Author: Manoj DVK

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம்     ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மாநிலங்களுக்கு   நிதியை  பகிர்ந்தளிக்க   அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின்...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அரசு தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வது உண்மை தான் என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  இந்த சூழ்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சி வேலைக்கான ஒரு பரிமாற்றத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதனடிப்படையில் உத்தரபிரதேசத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருகிறார்கள். இஸ்ரேலில் நடந்த போரின் காரணமாக அங்கே பல நிறுவனங்களில் பணியாளர்களே இல்லாத சூழ்நிலையில் உத்தரபிரதேச அரசு இந்த ஒப்பந்ததை போட்டுக்கொண்டு உபியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆட்களை அனுப்பி வருகிறது. பலரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இனப்படுகொலை நடக்கிறது என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நாட்டுக்கு உயிர் போனாலும் பரவாயில்லை, இங்கே வேலை கிடைக்காது, அதனால் அங்கே போகிறோம் என்று ஏராளமான இளைஞர்கள் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளனர். இப்படி வேலைக்கு சென்றுள்ள இளைஞர்களை பேட்டி கண்டு இந்து ஆங்கில நாளேடு ஒரு முழுப்பக்க...

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

பெரியார் பெயரைக் கேட்டாலே மோடியும், அமித் ஷாவும் அலறுவது ஏன்? (3) – பேராசிரியர் ஜெயராமன்

பெரியார் பெயரைக் கேட்டாலே மோடியும், அமித் ஷாவும் அலறுவது ஏன்? (3) – பேராசிரியர் ஜெயராமன்

(25.01.2024 இதழில் வெளியான உரையின்  தொடர்ச்சி) இந்தியா விடுதலை அடையும் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று கேட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிற பாலகங்காதர திலகர் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர் பிரிவைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் சிவாஜி மற்றும் அவரது வகையறாக்கள் சத்ரபதிகள். பிரதமருக்கு பேஷ்வாக்கள் என்று பெயர். மன்னர்கள் குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆட்சியதிகாரத்தை சித்பவன் பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே தான் கெய்க்வாட், பான்சிலேவ், சிந்தியா, கோல்கார் உள்ளிட்ட மராட்டியப் பகுதித் தலைவர்கள் இருப்பார்கள். பின்னர் ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து அந்த மராட்டிய பேஷ்வாக்களை தோற்கடித்துதான் மராட்டியப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்ட சித்பவன் பார்ப்பனர்கள், வெளியேறும்போது இந்த நாட்டை எங்களிடம் (சித்பவன் பார்ப்பனர்களிடம்) தந்துவிட்டு செல்லுங்கள் என்றனர்....

வினா விடை

வினா விடை

ரஜினிகாந்த் சங்கி இல்லை, அப்பாவை சங்கி என்று சொன்னால் கோபம் வருகிறது                                   – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில் :  சங்கி அடையாளமல்ல, அவமானம் என மகளுக்குப் புரிகிறது, ரஜினிக்குத்தான் புரிவதில்லை. சமூக நல்லிணக்கத்திற்கான விருது முகமது ஜுபைருக்கு கொடுத்தது பொருத்தமற்றது                                       – அண்ணாமலை பதில் : மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டியவர்களுக்கு கொடுக்க இது என்ன ராமராஜ்ஜியமா? ராமசாமி ராஜ்ஜியம்!   ராமர் கோயில் அனைவருக்கும் பொதுவானது; யார் வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்யலாம் – எடப்பாடி பழனிசாமி பதில்: கரசேவைக்கு ஆள் அனுப்பிய அதிமுகவினர் ஏன் இன்னும் செல்லவில்லை? தேர்தல் முடியட்டும் என காத்திருக்கிறீர்களோ! ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது, ராமர்தான் தேசிய அடையாளம் – ஆர்.என்.ரவி பதில்: பிச்சைக்காரர்கள் கூட ராமர் வேடம் போடுகிறார்கள், அதற்காக அதுதான் பாரதத்தின் அடையாளம் என்று சொல்ல முடியுமா மிஸ்டர் ரவி? அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட...

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

ஆகம உருட்டு

ஆகம உருட்டு

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக்கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்திவிட்டார் ராஜாஜி. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

மணம் வீசும் பெரியார்!

மணம் வீசும் பெரியார்!

47 – ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 3 முதல் 21 – ஆம் தேதிவரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் தனிநபர் ஒருவர் குறித்த நூல்கள் அதிகமான அரங்குகளில் விற்பனைக்கு இருந்தது என்றால், அது பெரியாரைப் பற்றிய நூல்கள்தான். சுமார் 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில். குறைந்தபட்சமாக ஒரு நூலாவது பெரியார் குறித்து விற்பனைக்கு இருந்தது. கடந்த புத்தகக் காட்சி முதல் இந்த ஆண்டு புத்தகக் காட்சி வரையிலான காலத்தில் பெரியார் பற்றிய தலைப்பில் சுமார் 70 நூல்கள் வெளி யாகியிருக்கின்றன. 2000 – த்தின் தொடக்கம் வரை, புத்தகக் காட்சிகளில் பெரியார் குறித்த நூல்களை ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான பதிப்ப கங்களே விற்பனைக்கு வைத்திருக்கும். ஆனால், இப்போதோ பெரியார் நூல்களைப் பதிப்பிக்காத பதிப்பாளர்கள் கூட, பிற பதிப்பகங்களிடம் இருந்து பெரியார் நூல்களை வாங்கி அரங்குகளில் பார்வைக்கு வைக்கிறார்கள். பெரியார் நூல்கள்...

தலையங்கம் – இடஒதுக்கீட்டிற்கு பேராபத்து!

தலையங்கம் – இடஒதுக்கீட்டிற்கு பேராபத்து!

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்தெடுக்கிற முயற்சியை பாஜக மிகக் கவனமாக செய்துகொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சிக்காலம் முடியும் இத்தருவாயில், இடஒதுக்கீட்டை ஒரே அடியாக ஒழித்துக் கட்ட துணிந்திருக்கிறது பாஜக அரசு. உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல் ஒன்றை கடந்த வாரம் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டிருந்தது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிரப்ப போதுமான ஆட்கள் இல்லாவிட்டால், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு (ஓ.சி.) மாற்றிக் கொள்ளலாம் என்பது அந்த அறிக்கை. ஒன்றிய அரசு பணியிடங்களில் ஏற்கெனவே, பெரும்பான்மை இடங்களை பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதியினரே ஆக்கிரமித்துக் கொள்ளும் போக்குதான் நிலவிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை அதிகரித்து சமூகத்தை சமத்துவமடையச் செய்ய வேண்டிய தேவைகள் இருக்கையில், இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் முன்பே அதை ஒட்டுமொத்தமாக குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு பல்கலைக்கழக மானியக் குழு...

இந்தியை மண்டியிடச் செய்த சிங்கங்கள் – கொளத்தூர் மணி

இந்தியை மண்டியிடச் செய்த சிங்கங்கள் – கொளத்தூர் மணி

(21.01.2023 அன்று சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலருக்காக கழகத் தலைவர் எழுதிய சிறப்புக் கட்டுரை) இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பது என்ற மொழியை மையமாகக் கொண்ட அரசியல் நூறாண்டு கால வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டதாகும். இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் மொழியால் மக்களை ஒன்றிணைத்தால் இந்திய விடுதலையை எளிதாக அடைய முடியும் என்பது காந்தியாரின் கணிப்பாகவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காங்கிரஸ் தலைவர்களின் விருப்பமாகவும் இருந்தது. 31.7.1917 அன்று இன்றைய குஜராத் மாநிலம் பரோச்சில் நடந்த கல்வி மாநாட்டில் காந்தியார் இந்தியாவின் பொதுமொழி குறித்து அழுத்தமாகப் பதிவு செய்தார். அதற்கான எதிர்ப்புக்குரல் தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளிப்பட்டது. நீதிக் கட்சியின் நாளேடான ‘திராவிடன்’ இதழில் அடுத்த நாள் 1.8.1917 அன்று ‘மிஸ்டர் காந்தியும் இந்தியும்’ என்று இந்தி எதிர்ப்புத் தலையங்கம் வெளிவந்தது. தொடர்ந்து மூன்று கட்டுரைகள் அதே மாதத்தில் வெளிவந்தன....

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்...

வினா விடை

வினா விடை

அயோத்தி ராமன் கோயிலில் இடி விழாமல் காப்பாற்ற இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. – செய்தி ஆமாம், அதற்காக புதிய ஆகமம் ஒன்றை எழுதி அதற்கு மோடி இடிதாங்கி ஆகமம் என்று பெயர் சூட்டியிருக்கிறோம். அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது – நாடாளுமன்றத்தில் மோடி ஆமாம், அதற்காகத்தான் ஒரே இயக்குநரை மூன்றுமுறை முறைகேடாக பதவி நீடிப்பு வழங்கினோம். உச்சநீதிமன்றம்தான் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது. 1976 நெருக்கடி நிலை காலத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இப்போது உயரவில்லை – மோடி ராஜராஜ சோழன், பல்லவ மன்னன் காலத்தில் விலைவாசி அதிகமாக இருந்ததா? பிற மதத்தவர் இந்து மதத்தை தழுவ திருப்பதியில் ஏற்பாடு – சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம் – செய்தி இந்து மதத்தில் எந்த ஜாதியில் அவர்களுக்கு இடம் கொடுப்பீர்கள்? ஜாதி மாறவும் சிறப்புத் திட்டம் எதாவது இருக்கிறதா? சண்டிகர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்...

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

கோயில் விடுதலை அரசியலா? அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் ரமேஷ், அமெரிக்கை நாராயணன், ரங்கராஜன் நரசிம்மன், சுமந்த் ராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இவர்களின் பின்னணி என்னவென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்து குறித்து விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நீதிபதி இப்படி அரசியலை பேசலாமா? என்பதை சுட்டிக்காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சு.துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு...

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

(01.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி)   1953இல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. 1956-இல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை மொழிவழி மாநிலங்களாக அமைகிறது. இந்த ஐந்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியபோது, பெரியார் இதை கடுமையாக எதிர்த்து,  தற்கொலைக்கு சமம் என்றார். திருவனந்தபுரத்தில் நேரு இதைப்பற்றி கேட்கும்போது “பெரியார் இதை எதிர்க்கிறார், ஏற்க முடியாது” என்று கூறினார் காமராசர். நேருவுக்கு பெரியார் என்றால் யாரென்று தெரியும். அதனால் சத்தமில்லாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார். இப்படி பெரியார் சொன்னவைகள்தான் நீதிக்கட்சி ஆட்சி முதல் சட்டங்களாக ஆனது, பெரியார் சொன்னதுதான் காமராசர் ஆட்சியில் திட்டங்களாக மாறின. மக்களுக்கு கல்வியை கொடுங்கள் என்று காமராசரிடம் பெரியார் சொன்னபோது அதை அப்படியே மறுக்காமல் நிறைவேற்றினார் காமராசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஐந்து மைல் தொலைவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளிகள் வந்தன. அப்பொழுதுதான் எல்லாரும் படிக்க வந்தார்கள். மயிலாடுதுறை...

தலைமறைவு தியாகம்

தலைமறைவு தியாகம்

“தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள்தான் என்று மார்தட்டுகிறார்”அண்ணாமலை. இப்படி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க நாங்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது என்பதே எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை என்றும் அண்ணாமலை வேதனைப்படுகிறார். அண்ணாமலையின் இந்த கட்சி வளர்ப்புப் பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது கூட வழங்கலாம். ஆருத்ரா நிதி நிறுவனத்தை நடத்தி ரூ.2000 கோடி மக்களின் பணத்தை அண்ணாமலையின் சீடர்கள் ஹரிஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் வாரி சுருட்டிக்கொண்டார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவையெல்லாம் மகத்தான தியாகங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. கைது செய்யப்பட்ட ஹரிஷ் பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர். இந்த மாநிலப் பதவிகூட ஏதோ லாட்டரி சீட்டு போல அவருக்கு கிடைத்துவிடவில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து பாஜக தலைமைக்கு உண்டியல் காணிக்கை செலுத்திவிட்டுத்தான் இந்த பதவியை அவர் பெற்றார். அப்படித்தான் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் வாக்குமூலம்...

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

“வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தை கொண்டிருக்கிறது, தெற்கு முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது” என்றும், “தென் மாநிலங்களுக்கென தனி தலைநகர் ஒன்றை அமைக்க வேண்டும்” ன்றும் பரிந்துரைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இன்றும் வடக்கு- தெற்குக்கு இடையிலான இந்த பாகுபாடு அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாநில மக்களின் தாய்மொழியை அழித்து இந்தியை பொதுமொழி ஆக்கியதுபோல, தென்னிந்தியாவில் மாற்றிவிட இயலவில்லை. மத ரீதியாக வடக்கில் வேரூன்றிய பாஜகவால், தென்னிந்தியாவில் வேரூன்ற முடியவில்லை. கல்வி – வேலைவாய்ப்பு – சுகாதாரக் கட்டமைப்புகளில் தென்னிந்தியாவுக்கு நிகராக வட இந்தியாவால் முன்னேற முடியவில்லை. ஆனால் “வடக்கு வேறு, தெற்கு வேறு… என்று தென்னகத்தில் இருந்து குரல் எழும்போதெல்லாம் அதைப் பிரிவினைவாதம் என்கிறது பாரதிய ஜனதா கட்சி....

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு  அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து  அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார். சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை...

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பெரியார் முழக்கம் 08022024 இதழ்

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார். நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.  அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’  இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப் பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்”  என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு. “சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள்  வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும் போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதே சரி)  அக்கூட்டத்திலேயே “பறையர்கள்”  எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர்  என்ற செய்தி யாவரும் அறிந்ததே.  இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும்.  எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா...

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

திரைப்பட நடிகரும் பகுத்தறிவாளருமான தோழர் மாரிமுத்து அவர்கள் சென்னையில் 08.09.2023 அன்று காலை 10 மணியளவில் முடிவெய்தினார். தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் திரைப்படத் துறைக்கு வந்த அவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நீண்ட காலம் ஊடக வெளிச்சம் பெறாமல் இருந்த அவர் அண்மைக்காலமாக அவர் சீரியல் வழியாகவும், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் வழியாகவும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றார். தனக்கு ஜாதி கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கருப்புச் சட்டை தான் தனக்கு பிடித்த உடை என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியதோடு தனது மகன், மகளுக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதே தனது நோக்கம் என்றார். நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சிகளான ‘கிணறு காணாமல் போவது, போலிஸ் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிவிடாதே’ போன்ற காட்சிகளை உருவாக்கியதே மாரிமுத்து தான் என்று நடிகர் வடிவேலு பதிவு...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியே போனாலும், சனாதன எதிர்ப்பை கைவிட மாட்டோம், திராவிட இயக்கம் தோன்றியதே சனாதன எதிர்ப்புக்காகத்தான் என்று உறுதியுடன் அறிவித்து விட்டார். இந்த கொள்கை உறுதியை நாம் பாராட்டி வரவேற்கிறோம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்று வந்துவிட்டால், பல நேரங்களில் கொள்கைகளை பின்வாங்கச் செய்துவிடும். இதுதான் பொதுவான தமிழகத்தின் அரசியல், ஆனால் உதயநிதி என்ற இளைஞர் அதில் மாறுபட்டு தனது கொள்கை அடையாளத்தைப் பற்றி நிற்பது அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறுவோம். பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு  அவர் பதிலளிக்கும் பண்பும், பாங்கும் கூட மிகவும் மாறுபட்டதாகவே இருக்கிறது. போகிறப் போக்கில் ஊதித்தள்ளிவிடுகிறார். இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டிய மோடியின் முயற்சி குறித்த கேள்விக்கு ‘9 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார் மோடி, இதோ மாற்றிவிட்டார்’ என்று பதிலளிக்கிறார். தனது தலைக்கு 5 கோடி விலை...

பாரத தேசத்துக்கு சரித்திர ஆதாரம் உண்டா?

பாரத தேசத்துக்கு சரித்திர ஆதாரம் உண்டா?

இந்தியாவை ‘பாரத தேசம்’ என்றும் இந்திய அரசியலை இராம ராஜ்ஜியம் என்றும் காங்கிரஸ்காரர்கள் (ஆரிய-பார்ப்பனர்) சொல்லும் காரணம் என்ன? இவற்றிலிருக்கும் உண்மை என்ன? என்பவை சிந்திக்கப்படத்தக்கவையாகும். நிலப்பரப்புக்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் காட்ட வேண்டுமானால், பூகோளத்திலிருந்து கையாளப்பட வேண்டும். அதுபோலவே, பண்டைய அரசியலுக்கு  எடுத்துக்காட்டும் ஆதாரமும் காட்டப்பட வேண்டுமானால், சரித்திரத்தில் இருந்து கையாளப்பட வேண்டும். பெரியார், விடுதலை – 12.6.1933 உண்மையாக இந்த நாட்டை ஆண்ட அரசர்கள், உண்மை சரித்திரப்படி எத்தனையோ பேர்கள் இருக்கும் போது – ஆளாததும் அறிவுக்கும், உண்மைக்கும், உரிமைக்கும் மாறுபாடானதுமான ஒரு பெயரை மக்கள் அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறோம்.  அதிலும் இந்தப் பெயர்களை, போலித் தன்மைகளை வைத்துக் கொண்ட அதன் மூலம் உண்மையான, சரித்திர ஆதாரமான பெயரைக் கொண்டு ஒரு நாட்டை அதாவது திராவிட நாட்டை திராவிட நாடு என்றழைத்து, அது உரிமைபெற வேண்டுமென்று  முயற்சிப்பவர்கள் கூட்டத்தில் புகுந்து கொண்டு,...

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள். வர்ணாசிரமம் வேறு; சனாதனம் வேறு என்று கூறும் நீங்கள், வர்ணாசிரமத்தை எதிர்க்கிறோம் என்று கூறத் தயாரா? சனாதனம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகிறார்கள், அந்த வாழ்க்கை முறை என்ன? அதன் பண்புகள் என்ன என்பதை விளக்குவார்களா? வருணாசிரமம் அல்லாத சனாதன வாழ்க்கை முறை எப்போது எந்த காலத்தில் இங்கே நிலவியவது? பால்ய விவாகம், சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடுமை தீண்டாமை, பிராமணன் வணக்கத்தக்கவன், சூத்திரன் பிராமணர்களின் வைப்பாட்டி மகன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து காவி வெள்ளை ஆடை அணிவித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல், 10 வயது பிராமண சிறுவன் 70 வயது சூத்திர முதியவரை வாடா போடா என்று அழைத்து இழிவுபடுத்துதல், இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை...

33. கடல் குமுறுது!

33. கடல் குமுறுது!

காற்றடிக்குது கடல் குமுறுது! கண்ணைத்திறவாய் நாயகமே என்று பாடிய கவியின் கருத்தை, சென்னை சென்ற ஞாயிறன்று, மிகமிக அழகாக எடுத்துக்காட்டிற்று. அன்று பெரியார் வரவேற்புக் கூட்டம் மிக ஆடம்பரமாக திருவல்லிக்கேணி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடல் அலை ஒலிக்கு சக்தி அதிகமா அன்றி தமிழரின் முரசொலிக்கு சக்தி அதிகமா என்று போட்டி நடந்து அன்று. கடற்கரையில் எங்கு நோக்கினும் தமிழர்கள்! தமிழ்ப்பெண்கள்! தமிழ் வாலிபர்கள்! தமிழ்த் தலைவர்கள்! 1000-க்கு மேற்பட்ட வெளியூர்த் தமிழர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆச்சாரி சர்க்காரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறைசென்று மீண்ட தாய்மார்க்ள் ஒரு புறமும், தொண்டர்கள் மற்றொரு புறமும் அமர்ந்திருக்க உயரமாக எழுப்பப்பட்ட மேடைமீது மின்சார விளக்கொளியுடன் நீதிக்கட்சிச் சின்னமாகிய திராசு மின்னவெண்ணிறத்தாடி கடற்காற்றால் ஆடி அசைய, பிரகாசிக்கும் கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து நோக்க, பெரியார் மேடைமீது அமர்ந்த காட்சியை தமிழர் என்றும் மறவார்! அன்று கண்ட தமிழரின் உற்சாகத்தை பெரியாரும் என்றும் மறவார். அக்காட்சியை, சரிதமும் மறவாது....

32. காந்தீயத்தின் கிழப்பருவம்

32. காந்தீயத்தின் கிழப்பருவம்

காந்தீயம் ஒன்றுதான் நாட்டு விடுதலைக்கு ஏற்ற மார்க்கமென்றும், சுயராஜ்யம் பெற, காந்தியார் ஒருவரே வழிகாட்டியாக இருக்க முடியுமென்றும், அவர் அரசியலில் மட்டும் நிபுணரல்ல. மதத்திற்கும் குருவென்றும், அவர் இதற்குமுன் தோன்றிய எத்தனையோ காங்கிரஸ் தலைவர்களைப் போன்றவரல்ல, எல்லாரினும் இவரே உயர்ந்தவர் என்றும் சுருக்கமாக கூற வேண்டுமானால் அவர் வெறும் ஆத்மா அல்ல, மாகத்மா என்றும், பலத்த பத்திரிகைப் பிரச்சாரத்தால், நாடு முழுதும் பரப்பப்பட்டு, பாமர மக்கள் அவ்வளவு பேரும் அவரை அவதார புருஷர் என்ற அளவுக்குக் கொண்டாடூம் நிலை வந்து, அறிவாளிகளும் அவருடைய அந்தராத்மா, என்ற பேச்சிலே லயித்து, அவரைத் தம் ஞானாசிரியராக இருக்கச் செய்து, வந்த நிலை இன்று மாறி, காந்தீயம் என்றால் இன்னது அதைப்பற்றி சிலர் இன்னவிதமான தப்பர்த்தம் செய்து கொள்கின்றனர்; அதற்கு இது சமாதனம் என்று பலர் வியாக்யானம் செய்யவேண்டிய நிலை இன்று வந்துவிட்டது. ஒரே அடியாக காந்தீயத்தில் அமிழ்ந்து போயிருந்த மக்களுக்குள் இன்று ஒருவித விழிப்பு...

31. கொடி இறங்கும்

31. கொடி இறங்கும்

ஜுலை 11-ந்தேதி சென்னைக் கார்ப்பரேஷன் கட்டடத்தின்மீது இன்று பறந்து கொண்டிருக்கும் காங்கரஸ் கொடி இறக்கப்படுமெனத் தெரிகிறது. கொடி ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. ஆனால் காங்கிரஸ்காரர்கள் தமது கொடி சாதாரண கட்சிக் கொடி அல்லவென்றும் அது தேசீயக்கொடி என்றும் கூறி வந்தனர். கோட்டையில் கொடி கட்டுவோம்! என தேர்தல் காலத்தில் பேசினர். ஆனால் கவர்னர் இது தேசீயக்கொடியாகாது. இது ஒரு சாதாரண கட்சிக்கொடி என்று கூறினார்.  காங்கரஸ் வீரர்கள் வீரத்தை வீட்டிலே பத்திரமாக மூடி வைத்துவிட்டு, கவர்னர் இருக்கும் திக்குநோக்கி தெண்டனிட்டு, சரி! சரி! துரையவர்களே. மூவர்ணக் கொடி என இனி இதை அழைக்கிறோம். வெள்ளையரின் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வேளைகளிலே இந்தக்கொடியை ஏற்ற மாட்டோம்; தங்கள் சித்தம் எமது பாக்கியம் என விண்ணப்பித்துக் கொண்டனர். இன்றும், இவர்கள் கூடி சட்டமியற்றும் சபையிலே இவர்கள் தலைக்கு மேலே வெள்ளைக்காரர் கொடி தான் பறக்கிறது. இதைக்கண்டும் உள்ளே இருப்பதால் தான் கவர்னர் முடுக்காக ஒரு...

30. மீனாட்சி அம்மையும் மஞ்சப்பெட்டி ஐயனும்!

30. மீனாட்சி அம்மையும் மஞ்சப்பெட்டி ஐயனும்!

நேக்கு நன்னா தெரியண்டி கமலம்! இந்தப்பாழும் பிராமணன் இப்படித்தான் ஆச்சாரங்கெட்டு அலையப்போறான் என்று என மதுரை அம்மாமிமார் பேசியிருப்பர். கலிகாலமேன்னோ! எல்லாம் தலைகீழா மாறிவிட்டது. பஞ்சமாளை அம்மன் சன்னதியிலே வுட்டூட்டாளாம். அபச்சாரம்! அபச்சாரம்! ரௌரவாதி நகரமன்னா சித்திக்கும் அவாளுக்கு என்று சனாதன சாஸ்திரிகள் கூறியிருப்பர். நானும் பார்த்துண்டே வர்ரேன். அந்த ராமசாமி நாய்க்கன் என்னென்ன சொன்னானோ அவ்வளவும் நடந்துண்டே வர்ரது. ஈஸ்வரனுக்குக் கண்ணில்லே என்று வைதீகர்கள் குளத்தங் கரையில் பேசியிருப்பர். இது ஒரு சரியான சான்சுதான் வரப்போற ஜில்லா போர்டு தேர்தலிலே ஒரு கை பார்க்கலாம். இந்த சு.ம.க்களுக்கெல்லாம் இனி வேலை ஏது என்று தேசீய சர்மாக்கள் பேசியிருப்பர். தினமணியோ வழக்கப்படி ராஜாஜி வாழ்க என்ற பல்லவியைப் பாடிவிட்டது. ஆனந்த விகடனுக்கு அத்தோடு திருப்தியில்லை. வாழ்த்துவதற்கு ஆளா இல்லை. ராஜாஜியில் ஆரம்பித்து காந்தியார் வரையில் சென்று, ஒரு மூச்சு வாழ்த்து வாழ்த்தென வாழ்த்தித் தீர்த்துவிட்டது. அதன் ஆசை அவ்வளவோடு தீர்ந்து போகவில்லை....

29. சென்னையே! கொச்சியைப் பார்

29. சென்னையே! கொச்சியைப் பார்

கோவை நகர திலகம், தமிழ் நாட்டுச் செல்வம் சர்.ஷண்முகம் அவர்கள், கொச்சி திவானாகச் சென்ற போது கடுகடுத்துப்பேசி, கொச்சி உத்யோகம் கொச்சிவாசிகளுக்கே என்று கூந்தலை அவிழ்த்துவிட்டு அழுத தேசீய அம்மாமிகள் இன்று மூக்கின் மீது விரலை வைக்கும்படியான கீர்த்தியை அவர் பெற்றுவிட்டார். சமஸ்தானங்களிலே பொறுப்பாட்சிக் கிளர்ச்சிப் புயல் கிளம்புவதற்கு முன்னாலேயே, குறிப்பறிந்து நடக்கும் ராஜ தந்திரியாகிய சர்.சண்முகம், கொச்சி மன்னருக்கு யோசனை கூறி, மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், ஆட்சியில் பங்கும் மக்களின் பிரதிநிதியாக ஒரு மந்திரியும் ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே பொறுப்பாட்சியின் வித்தான இரட்டையாட்சி எனும் அரசியல் சீர்திருத்தத்தை பெற்ற முதல் சமஸ்தானம் கொச்சிதான். அந்தப் பெருமை சர்.சண்முகத்துக்கே உரியது. ஆனால் அதிலே தமிழர் யாவருக்கும் பங்கு உண்டு. சர்.சண்முகம் ஒரு தமிழர்! இன்று பல்வேறு சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி நடப்பதும், ஆங்காங்கு இந்திய டயர்கள் தோன்றுவதும், பல்வேறு இடங்களில் துப்பாக்கி வேட்டுகள் கிளம்புவதும், காணும் நாம் கொச்சியிலே அமைதி ஆனந்தத்தைக் காண்கிறோம்....

28. உண்மை வெளியாய்விட்டது

28. உண்மை வெளியாய்விட்டது

என் கைக்கு அதிகாரம் வந்தால் நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தியை மாத்திரமல்லாமல்) சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன். என தோழர் எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் சென்னை லயோலா காலேஜில் மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அதோடு நிற்காமல் அவர் அதே சமயத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் ஏற்படுத்தி விடுவேன். என்று கூறி இருக்கிறார். இவ்வளவோடு அவர் திருப்தியடைந்தாரா? இல்லை இல்லை. காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராமராஜ்ய மேற்பட்டு விடவேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன் என்றும் பேசி இருக்கிறார். ஏனென்றால் மக்கள் சமஸ்கிருதம் படித்தால் பிறகு ராமராஜ்யம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் அதுதான். ஆங்கிலம் படித்ததால் ஆங்கில நாகரிகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதுபோல் ஆரியம் படித்தால் ஆரிய நாகரிகம் தானாகவே ஏற்பட்டு விடுமல்லவா? ராமராஜ்யம் என்பது ஆரிய நாகரிகம்தானே. அதனால் அவர் சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் ராமராஜ்யத்திற்கு வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்த...

27. ஈ.வெ.ரா மதராஸ் மெயில் நிருபர் பேட்டி

27. ஈ.வெ.ரா மதராஸ் மெயில் நிருபர் பேட்டி

தம்முடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த தென்னிந்திய நல உரிமைச்த் தலைவர் 60 வயது முதிர்ந்த பெரியார் நேற்றிரவு மதராஸ் மெயில் நிருபரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தார். 6 மாத சிறைவாசம் பெரியாருடைய சுகத்தில் பெரிய மாற்றத்தை செய்துவிட்டது. மிகவும் களைத்தும் மெலிந்தும் காணப்பட்டார். பெரியாரைக் கண்டு தரிசிப்பதற்காக மக்கள் மாலைகளுடனும் பூச்செண்டுகளுடனும் வந்து குவிந்த வண்ணமாக இருந்தார்கள். பெரியார் சாதாரண பாயில் தரையில் உட்கார்ந்துகொண்டு நண்பர்களைக் குறித்தும் கட்சியினர்களைக் குறித்தும் அன்போடு விசாரித்துக்கொண்டிருந்தார். அவருடைய உடல் நிலையைக்குறித்து கேட்டதற்கு தாம் அன்று மாலை டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார் அவர்களிடம் உடல்நிலை பரி சோதித்துப் பார்த்ததாகவும் டாக்டர் அவர்கள் சிகிச்சை சொல்லி பூரண ஒய்வு எடுக்க வேண்டுமென்று தெரிவித்ததாகவும் பெரியார் சொன்னார். மற்றும் சில வாரங்கள் அவர் ஒரு குளிர்ச்சியான இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தால் அவருடைய ஆரோக்கியத்துக்கு நலமாயிருக்கும் என்று சொன்னார். சென்னையில் மெயில் பத்திரிகை நிருபர் பெரியாரை...

26. பெரியார் விடுதலை

26. பெரியார் விடுதலை

நமது தலைவர், ஈ.வே.ராமசாமிப் பெரியார், கோவைச் சிறையிலிருந்து 22-05-1939ந் தேதி காலை 12-மணிக்கு, எதிர்பாராதவிதமாக எந்த விதமான நிபந்தனையுமின்றி, விடுதலை அடைந்தார்! தமிழ்நாடு இச்சேதி கேட்டு, துள்ளிக்குதித்து ஆனந்த தாண்டவமாடும் என்பதில் சந்தேகமேது! தமிழரின் தலைவர், சிறையில் வாடியிருக்கிறார் என்பது கேட்டுக் கேட்டு, தமிழர் இல்லமெல்லாம், சோக சித்திரமாகவே இருந்து வந்தன! பெரியார் சிறைப்பட்டார் என்ற சேதி கேட்ட தமிழருக்கு, எத்துணை கொதிப்பு, எவ்வளவு ஆவேசம் பொங்கிற்று! எங்கெங்கும் கண்டனங்கள் எழும்பின. பெரியார் பெல்லாரிக்கு வெப்பத்தின் உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது கேட்ட தமிழர், எவ்வளவு சீற்றங்கொண்டனர்! கோவைக்கு அவர் மாற்றப்பட்டார் என்ற சேதி கிடைத்ததும், தமிழரின் மனம் எவ்வளவு குளிர்ந்தது. ஆம்! அவர் துக்கம் தம் துக்கமெனவும், அவர் கஷ்டம் தம் கஷ்டமெனவும், அவர் களிப்பே தம் களிப்பெனவும், தமிழர்கள் கொள்கின்றனர். இப்படியன்றோ, இருத்தல் வேண்டும், ஒரு தலைவரின் நிலை!. கோவையில், பெரியாருக்கு உடல் நலம் குன்றியே இருந்ததாம். நான்கைந்து நாட்களுக்கு...

25. உழைப்பின்  பலன்

25. உழைப்பின் பலன்

இப்பொழுது உலகம் எக்காட்சியை வழங்குகிறது? போராட்டக் காட்சியை என்று எவரும் கூறுவர். போராட்டம்  ஒவ்வொரிடத்தில் ஒவ்வொருவிதமாக நிகழ்ந்து வருகிறது. போராட்டம் சிலவிடங்களில் வகுப்புவாதமாகவும், சிலவிடங்களில் சுரண்டல் காரணமாகவும், சிலவிடங்களில் பொருளாதாரத்தையொட்டியும் நிகழ்ந்து வருதல் கண்கூடு. போராட்டம் என்பது பொது. அது பல வடிவமாகக் காரியங்களை நிகழ்த்தும். என நவசக்தியில், மே 19-ல் தோழர் கலியாணசுந்தரனார் தீட்டியுள்ளார். போருக்குக் காரணம் யாது என்பது பற்றியும், அவர் ஆராய்ச்சி செய்கிறார். யாது அவ்வாராய்ச்சியின் முடிவு? இயற்கை அறத்தின் வழி உலகம் நில்லாது வேறு வழிச் செல்வதே, போராட்டத்திற்குக் காரணம். இது மிக அரியதொரு ஆராய்ச்சி முடிவு. நெருப்பின்றி புகையாது, நீரின்றி நனையாது, அஃதே போல காரணமின்றி எந்தக் கிளர்ச்சியும், எந்தப் போரும் நிகழாது. போலிக் காரணத்தால் நிகழ்வதாயின் அது பகலவன் முன் பனியெனக் கரைந்து போயே விடும். இதுவே இயற்கை. இந்த ஆராய்ச்சிக் கண்கொண்டே, நம் நாட்டுப் போராட்டங்களைக் கவனிக்க வேண்டுகிறோம். இங்கு போருக்குக்...

24. செத்த வாழ்வு வாழ்வதா?

24. செத்த வாழ்வு வாழ்வதா?

சர்வாதிகாரம் என்றால் ஒரே அரசியல் கொள்கை, அதை வற்புறுத்த ஒரே கட்சி, அந்தக் கட்சியிலும் ஒரே தலைவர், அவருடைய இரகசியமான சிறு கூட்டமொன்று, குற்றேவல் புரிய மற்றொரு பெருங்கூட்டம், அந்த தலைவரின் கீதம் பாடி, விளம்பரப்படுத்தி, பிரச்சார பலத்தால் மக்களைக் கட்டிப்போடுவதும், எதிர்ப்பு எங்கு இருப்பினும், கட்சிக்குள்ளாகவே தோன்றினும் நீதி நியாயம் நேர்மை எதையும் கவனியாது உடனே நசுக்கிப் பொசுக்குவதும், சட்டங்கள் இயற்றுவதிலும் அடக்கு முறை போடுவதிலும், வரிகள் விதிப்பதிலும், பொது மக்களைக் கலக்காமலும், அவர்கள் கொதிப்பைப் பொருட்படுத்தாமலும், நடப்பது ? இவைகளே சர்வாதிகாரியின் இலட்சணங்கள். இந்த சர்வாதிகாரம், ஆயுத பலத்தோடு இருந்தால், அது பாசீசம், நாசீசம் என இன்று ஐரோப்பியரால் அழைக்கப்படுகிறது. ஆயுத பலமின்றி, மக்களின் மனதை மயக்கி நடத்தப்படும் சர்வாதிகாரத்திற்கு இந்தியாவே தலைசிறந்த உதாரணம். காந்தியாரே அத்தகைய சர்வாதிகாரி. சர்வாதிகாரிக்கு ஒரே கட்சி. தன் கட்சி மட்டுமே தான் நாட்டில் நிலைக்க வேண்டுமென்பது அவா. ஏன்? வேறு கட்சியும்...

23. வகுப்பு வாதம் ஒழிய வழி!

23. வகுப்பு வாதம் ஒழிய வழி!

வகுப்புத் துவேஷக் குற்றம் (153 செக்ஷன்படி) இருப்பதாக தோழர்கள் ஈ.வெ.கிருஷ்ணசாமி, பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களும் தண்டிக்கப்பட்டனர். உள்ளபடி நாட்டிலே வகுப்புவாத உணர்ச்சி இருப்பதாக ஆட்சி நடத்துபவர் கருதினால் அதனை ஒழிக்க முயல வேண்டாமா? அதனை எங்ஙனம் ஒழித்தல் முடியும்? கிளர்ச்சிகளை அடக்குதல் மூலமா? அன்று! அன்று! சரித்திரம், கிளர்ச்சியின் காரணத்தை ஒழித்தால் தான் கிளர்ச்சி அடங்குமெனச் சாற்றுகிறது. ஆகவே இது சமயம் வகுப்பு வாதம் என்ற நோய் ஒழிய நாம் சிற்சில கூறுவோம். மனித சமூகத்தில் பலவித வகுப்பு பிரிவுகளைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் அடக்கி ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பார் முன்னேற்றத்திற்குப் பலவகுப்பு மக்கள் பாடுபட்டு உழைப்பதைப் பார்க்கின்றோம். பாரதத்தாயின் அருந்தவப் புதல்வர்வர்களில் பறையர், பள்ளர், ஈழுவர், தீயர், பஞ்சமர், ஹரிஜன் என்ற பெயர்களால் 6-கோடிக்கு மேலிட்ட மக்கள் தீண்டாதார் என்று ஒதுக்கி வைத்துக்கொடுமைப் படுத்தி வருவதை பார்க்கிறோம். பல இடங்களில் இத் தீண்டாத...

22. தலைவர்கள் சிறையில்!    தமிழர் கடன் யாது?

22. தலைவர்கள் சிறையில்! தமிழர் கடன் யாது?

தமிழ்நாட்டில், பன்னெடு நாட்களாகத் தாண்டவமாடி வந்த ஜாதீயம், வகுப்புணர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்கள், ஒரு பெரிய இருளாகக் கிடந்தது. அதன் வயப்பட்டு அழிந்த சமூகத்தினர் பலர். அதனை எதிர்த்தொழிக்க இயலாது திகைத்தனர் வேறு பலர்.  அதனை ஓட்ட முயன்று தோற்றனர் சிலர். ஆனால் அந்த இருள் மட்டும் மிக இருமாப்புடன் நந்தமிழ் நாட்டைக் கப்பிக்கொண்டு நின்ற வண்ணம் இருந்தது. எங்கும் தேசீயம் பேசப்பட்டு வந்ததேயன்றி, காரியத்தில், நாட்டுப்பிளவிற்குக் காரணமான கேடுகள் களையப்படவில்லை. அந்த காரத்தில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்த தமிழ் நாட்டில் பதினைந்து ஆண்டுகட்கு முன்பு ஓரொளி தென்பட்டது. அது ஈரோட்டிலிருந்து எழும்பி சிறுகச் சிறுக அந்த காரத்தில் ஊடுருவிப் பாய்ந்து, தமிழ் நாட்டில் பல இடங்களிலும், பழைய சம்பிரதாயங்களைப் பறக்கடித்தது. கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக ?எனவும் ? ஜாதி மதபேத மெலாம் பித்துப்பிள்ளை விளையாட்டு என்றும் அருட்பா அடிகள் கூறிய உண்மையை நாடறியச் செய்ததுடன், சீர்திருத்தவாதிகளின் இயக்கத்தையும் உற்பத்தி செய்தது. அந்த...

21. காந்தீயத்தொல்லை

21. காந்தீயத்தொல்லை

காந்தியாருக்கு எப்படியோ மகாத்மாப் பட்டம் கிடைத்து விட்டது. அந்த மகாத்மாப் பட்டமளித்தவர் ஒரு வெள்ளைமாதரசியானாலும் பார்ப்பனர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தமது ஆதிக்கத்தை இந்தியாவிலே மீண்டும் நிலைநிறுத்த முயன்று வருகின்hறர்கள். பார்ப்பன ஸ்தாபனமான காங்கிரசிலே மதிப்பும் ஆதிக்கமும் பெற வேண்டுமானால் பார்ப்பனர்களின் ஆதரவில்லாமல் முடியாதென தந்திரசாலியான காந்தியாருக்கு நன்கு தெரியும். ஆகவே தேசீயத்தின் பெயரால் ? ராமராஜ்யத்தின் பெயரால் ? தர்ம ராஜ்யத்தின் பெயரால் ?  பார்ப்பனியத்துக்குப் புத்துயிரளிக்க காந்தியாரும் தீராப்பொறியாக இணங்கி வேலை செய்து வருகிறார். அவரது முயற்சி பலிக்க வேண்டுமானால் அவரது கொள்கைகளை மக்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமானால் இதுவரை எவரும் சாதியாத ஒரு காரியத்தை அவர் சாதிக்கவேண்டும். அப்பொழுது தான் அவருக்குத் தனிப் பெரும் தலைமையும் சிறப்பும் கிடைக்கும். ஆகவே இந்தியா பூராவும் மதுவிலக்குச் செய்து அழியாப் புகழையடைய அவர் ஆசைப்படுகிறார். குருட்டாம்போக்கில் 6 மாகாணங்களில் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரட்டி கிடைக்கவே அந்த மெஜாரட்டியை...

20. காங்கரஸ்காரரின் பகிஷ்காரப் புரளி

20. காங்கரஸ்காரரின் பகிஷ்காரப் புரளி

பாபு சுபாஷ் சந்திரபோஸை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க காந்தி கோஷ்டியார் விரும்பாததின் காரணம் அறிய பலர் ஆசைப்படக்கூடும். ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் சமஷ்டி எதிர்ப்பிலும் மிக்க அக்கரை காட்டிவரும் சுபாஷ், காந்தி கோஷ்டியாருக்குப் புளிப்பாய் விட்டது பலருக்கு வியப்பாகவுமிருக்கலாம். ஆனால் காந்தியாருடையவும் அவரது வாலர்களுடையவும் தற்கால நிலையாகச் சரியாக உணர்ந்தவர்களுக்கு சுபாஷ் போஸை காந்தி கோஷடியார் வெறுப்பது ஆச்சரியமாகத் தோன்றாது. காங்கிரஸ் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஒரு காலத்திலே காங்கிரஸ்காரர் எதிர்த்த மாகாண சுயஆட்சித் திட்டத்தை சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமல்நடத்தி வருவதாய் காங்கிரஸ் சர்வாதிகாரியான காந்தியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மந்திரிகளும் மாகாண கவர்னர்களுடனும் சிவிலியன்களுடனும் வெகு அந்நியோந்நியமாக நடந்த தகராறுக்கு இடம் கொடுக்காமல் நிருவாகம் நடத்தி வருகிறார்கள். சுகாதார மந்திரி பல்லாண்டு மாகாண கவர்னர் எங்கள் நண்பன், வழிகாட்டி, ஞானாசிரியர் என சென்னை மாகாண சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜனும் பல்லாண்டு பாடியுள்ளார். பிரிட்டிஷார் பொறுப்புணர்ச்சியுடையவர்கள். இந்தியாவை ஆள உரிமையுடையவர்கள்...

19. வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு?

19. வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு?

நோயாளிகள் வைத்தியனை நாடுவார்கள்; துணி வெளுக்க விரும்புவோர் சலவைத் தொழிலாலரைத் தேடுவார்கள்; சட்டைதைக்க விரும்புவார்கள். தையற்காரனிடம் போவார்கள்; மொழிபற்றிய சந்தேகத்துக் குள்ளானோர் மொழி வல்லார் அபிப்பிராய மறிய விழைவார்கள் இதுவே உலக இயல்பு. நோயாளி கருமானைத் தேடுவதும், சட்டைதைப்போர் வாணியனை நாடுவதும், சீனி வேபண்டுவோர் உப்புக்கடைக்குப் போவதும் உலகவழக்கல்ல. அவ்வாறு செய்வோர் வைத்தியக் காரராகவே மதிக்கப்படுவார்கள். ஆனால் காந்தி ராஜ்யத்திலே இந்த விநோதமே காணப்படுகிறது. கல்வித்துறையிலும் மொழித்துறையிலும் வர்த்தகம் கைத்தொழில் சுகாதாரம், உடை, உணவு, முதலிய துறைகளிலும் பகற்கனவு காணும் காந்தியார் அபிப்பிராயமே நாடப்படுகிறது. காந்தியார் சத்யாக்கிரகியாக இருக்கலாம்; சட்டமறுப்பு வீரராக இருக்கலாம்; பட்டினி நிபுணராக இருக்கலாம்; ஞானியாக இருக்கலாம்; அரசியல்வாதியாக இருக்கலாம்; ராஜ்யதந்திரியாக இருக்கலாம்; எனினும் மொழிவல்லார் என்றோ வர்த்தக கைத்தொழில் சுகாதார நிபுணரென்றோ கூறிவிட முடியாது. ஆயினும் தேசீயப் பொது மொழி விஷயத்தையே அவரது அபிப்பிராயத்தையே சென்னை முதன்மந்திரியார் ஒரு அத்தாரட்டியாக கொண்டிருக்கிறார். கல்வி நிபுணர்கள் கருத்தென்ன? கட்டாய...

18. திருநெல்வேலி மாநாடுகள்

18. திருநெல்வேலி மாநாடுகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா தமிழ்ப் பெண்கள் மாநாடும் தமிழர்கள் மாநாடும் தமிழரிக்க சரித்திரத்திலே முக்கியமாக குறிப்பிடத்தக்க மாநாடுகள் ஆகும். தமிழர் இயக்கத்துக்கு அடிகோலியது திருநெல்வேலி ஜில்லா என்றே சொல்லவேண்டும். பார்ப்பன மதக்கொடுமையினால் தன்மதிப்புணர்ச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியுமின்றி தமிழர்கள் பின் நோக்கிச் செல்வதைக்  கண்ட  காலம் சென்ற திருநெல்வேலி பிஎம்.கைலாசம் பிள்ளையவர்கள் பிரம்ம சமாஜக்கிளையொன்றை திருநெல்வேலியில் ஸ்தாபித்து பகுத்தறிவியக்கத்துக்கும்  தமிழரி யக்கத்துக்கும்  முதல் முதலில் வித்தூன்றினார். அன்று முதல் பார்ப்பன மதிப்பிடையிலிருந்து விடுதலை பெறவும் தமிழர் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழர் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கவும் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்தன. ஜஸ்டிஸ் கட்சி தோன்றியபோது அம்முயற்சிகள் பலனடைந்தன. பழைய கதை முதலிரண்டு சீர்திருத்தச் சட்டசபைகளிலும் தமிழர்களே திருநெல்வேலி ஜில்லாப் பிரதிநிதிகளாக வீற்றிருந்தனர். ஜில்லா முழுதும் தமிழருணர்ச்சி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்கு முன் பொது ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று வந்தவர்கள் தலை குனியலாயினர். இவ் வண்ணம் தமிழர் இயக்கத் தோற்றுவாயாகவும்...

17. காந்தியார் தோல்வி

17. காந்தியார் தோல்வி

பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலம்; ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாதென்பார்கள். இப் பழமொழி காந்தியார் விஷயத்தில் சரியாகப் பலித்து விட்டது. போக்கு முட்டும் போது பட்டினி கிடந்து உலகத்தை ஏமாற்றுவது காந்தியாரின் வாடிக்கையாக இருந்து வந்தது. 1914-ல் தென்னாப்பிரிக்காவில் 14 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உண்ணாவிரத அரிச்சுவடி கற்றார். 1915-ல் ஆமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் பலாத்காரத்தில் இறங்கியதற்காக 3 நாள் உண்ணாவிரதமிருந்து ஆலைத்தொழிலாளரை நல்வழிப்படுத்த முயன்றார். 1922-ல் சௌரி சௌரா பலாத்காரக் கொடுமைக்காக உண்ணாமிருந்து, கண் மூடித்தனமாய் சட்டத்தை மீற உபதேசம் செய்ததற்குப் பிராய்சித்தம் செய்து கொண்டார். 1924-ல் ஹிந்து முஸ்லிம் பிணக்கை ஒழிக்க 21 நாள் உண்ணாவிரதமிருந்தார். பலன் பூச்சியம்தான். இந்து-முஸ்லிம் பிணக்கு இன்னும் ஒழியவில்லை. 1924-ல்சபர்மதி ஆச்சிரம ஒழுங்கீனக்ளைப் போக்க உண்ணாவிரதமிருந்தார். ஆச்சிரம வாசிகள் ஒழுக்க முடையவர்களானார்களா! இல்லவே இல்லை. கடைசியில் ஆசிரமந்தான் கலைக்கப்பட்டது. 1932-ல் ஹரிஜனங்களுக்குத் தனித் தொகுதியளித்ததை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதமிருந்தார்....

16. காந்தியார் புதுக்கோலம்

16. காந்தியார் புதுக்கோலம்

காந்தியார் ஒரு நாலணா காங்கிரஸ் மெம்பர் கூட அல்லாமலிருந்தாலும் கிரியாம்சையில் காங்கிரஸ் சர்வாதிகாரியாக இருந்துவந்ததை உலகம் அறியும். மாகாண சுய ஆட்சித் திட்டத்தை ஒழிக்கவேண்டும். அதைக் கண்ணெடுத்தும் பார்க்க கூடாது. சட்ட சபைகளை பகிஷ்கரிக்கவேண்டும். பதவி ஏற்கக்கூடாது என்றெல்லாம் மாயக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் புகுவதற்கும் எட்டு மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைப்பதற்கும் காரணஸ்த வராயிருந்தவர் காந்தியார் என்பதையும் உலகம் அறியும். பதவியேற்பதும் மாகாண சுயாட்சித் திட்டத்தை ஏற்று நடத்துவதும் காங்கிரஸ் தீர்மாணங்களுக்கு முரணாக இருந்தாலும் உலகப் பெரியாரான காந்தியார் யோசனைப்படியே பதவியேற்றிருப்பதினால் அவ்வாறு செய்தது காங்கிரஸ் கொள்கைக்கு முரணாயிருப்பதை காந்தியார் பேரிலுள்ள மாய பக்தியினால் கிறுக்கினால் படிப்பாளிகளும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு கருவியாக வைத்துக் கொள்ளும் பொருட்டே காந்தியார் திட்டங்களிலும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு...

15. காந்தீய வெற்றியா? கபட நாடக வெற்றியா?

15. காந்தீய வெற்றியா? கபட நாடக வெற்றியா?

திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு சில மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பாபு சுபாஷ் சந்திரபோஸ் பெயரை இரண்டாம் முறையும் சிபார்சு செய்தார்கள்; சில மாகாணத்தார் மௌலானா அபுல் கலாம் ஆசாத்  பெயரையும், டாக்டர் பட்டாபி சீதாராமய்யா பெயரையும் சிபார்சு செய்தார்கள். ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாம் முறையும் காங்கிரஸ் தலைவராவது காந்தியாருக்குப் பிடிக்க வில்லையாம். ஆகவே தேர்தலுக்கு நிற்கக் கூடாதென்று காந்தியார் ஒரு தந்திச் செய்தியனுப்பினாராம். இது காந்தி கோஷ்டியாருக்கு மட்டுமே தெரியும். பொது ஜனங்களுக்கோ ஏனைய காங்கிரஸ் வாதிகளுக்கோ தெரியாது. பட்டாபி சீதாராமய்யா தலைவராக வேண்டுமென்பது காந்தியார் விருப்பமாம். இதையுணர்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதுமை காரணமாகத் தாம் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லையென்றும் பட்டாபி சீதாராமய்யாவை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்றும் நாசூக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டுப் பின் மாறிக்கொண்டார். மௌலானா சாகிப் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்று சிபார்சு செய்தது பாபு சுபாஷ் போசுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அத்துடன்...

14. ஆச்சாரியார் ஆட்சிப் பலன்

14. ஆச்சாரியார் ஆட்சிப் பலன்

மஞ்சட் பெட்டிக்காரர் மந்திரிமார்ஆன அன்றே நாடு குட்டிச்சுவராகும் என்று அரசியல் ஞானமும் உலக அனுபவமும் உடையவர்கள் எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ்காரர் பதவிபெற்று 603- நாட்களுக்குள் தேச நிருவாகம் செய்ய அவர்களுக்கு ஆற்றவில்லையென்பதும் சட்டங்களை மிகவும், கறுப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்தவும் கடற்கரை குளக்கரை அந்திக்குடிக் கூட்டங்களில் கூச்சல் போடவும் மட்டுமே அவர்களுக்குத் திறமையுண்டென்பதும் நிரூபணமாகிவிட்டன. தேசீயக் கடனை ஒழிக்கப்போவதாய் காங்கிரஸ் வீரர்கள் கூறியிருந்தும் நமது மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் பழைய தேசீயக் கடன்களை ஒப்புக்கொண்டு சுமார் 4 1/2- கோடி ரூபாய் கடனும் வாங்கிவிட்டார். இவ்வருஷம் 1 1/2கோடி கடன் வாங்கப் போகிறாராம். இவ் வண்ணம் 603-நாட்களில் மாகாணத்தின் தலைமீது சுமார் 6கோடி ரூபாய் கடன் பளுவை ஏற்றிய ஒருவருக்கு தேச நிருவாகம் நடத்த ஆற்றலுண்டென யாராவது மனந்துனிந்து கூற முன் வருவார்களா? வரவே மாட்டார்கள். தாங்கமுடியாத வரிப்பளுவால் நாட்டு மக்கள் நசுங்குவதாயும் தாம் பதவியேற்றால் வரிகளையெல்லாம் குறைத்து விடுவதாயும்  ...

13. காங்கிரஸ் வீணர் கர்மபலன்

13. காங்கிரஸ் வீணர் கர்மபலன்

காங்கிரஸ்காரர் வீரத்தனத்தின் பயனாகவோ பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளின் பெருந்தன்மையின் பயனாகவோ அல்லது பிரிட்டிஷ் ஆட்சியின் இயற்கைப் பயனாகவோ மாகாணங்களுக்கு சுயஆட்சி அளிக்கப்பட்டது. எல்லா மாகாணங்களையும் ஒன்றுபடுத்தி இந்தியாவை ஒரு நேஷனாக்க சமஷ்டி அரசுத் திட்டமும் வகுக்கப்பட்டது. மாகாண சுய ஆட்சித் திட்டத்தில் பல குற்றம் குறைகள் இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு அமல் நடத்தி சாத்தியமான நன்மைகளை நாட்டுக்கும் மக்களுக்கும் செய்து மேற்கொண்டு அதிகப்படியான நன்மைகளைப் பெறலாமென நம்பி காங்கிரஸ்காரர் நீங்கலாக உள்ள இந்திய அரசியல் வாதிகள் எல்லாம் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றனர். ஆனால் ஏனைய அரசியல் வாதிகளைப் போல குறைகூறிக்கொண்டே தாமும் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றால் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தமக்கும் வித்தியாச மில்லாது போகுமே என எண்ணி காங்கிரஸ்காரர் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை நிராகரிக்கவேண்டுமென்றும் அதில் ஏராளமான பாதுகாப்புகளும் விசேஷாதிகாரங்களும்அடங்கியிருப்பதினால்நாட்டுக்குநன்மையே விளையா தென்றும் ஏகாதியத்தியத்தை வலியுறுத்துவதற்கே அது பயன் பெறுமென்றும் அந்நியரால் வகுக்கப்பட்ட அத்திட்டத்தை...

12. காங்கிரஸ் கொடுங்கோலாட்சி

12. காங்கிரஸ் கொடுங்கோலாட்சி

பேச்சுச் சுதந்தரம், கூட்டச் சுதந்தரம், எழுத்துச் சுதந்தரம், அபிப்பிராய சுதந்தரம் முதலியவை களைப் பெறுவதற்காகவே போராடுவதாக காங்கிரஸ்காரர் தேர்தலுக்கு முன் சொல்லிக்கொண்டார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலே மக்கள் இந்த சுதந்தரங்களையெல்லாம் இழந்து திண்டாடியதாகவும் காங்கிரஸ்காரார் பொய் பிரசாரம் செய்தார்கள். காங்கிரஸ்காரருக்கு ஏராளமான பத்திரிகைகளும் பிரசாரர்களும் இருந்ததினால் அவர்கள் செய்த பொய்ப் பிரசாரங்களை பாமர ஜனங்கள் மெய்யென நம்பினார்கள். காங்கிரஸ்காரர் சட்ட சபைகளைக் கைப்பற்றி பதவி ஏற்றால் மக்கள் எல்லா சுதந்தரங்களையும் வெகு சுளுவாகப் பெற்றுவிடுவார்கள் என நம்பி வாக்காளர்கள் சென்ற தேர்தலில் மஞ்சள் பெட்டியை நிரப்பினார்கள். அதன் பயனாய் 7-மாகாணங்களில் காங்கிரஸ்காரர் மந்திரி சபையும் ஸ்தாபித்தார்கள். காங்கிரஸ்காரர் பதவி வகிக்கும் மாகாணங்களிலே காந்தி ராஜ்யம் ? ராமராஜ்யம் ? தர்ம ராஜ்யம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. காந்தியார் அஹிம்சா மூர்த்தி யல்லவா? எனவே அஹிம்சா தர்மப்படியே காங்கிரஸ் மந்திரிகள் நிருவாகம் நடத்துகிறார்கள் என பாமர ஜனங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். காங்கிரஸ் ராஜ்ய யோக்கியதை...