செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்
தி.வி.க. செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1000/- நன்கொடை வழங்குவது என்று செயலவையில் முடிவெடுக்கப்பட்டது. செயலவை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு மூன்று பேர் உடனடியாக நன்கொடையையும் வழங்கிவிட்டனர். இது தவிர கழகத்தின் முழு நேர செயல்பாட்டாளர்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான செலவை தோழர்கள் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர். அதன்படி தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஆசிரியர் சிவகாமி, இராம இளங்கோவன், நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் டேவிட் ஆகியோர் முழு நேரப் பணியாளர் நியமன திட்டத்துக்கு மாதம் ரூ.1000/- வீதம், வருடத்துக்கு ரூ.12,000/- வழங்குவதாக அறிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, காவை ஈசுவரன் முழுநேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000/- வழங்குவதாக அறிவித்தனர். நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் மூன்று செயலவை உறுப்பினர்கள், செயலவை உறுப்பினருக்கான கட்டணமாக ரூ.1000 செலுத்துவதாகவும், முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு மூவரும் இணைந்து ஆண்டுக்கு ரூ.7000 வழங்குவதாகவும் அறிவித்தனர். மதுரை மாவட்டம் சார்பாகவும் ரூ.10,000 தருவதாக அறிவித்தனர். கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.20,000/- வழங்குவதாக அறிவித்தார்.
பெரியார் முழக்கம் 07042022 இதழ்