கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’
‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘திராவிட மாடல்’ குறித்து விளக்கினார். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகிற போதெல்லாம் அடிக்கடி “திராவிட மாடல்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அது குறித்த பல்வேறு, கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பு பெறாத மக்கள் கூட்டத்திற்கு அரசின் அனைத்தை யும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற முடிவு, ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டது தான் ‘சைமன் கமிசன்’. அப்போது, தமிழ்நாட்டு அரசியலில், அதாவது சென்னை மாகாண அரசியலில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் (நீதிக் கட்சி) தொடங்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள், பெரும் பணக்காரர்களும், மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தாலும், இயக்கத்தின் நோக்கமாய் அவர்கள் கூறியது, “அனைத்து மக்களுக்குமான சேவைகளை கொண்டு போய் சேர்ப்பது தான்”. இன்னும் சொல்லப்...