வாலாஜாபாத் சொற்பொழிவு
ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் இதுவரை செய்த வேலைகளையும் செய்யப்போகும் வேலைகளையும் பற்றி சொன்னது தமக்கு மிகுந்த திருப்தி அளிக்கின்றதெனவும் இவ்வளவு வேலைகள் அவர் செய்திருந்தாலும் தற்கால பார்ப்பன அகராதிப்படி அவர் பெரிய தேசத்துரோக ஜாப்தாவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 பார்ப்பன ரல்லாத ஜில்லா போர்டு மெம்பர்களில் இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்கள் தான் “ தேசத்துரோகிகள்” என்று சொல்லப்படுகிறார்கள் என்றும், அவர்கள் செங்கல்பட்டு போர்டு ஸ்ரீமான் ரெட்டியாரும் தஞ்சாவூர் போர்டு ஸ்ரீமான் பன்னீர் செல்வமுமே யாவார்கள் என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தைவிட ஸ்ரீமான் எம்.கே. ரெட்டியாரே அதிகமான அதாவது பிராயசித்தமே இல்லாத “ தேசத்துரோகி” என்றும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் தன்னுடைய ஆட்சியில் பல பார்ப்பனருக்கு உத்தியோகம் சோறு, படிப்பு முதலியவைகள் கொடுக்கிறார் என்றும், இவர் அடியோடு மறுக்கிறார் ஆதலால் தான் பெரிய “ தேசத்துரோகியாகி”விட்டார் என்றும் அப்பேர்பட்ட தேசத்துரோகியை பாராட்டும் கூட்டத்திற்கு தேசத்துரோகிகளுக்கு உபாத்தியாயரான ஸ்ரீமான்...