வெட்கப்படுகிறார்கள்

சென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார் அக்கட்சி யில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று நன்றாய்த் தெரிகிறது. அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒறே ஒரு சூசனை காட்டு கிறோம். அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால் நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக் கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல் போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப் படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பன ரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தை யும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக.

குடி அரசு -– துணைத் தலையங்கம் – 10.04.1927

You may also like...

Leave a Reply