ஒரு விசேஷம்

சென்னை சட்ட சபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது “இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சி யாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு”மென்று பேசிக் கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப் பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில் எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம் சுப்பராயன் உடனே ஜனாப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச்சிமிட்டி உட்காரச்சொன்னாராம். இந்த காட்சியைப்பார்த்து சட்ட சபையிலுள்ள மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம். சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.!

குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.04.1927

You may also like...

Leave a Reply