம்

உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு குறித்த விவாதம்

https://youtu.be/xW8MYVXKubY “உயர்ஜாதியினருக்கு 10% பொருளாதார இட ஒதுக்கீடு” குறித்த விவாதம். கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்களும், பா.ஜ.க.வின் ராகவன் அவர்களும் நேருக்கு நேர் விவாதிக்கும் அரங்கம். சூடான பதிலடிகள், அறிவார்ந்த விளக்கங்கள். Moon TV – 17.02.2019.

சாதி, மதம் அற்றவர்” சான்றிதழ்: சரியா, தவறா?

சாதி, மதம் அற்றவர்” சான்றிதழ்: சரியா, தவறா?

சாதி, மதம் அற்றவர்” சான்றிதழ்: சரியா, தவறா? தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ரஜினிகாந்த் நேற்று முன்தினம் முகநூல் பதிவுகளில் அனைத்துத் தரப்பினராலும் பாரட்டப்பட்டார். “சாதி, மதம் அற்றவர்” என வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கிய திருப்பத்தூர் வழக்கறிஞர் ம.ஆ. சிநேகாவுக்கு நேற்றைய பதிவுகளில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. “சாதி, மதம் அற்றவர்” என்ற சான்றிதழ் பெறுவது பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்பட்டுவருகிறது. . தீண்டாமை வேறு, சாதி வேறு இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைச் சந்தித்துப் பேசினோம். இது குறித்து அவருடைய கருத்துக்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்: தீண்டாமை என்பது வேறு, சாதி என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற விதிகளைச் சேர்த்து, அதைச்...

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

நாளை பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி” கழகத் தலைவர் அறிவிப்பு : GST வரியால்  திருப்பூர் பனியன் தொழில் துறை கடும் வீழ்ச்சியடையவும், கோவை சிறுதொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் காரணமானவர் பாஜக பிரதமர் மோடி எந்த பயனும் அளிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எனும் பெயரில் ஏழை எளிய மக்களை இரவிலும் பகலிலும் தெருவில் நிறுத்தி பல பேர் உயிரிழக்க காரணமானவர் பாஜக பிரதமர் மோடி ஸ்டைர்லைட், மீத்தேன், சாகர் மாலா, கூடங்குளம் என தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களை ஆதரிப்பவர் பாஜக பிரதமர் மோடி. 10% பொருளாதார இடஒதுக்கீடு எனும் பெயரில் அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிராக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயல்பவர் பாஜக பிரதமர் மோடி. புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடக் கூட வராமல் இப்போது தேர்தலுக்காக தமிழ்நாடு வருபவர் பாஜக பிரதமர் மோடி. தனது...

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி. திருச்செங்கோடு கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய முழு உரை நூல் வடிவில் திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு…. விற்பனையில்…. *நன்கொடை ₹ 30/-* தொடர்புக்கு : 9841489896/ 044-24980745

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி ! பிப்.10 ஞாயிறு அன்று ! ”மோடியே திருப்பிப்போ!” எனும் முழக்கத்தோடு ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்கிறார் ! நாள் : 10.02.2019 ஞாயிறு நேரம் : பிற்பகல் 1.00 மணி இடம் : புதிய பேருந்து நிலையம், திருப்பூர் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை அறிவிக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு ! பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடி மோடியே திரும்பிப் போ ! ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. தொடர்பு எண் : முகில் இராசு – 98422 48174

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் !

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் !

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார் ! விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம். 31.01.2019.

ஏப்.7இல் மதுரையில் நீலச் சட்டைப் பேரணி

ஏப்.7இல் மதுரையில் நீலச் சட்டைப் பேரணி

ஏப்ரல் 7ஆம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தவும்; முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10ரூ இட ஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 1 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர்...

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

4.01.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு எண்.27748/2005 விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சிவசுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் பாதைகள், நீர்நிலைகள், புறம் போக்கு நிலங்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ள சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து அது தொடர்பாக தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை 21/01/19 தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழகத் தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத வழிபாட்டுத் தலங்கள் பற்றிய புள்ளி விவரங்களை அளித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு...

தமிழர் திருநாள் வாழ்த்து!

தமிழர் திருநாள் வாழ்த்து!

தோழர்களுக்கும், வாசகர்களுக்கும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பெரியார் முழக்கம் 10012019 இதழ்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்   இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.   இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபெத்துப் போன்ற...

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

கொளத்தூர் தா.செ.மணி தலைவர்: திராவிடர் விடுதலைக் கழகம்   பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி திரு இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு  அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018...

எழுவர் விடுதலை – கழக தலைவர் முதல்வரிடம் கோரிக்கை

எழுவர் விடுதலை – கழக தலைவர் முதல்வரிடம் கோரிக்கை

ஏழ்வர் விடுதலை – கழகத் தலைவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை ! நேற்று (14-1-2019) இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரும் விண்ணப்பத்தை விளக்கிக் கையளித்தோம். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அடுத்த செயல்திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அடுத்த செயல்திட்டம்

ஏப்ரல் 7-ம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு. முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிப்பு. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், நீரோடை அமைப்பின்...

யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் 11012019 சென்னை

யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் 11012019 சென்னை

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் நாள்: 11-1-2019, வெள்ளி, மாலை 4 மணி இடம்: திராவிடர் விடுதலைக் கழகம், டாக்டர் நடேசன் சாலை, சிட்டி செண்டர் அருகில், மயிலாப்பூர் வருகின்ற 11-1-2019 வெள்ளி அன்று மாலை 4 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிச்சந்திரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்துள்ளோம். இதில் ஈழத்தில் உள்ள இப்போதைய அரசியல் நிலைமை, மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இக்கலந்துரையடலில் தங்கள் அமைப்புச் சார்பாக தாங்களோ அல்லது வேறு நிர்வாகியோ கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். தோழமையுடன் கொளத்தூர் தா.செ. மணி, ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தலைவர், திவிக தொடர்புக்கு: 99419 31499,...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

2019ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டி

கண்ணைக் கவரும் வண்ணப்படங் களுடன் தயாராகி வருகின்றன. ஒரு நாள்காட்டியின் விலை ரூ.70/- தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். முன் பதிவு எண்ணிக்கைக்கேற்ப மட்டுமே நாட்காட்டிகள் அச்சிடப்படு கின்றன. தொடர்புக்கு : தபசி. குமரன், தலைமைக் கழக செயலாளர். தொடர்பு எண் : 9444025408 பெரியார் முழக்கம் 13122018 இதழ்

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு

கருஞ்சட்டை பேரணி – கழக தலைவர் அழைப்பு

டிச.23 திருச்சியில *கருஞ்சட்டைப் பேரணி* கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அழைப்பு : அன்பார்ந்த தோழர்களுக்கு, வணக்கம். தந்தை பெரியாரின் 45ஆம் நினைவுநாளை (24.12.1973) முன்னிட்டு வரும் திசம்பர் 23/2018 அன்று திருச்சியில் ‘காவி பயங்கரவாத்த்தை’ வீழ்த்த இலட்சம் பேர் பங்கேற்கும் கருஞ்சட்டைப் பேரணி- மாநாடு நடைபெற உள்ளது. பேரணியையும், மாநாட்டையும் வெற்றிபெற செய்யவேண்டியது நம்முடைய கடமையும், உரிமையும் ஆகும். குறிப்பாக காவி பயங்கரவாதம் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கார் இருளுக்குள் தள்ளிவிட்டது. வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் மனிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியை மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்வும், பிஜேபியும் நடத்திக் கொண்டு இருக்கின்றது. இதற்கு மேலும் பொறுமையாக கடந்து செல்வது. தன்மானமுள்ள தமிழனுக்கு அவமானம். தமிழினத்தை பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டிய தருணம் இது. மேலும் மாக்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய , தமிழ்த்தேசிய, சனநாயக சிந்தனையாளர்கள் ஒரு குடையின் கீழ் திரள...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் – பார்ப்பனிய  – இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் – பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் – பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை...

தலைமைக் கழக அறிவிப்பு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல்

தலைமைக் கழக அறிவிப்பு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல்

அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின்  நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட் டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். டிசம்பர் 5 முதல் 9 வரை இருந்த மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – மாற்றியமைக்கப்பட்ட புதியப் பட்டியல் 15.12.2018 – சனி காலை – நெல்லை, தூத்துக்குடி; 16.12.2018 – ஞாயிறு காலை – கன்னியாகுமரி; 19.12.2018 – புதன் மாலை – விழுப்புரம்; 20.12.2018 – வியாழன் காலை – வேலூர்; மாலை – காஞ்சிபுரம்; 21.12.2018 – வெள்ளி காலை – சென்னை; மாலை – பாண்டிச்சேரி; 22.12.2018 – சனி மாலை – மதுரை. திட்டமிடப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த மாவட்ட கழகப்...

டிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்!  அனைத்து இயக்கங்களும் இணைந்து நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி

டிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்! அனைத்து இயக்கங்களும் இணைந்து நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து 10-11-2018, சனிக்கிழமை அன்று சென்னை செய்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு “தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. •இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டது. ஒன்பது மண்டலங்கள் சென்னை – பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி: – 8608068002),...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

”தலைமைக் கழக அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின் நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட்டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக்கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். ”மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்” : 21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 -வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி மாலை – ஆனைமலை – கோவை மாநகர் – கோவை புறநகர் (ஆனைமலை) 24.11.2018 – சனி காலை -திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி) 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம் மேற்கு; 02.12.2018...

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்   பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:   நாள்:  10-11-2018, சனிக்கிழமை இடம்:  சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம் டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு“தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.       ஒன்பது மண்டலங்கள்   1.சென்னை – தோழர் பொழிலன்(தமிழக...

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

கழக தலைவர் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – திராவிட விழுதுகள் ஒட்டஞ்சத்திரம் 18112018   திவிக மாநில செயலவை திருப்பூர் 14102018 முப்பெரும் விழா பொதுக்கூட்டம் குமாரபாளையம் 13102018 தோழர் செல்வராஜ் தாயார் இறுதி ஊர்வலம் சென்னிமலை 06102018 எழுவர் விடுதலை- அஞ்சல் அட்டை ஈரோடு 06102018 இந்திய டேசிய லீக் – பெரியார் யார்? கருத்தரங்கம் திருவண்ணாமலை 03102018 கல்வி கற்க – முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் 02102018  தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாக்கம் விழுப்புரம் 01102018    கருஞ்சட்டை கலைஞர் கருத்தரங்கம் திருச்செங்கோடு 30092018 வாழ்க்கை இணையேற்பு விழா திருவண்ணாமலை 22092018 பெரியார் சிலை திறப்பு ஆண்டிமடம் 16092018  

”போலி சுவரொட்டிகளுக்கு மறுப்பு !” – மயிலாடுதுறை 19102018

”போலி சுவரொட்டிகளுக்கு மறுப்பு !” – மயிலாடுதுறை 19102018

  இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலை தளங்களில் சமூக விரோதிகளால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில் பரப்பப்டுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும் வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று 19.10.2018 அன்று காலை கழக வழக்கறிஞரும் நாகை மாவட்ட பொறுப்பாளருமான தோழர் இளையராஜா,கழக பொறுப்பாளர்கள் தோழர் மகேஸ்,செந்தில் குமார், நடராஜ்,தில்லை நாதன்,விஜயராகவன்,நாஞ்சில் சங்கர் ஆகியோர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.இன்று மாவட்ட காவல்துறை காண்காளிப்பாளரிடமும் புகார்...

திராவிடர் விடுதலைக் கழகம்  மாநில செயலவைக் கூட்டம்  திருப்பூர் 14102018  தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் மாநில செயலவைக் கூட்டம் திருப்பூர் 14102018 தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் மாநில செயலவைக் கூட்டம் திருப்பூர் 14.10.2018 தீர்மானங்கள் தீர்மானம் 1 பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்புகளை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது. ஒன்று – சபரிமலை அய்யப்பன் கோயிலில் இடையில் சில ஆண்டுகளாக  “தீட்டாகிறார்கள்” என்று காரணம் கூறி பெண்களை அனுமதிக்க மறுத்து வந்த பாகுபாட்டை உச்சநீதிமன்றம் செல்லாதாக்கியிருக்கிறது. மற்றொன்று – இந்தியத் தண்டனை சட்டத்தில் 497 வது பிரிவு செல்லாது என்ற தீர்ப்பாகும். ஒரு மனைவி கணவன் சம்மத்துடன் வேறு ஒருவனை உடல்உறவு கொள்ள முடியும். கணவன் சம்மதமின்றி உடல்உறவு கொண்டால் கிரிமினல் குற்றம் என்று கூறுகிறது இப்பிரிவு. ஒரு பெண் -கணவனின் ஏகபோக உடைமையல்ல. பெண்ணுக்கான பாலுறவு சுதந்திரம் கணவனால் மட்டுமே தரப்பட வேண்டும் என்ற இந்த பிரிவை நீக்க வேண்டும் என்று 1971 ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில்...

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

“செயலவைக் கூட்டம்” மாற்று தேதி அறிவிப்பு. பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி இடம் : டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின் மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . 06.10.2018.

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும்,இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல் ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப்பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய...

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களைப் பற்றியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தோழர்.கொளத்தூர்மணி அவர்களைப் பற்றி, தவறான, உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனை தோழர்.கொளத்தூர்மணி தான் காட்டிக் கொடுத்ததாக அவதூறாகக் கூறியுள்ளார்.. மேலும், அந்த வீடியோவில், வேலூர் சிறையிலிருந்து 44 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூர்மணியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, தன் கையில் துப்பாக்கி இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார்.. தனது பணிக்காலத்தில் இது போன்று பேசாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அந்த அதிகாரி இது போன்று பேசவேண்டிய அவசியம், மர்மம் என்ன என்பதையும் அறிய வேண்டி உள்ளது.. ராஜீவ்...

கழக தலைவர் நிகழ்ச்சிகள் – புகைப்படங்கள்

கழக தலைவர் நிகழ்ச்சிகள் – புகைப்படங்கள்

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு சென்னை 31082018 அனிதா நினைவு நூலக திறப்பு விழா குழுமூர் 01092018 மயிலாடுதுறை – அன்பு இணையேற்பு விழா

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள் சென்னை அணி புகைப்படங்கள் திருப்பூர் அணி புகைப்படங்கள் குடியாத்தம் அணி புகைப்படங்கள் மயிலாடுதுறை அணி புகைப்படங்கள்  

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018 தலைமை ஒருங்கிணைப்பாளர்   ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும்.  ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த...

தி.மு.க.வின் தலைவராகியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

தி.மு.க.வின் தலைவராகியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்றைய (28.08.2018)வாட்ஸ் அப் செய்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சி ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்பதை நாம் பாராட்ட வேண்டும். “திராவிட இயக்கம் ஒரு கடுமையான நெருக்கடி சூழலில் இப்போது இருந்துகொண்டு இருக்கிறது. கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று டெல்லியில் ஆளுகிற பார்ப்பன-மதவாத சக்திகள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை ஒழிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிற நிலையில் ஸ்டாலின் இப்போது தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்”. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தனித்துவமான அடையாளங்கள், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றிலிருந்து அவர் நிச்சயமாக அவர் விலகிச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை எல்லோரையும் போல நமக்கும் இருக்கிறது. குறிப்பாக சுதந்திர நாள் செய்தியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடுகையில், “இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு...