மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்நாட்டரசின் 2022 திருவள்ளுவர் விருதாளரும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்து இந்திய தமிழ்ச் சங்க பேரமைப்பின் தலைவரும், திராவிடர் கழகத்தின் மூத்த  கருஞ்சட்டைத்  தோழருமான மு.மீனாட்சி சுந்தரம் (முத்து செல்வன்) நினைவேந்தல் நிகழ்வு 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பெங்களூர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில், பெங்களூர் தமிழ்ச் சங்கம்  நடத்தியது.

இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கோ. தாமோதரன் தலைமை தாங்கினார்.  திராவிடர்  விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீனாட்சி சுந்தரத்தின் (முத்து செல்வன்) உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சானகிராமன், க.த.ம.இ. தலைவர் சி. இராசன்,  பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் அமைப்பாளர் கி.சு. இளங்கோவன், கருநாடக திமுக அமைப்பாளர் இராமசுவாமி, உ.த.க. தலைவர் மதலைமணி, மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ், கருநாடக அதிமுக செயலாளர் எஸ். டி. குமார், பெங்களூர் தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர் இராம சுப்ரமணியன், பெங்களூர் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் லயன் பத்மநாபன், மீனாட்சி சுந்தரனாரின் மருமகன்கள் ஜெய்சங்கர், மருமகன் சுவாமிநாதன், பெங்களூர் தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் அமுத பாண்டியன், போர்முரசு கதிரவன், கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி அமைப்பின் பொறுப்பாளர் புலவர் கார்த்தியாயினி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

நினைவேந்தல் கவிதைகளை பாவலர் தமிழடியான், பொதுவுடமைக் கட்சி தோழர் சௌரி ஆகியோர் பாடினர். நிகழ்வைத் தொகுத்து வழங்கியவர் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர், தி.வி.க. பொறுப்பாளர் இல. பழனி ஆவார்.

இந்நிழ்வை ஏற்பாடு செய்த பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கும், அனைத்து இயக்கத் தலைவர்களுக்கும் மீனாட்சி சுந்தரனாரின் (முத்து செல்வன்) இளைய மகள் பொற்செல்வி நன்றியுரை கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.

 

பெரியார் முழக்கம் 07042022 இதழ்

You may also like...