நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 4.3.2022 அன்று காலை 11 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 86 சந்தா தொகை 21500 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. மடத்துக்குளம் மோகன், தலித் சுப்பையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. இயக்க வளர்ச்சிக்கு மாதம் ஒருமுறை தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
  3. புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
  4. குமாரபாளையம் நகர செயலாளராக செ.வடிவேல் செயல்படுவார் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக விஜயகுமார் மட்டுமே செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு நகர செயலாளர் பூபதி, வெண்ணந்தூர் ஒன்றிய அமைப்பாளர் பா.ராமச்சந்திரன், குமாரபாளையம் தண்டபாணி, செ.வடிவேல், பிடல் சேகுவேரா, சுமதி சசினா பள்ளிபாளையம் பிரகாசு, நாகராசு, மேட்டூர் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4-3-2022  அன்று இராசிபுரத்தில் நடந்த நாமக்கல் மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டக் கலந்தாய்வு கூட்டத்தில், திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி. பாலு, ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வளர்ச்சி நிதிக்கென ரூபாய் 10,000/-த்தை கழகத் தலைவரிடம் வழங்கினார்.

காவலாண்டியூர் மாதுராஜ் (தமிழன் லேத், குமாரபாளையம்), தனது மகன் திலகன்-சந்தியா ஆகியோருக்கு 4-3-2022  அன்று நடந்தேறிய  மணவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ. 5,000 /-த்தை கழகத் தலைவரிடம் வழங்கினார்.

 

பெரியார் முழக்கம் 10032022 இதழ்

You may also like...