“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்

நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப் பட்டிருக்கின்றன.
நமது சர்க்கார் உத்தியோகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வ ளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங் களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும் விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு உரிமைக்காரரா? அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா? என்பது வெளிப்பட்டுவிடும். கணக்கு விபரம்:-
கெஜட்டட் ஆபீசர்
மாதம் 1க்கு மாதம் 1க்கு மாதம்1க்கு உத்தியோகம் 100 ரூபாய்க்கு 35க்கு மேல் மாதம் 1க்கு மேல் சம்பளம் சம்பளம்
250 க்கு மேல்பட்டு பெறக்கூடிய பெறக்கூடிய
5500 ரூபாய் வரை வர்கள் வர்கள்
சம்பளம் பெறக்கூடியவர்கள்

பார்ப்பனர்      402       3409       8197

பார்ப்பனரல்லாத
இந்துக்கள்      215      1901      5238

தாழ்ந்த வகுப்பார்      2      54

முகமதியர்கள்      53      323     1139

கிறிஸ்தவர்கள்      109      456       643

100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம்      = 12008

100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார்
எல்லோரும் சேர்த்து       = 10133

இவற்றுள் 100-க்கு 25 வீதம் உள்ள தாழ்த்தப்பட்ட
வகுப்பார்.       = 56


இதோடு முனிசீப்பு ஜட்ஜிகளின் கணக்கு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதையும் இந்தக் கணக்கை வெளியிட்டவர்கள் அந்தக் கணக்கையும் வெளியிட ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும் சுயராஜ்யம் வந்தாலும் இந்த கணக்குதான் ஏற்படுமா அல்லது வேறு கணக்கு ஏற்பட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்த்து வகுப்புரிமை வகுப்பு வாதம் வேண்டாம் என்று சொல்லும் “தேசீயவாதிகள்” வகுப்பு வாதம் அல்லது வகுப்பு உரிமை தவிர வேறு வழிகளால் முக்கியமாய் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சமத்துவமடைய முடியுமா? என்பதையும் உத்தியோகம் பார்ப்ப தும் “சுயராஜ்ஜியத்தில்” ஒன்று அல்லவா என்பதையும் தெரிவிக்க வேண்டு கிறோம்.

குடி அரசு – கட்டுரை – 27.03.1927

You may also like...

Leave a Reply