Category: கட்டுரைகள்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது....

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை –   எட்வின் பிரபாகரன்

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்

வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,  சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

தென் மாநிலங்கள் பிரிவினையைப் பேசுகின்றன என்ற அபத்தமான வாதங்களை அமித் ஷா சமீபத்தில் வைத்திருந்தார். ஒன்றிய அரசே தனது பாரபட்சமான செயல்பாடுகளால் தென் மாநிலங்கள் வேறு, வடமாநிலங்கள் வேறு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு,  பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என இப்போது வெற்றுக் கூச்சலிடலாமா என்று தென் மாநிலங்களில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.-யும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சசிதரூர் பார்ப்பனர்கள் மேடையிலேயே இந்த விவாதத்தை துணிச்சலோடு எழுப்பியிருக்கிறார். துக்ளக் இதழின் 54-வது ஆண்டு விழா சென்னையில் (15.01.2023) நடைபெற்றது. வழக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்களே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். ஆனால் இம்முறை  சசிதரூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் ஏன் துக்ளக் விழாவில் கலந்துகொள்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பார்ப்பனர்கள் குழுமியிருந்த அந்த அரங்கில் சசிதரூர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போது நிதிப் பகிர்வு கொள்கையால் தென்...

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

“உலகம் முழுவதும் பல நாடுகளில் நாத்திகக் கொள்கைகள் நசுக்கப்படுவதும், நாத்திகர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதும், முன்னொரு காலத்தில் வழமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் சில நாடுகளில் அத்தகையதொரு நிலையே தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாத்திகர்களுக்கு எதிரான எதிர்மறை எண்ணங்களும், அச்சுறுத்தல்களும், பாரபட்சங்களும், விரோதங்களும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் பல்வேறு வலதுசாரி நாடுகளில் இன்றளவும் பரவலாக இருக்கின்றன. நாத்திகர்கள் என்றாலே “ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்கிற அடிப்படை முகாந்திரமற்ற வெறுப்புப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. சொந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசுகளால் தண்டிக்கப்பட்டு, ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்படியான வாழ்க்கையை நாத்திகர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதெல்லாம் தாண்டி நாத்திகர்கள் தங்களை மனிதநேயர்களாக (humanist) அடையாளப்படுத்திக் கொண்டு, சர்வதேச அளவில் மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடும், பாலின உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், LGBTQ+ உரிமைகளை வென்றெடுக்கவும் தொடர்ச்சியாக...

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

(ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 24.12.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மண் தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசிய உரை) இந்த கூட்டத்தை சுற்றும் முற்றிலும் பாருங்கள்.. நாகரீகமான உடை உடுத்தியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அறிவார்ந்த பெருமக்கள், பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ், எம்.காம், எம்.ஏ.பி.எல் போன்ற பட்டங்கள், பையில் பணம், ஒரு மகிழ்ச்சியான  உளநிலை….  நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இந்த உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.  மகிழ்ச்சியான ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் இது ஒரு நூறாண்டுகளுக்குள் உருவானதுதான். நான் பேசுவதை உரையாக யாரும் கருத வேண்டாம், ஆனால் உருப்படியான தகவல்களாக கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த உலகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கிடையாது. பல தெருக்களில் நம்மை போன்ற பெரும்பான்மையானோர் நடக்கவே உரிமை கிடையாது. சில ஜாதிகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. சொத்து வைத்துக்கொள்ள...

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

1980-களில் பாஜக தொடங்கப்பட்ட சமயத்தில் அது முழுக்க பார்ப்பன – பனியாக்கள் கூடராமாகத்தான் இருந்தது. இப்போதும் அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் அவர்கள்தான் இருக்கின்றனர் என்றாலும், ராமர் கோயில் இயக்கத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. இப்போது கோயில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் மீண்டும் பார்ப்பனர்களுக்கே பதவி என்ற வழியில் வேகமாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. ஏற்கெனவே பார்ப்பனரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வராக நியமித்திருந்த பாஜக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தானிலும் பார்ப்பனரான பஜன் லால் சர்மாவை முதல்வராக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா என்ற பார்ப்பனரையும்,  சத்தீஸ்கர் துணை முதல்வராக விஜய் சர்மா என்ற பார்ப்பனரையும் நியமித்தது பாஜக. ஏற்கெனவே உத்தரப் பிரதேச துணை முதல்வராக பிரஜேஷ் பதக் என்ற பார்ப்பனரும், மகாராஷ்டிர துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனரும் இருக்கிறார்கள். மக்கள் மிகச்சொற்பமாக இருக்கிற பார்ப்பனர்கள்...

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

தமிழ்நாடு நவீனமடைவதற்கும் அறிவியல் மனப்பான்மையோடு வளருவதற்கும் மிக முக்கியக் காரணம் பெரியார். அறிவியலை உள்வாங்கிக் கொண்டு, நவீனங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை பெரியாரிடம் இருந்தது. திராவிட இயக்கம் ஆட்சியில் அமர்ந்தபோது அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கிடைத்தது. அதனால்தான் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னே நிற்கிறது தமிழ்நாடு. வடக்கே உள்ள கான்பூர் ஐஐடி-யிலும் தெற்கே இருக்கிற கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான் இந்தியாவில் முதன்முதலாக கணினிப் பயன்பாடு தொடங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. 1965ஆம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பெரியாரிடம் இப்படியொரு கருவி வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். உடனே அதைப் பார்க்க வேண்டுமென்றார் பெரியார். வயதோ 86. படியேற முடியாமல் இருந்த நிலையில், நாற்காலியில் அமரவைத்து பெரியாரை மாடிக்கு தூக்கிச் சென்று கணினியைக் காட்டினர். அது எப்படிச் செயல்படுகிறது என ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டுக்கொண்டதுடன், அதன் செயல்பாடுகளை சோதித்தும் பார்த்து வியந்தார் பெரியார். கம்ப்யூட்டருக்கு...

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

“மராட்டிய மாநிலத்தில் மும்பையுடன் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை இம்மாதத் தொடக்கத்தில் (ஜன.12) பிரதமர் மோடி திறந்துவைத்தார். 22 கிமீ நீளம் கொண்ட இப்பாலம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மிக நீண்ட கடல் பாலம் இதுதான்” என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இன்னொரு செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டன. இந்த 22 கிமீ நீள பாதையில் பயணிக்க சுங்கக் கட்டணம் 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி நாடு முழுக்க எல்லா சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இப்படித்தான் தாறு மாறாக இருக்கப் போகிறது என்பதுதான் கடந்த 9 ஆண்டுகால ஆட்சி உணர்த்துகிறது. 2014-15 நிதியாண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 145. ஆனால் அதை படிப்படியாக உயர்த்தி தற்போது 959-ஆக அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. அதிலும் குறிப்பாக கொரோனா பேரிடருக்குப் பிறகு மட்டும் 650-க்கும் அதிகமான...

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) தென்னிந்தியாவில்  கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே...

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எத்தனையோ போலியான பண்பாட்டு பெருமிதக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, உண்மை வேறாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு நீங்கள் சென்றால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு, அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோதான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக...

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம்     ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மாநிலங்களுக்கு   நிதியை  பகிர்ந்தளிக்க   அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின்...

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

கோயில் விடுதலை அரசியலா? அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் ரமேஷ், அமெரிக்கை நாராயணன், ரங்கராஜன் நரசிம்மன், சுமந்த் ராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இவர்களின் பின்னணி என்னவென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்து குறித்து விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நீதிபதி இப்படி அரசியலை பேசலாமா? என்பதை சுட்டிக்காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சு.துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு...

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

(01.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி)   1953இல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. 1956-இல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை மொழிவழி மாநிலங்களாக அமைகிறது. இந்த ஐந்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியபோது, பெரியார் இதை கடுமையாக எதிர்த்து,  தற்கொலைக்கு சமம் என்றார். திருவனந்தபுரத்தில் நேரு இதைப்பற்றி கேட்கும்போது “பெரியார் இதை எதிர்க்கிறார், ஏற்க முடியாது” என்று கூறினார் காமராசர். நேருவுக்கு பெரியார் என்றால் யாரென்று தெரியும். அதனால் சத்தமில்லாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார். இப்படி பெரியார் சொன்னவைகள்தான் நீதிக்கட்சி ஆட்சி முதல் சட்டங்களாக ஆனது, பெரியார் சொன்னதுதான் காமராசர் ஆட்சியில் திட்டங்களாக மாறின. மக்களுக்கு கல்வியை கொடுங்கள் என்று காமராசரிடம் பெரியார் சொன்னபோது அதை அப்படியே மறுக்காமல் நிறைவேற்றினார் காமராசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஐந்து மைல் தொலைவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளிகள் வந்தன. அப்பொழுதுதான் எல்லாரும் படிக்க வந்தார்கள். மயிலாடுதுறை...

தலைமறைவு தியாகம்

தலைமறைவு தியாகம்

“தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள்தான் என்று மார்தட்டுகிறார்”அண்ணாமலை. இப்படி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க நாங்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது என்பதே எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை என்றும் அண்ணாமலை வேதனைப்படுகிறார். அண்ணாமலையின் இந்த கட்சி வளர்ப்புப் பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது கூட வழங்கலாம். ஆருத்ரா நிதி நிறுவனத்தை நடத்தி ரூ.2000 கோடி மக்களின் பணத்தை அண்ணாமலையின் சீடர்கள் ஹரிஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் வாரி சுருட்டிக்கொண்டார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவையெல்லாம் மகத்தான தியாகங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. கைது செய்யப்பட்ட ஹரிஷ் பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர். இந்த மாநிலப் பதவிகூட ஏதோ லாட்டரி சீட்டு போல அவருக்கு கிடைத்துவிடவில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து பாஜக தலைமைக்கு உண்டியல் காணிக்கை செலுத்திவிட்டுத்தான் இந்த பதவியை அவர் பெற்றார். அப்படித்தான் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் வாக்குமூலம்...

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

“வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தை கொண்டிருக்கிறது, தெற்கு முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது” என்றும், “தென் மாநிலங்களுக்கென தனி தலைநகர் ஒன்றை அமைக்க வேண்டும்” ன்றும் பரிந்துரைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இன்றும் வடக்கு- தெற்குக்கு இடையிலான இந்த பாகுபாடு அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாநில மக்களின் தாய்மொழியை அழித்து இந்தியை பொதுமொழி ஆக்கியதுபோல, தென்னிந்தியாவில் மாற்றிவிட இயலவில்லை. மத ரீதியாக வடக்கில் வேரூன்றிய பாஜகவால், தென்னிந்தியாவில் வேரூன்ற முடியவில்லை. கல்வி – வேலைவாய்ப்பு – சுகாதாரக் கட்டமைப்புகளில் தென்னிந்தியாவுக்கு நிகராக வட இந்தியாவால் முன்னேற முடியவில்லை. ஆனால் “வடக்கு வேறு, தெற்கு வேறு… என்று தென்னகத்தில் இருந்து குரல் எழும்போதெல்லாம் அதைப் பிரிவினைவாதம் என்கிறது பாரதிய ஜனதா கட்சி....

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு  அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து  அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார். சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை...

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

திரைப்பட நடிகரும் பகுத்தறிவாளருமான தோழர் மாரிமுத்து அவர்கள் சென்னையில் 08.09.2023 அன்று காலை 10 மணியளவில் முடிவெய்தினார். தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் திரைப்படத் துறைக்கு வந்த அவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நீண்ட காலம் ஊடக வெளிச்சம் பெறாமல் இருந்த அவர் அண்மைக்காலமாக அவர் சீரியல் வழியாகவும், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் வழியாகவும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றார். தனக்கு ஜாதி கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கருப்புச் சட்டை தான் தனக்கு பிடித்த உடை என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியதோடு தனது மகன், மகளுக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதே தனது நோக்கம் என்றார். நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சிகளான ‘கிணறு காணாமல் போவது, போலிஸ் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிவிடாதே’ போன்ற காட்சிகளை உருவாக்கியதே மாரிமுத்து தான் என்று நடிகர் வடிவேலு பதிவு...

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள். வர்ணாசிரமம் வேறு; சனாதனம் வேறு என்று கூறும் நீங்கள், வர்ணாசிரமத்தை எதிர்க்கிறோம் என்று கூறத் தயாரா? சனாதனம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகிறார்கள், அந்த வாழ்க்கை முறை என்ன? அதன் பண்புகள் என்ன என்பதை விளக்குவார்களா? வருணாசிரமம் அல்லாத சனாதன வாழ்க்கை முறை எப்போது எந்த காலத்தில் இங்கே நிலவியவது? பால்ய விவாகம், சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடுமை தீண்டாமை, பிராமணன் வணக்கத்தக்கவன், சூத்திரன் பிராமணர்களின் வைப்பாட்டி மகன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து காவி வெள்ளை ஆடை அணிவித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல், 10 வயது பிராமண சிறுவன் 70 வயது சூத்திர முதியவரை வாடா போடா என்று அழைத்து இழிவுபடுத்துதல், இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை...

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறுவேறாகக் கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவி எடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன. ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதி வருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்” என்றான். அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும் கூட எழுதப்பட்டு வருகின்றன. ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’ என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள்...

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

84. மாடர்ன் தியேட்டர் தயாரித்த மாயாவதி திரைப்படம் தோல்வியை தழுவியது, அதை சரி செய்ய கலைஞரின் மந்திரி குமாரி நாடகத்தை திரைப்படமாக்கி கலைஞர் வசனம் எழுத மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார். பல தொடக்க விழாவுக்கு நல்ல நாள் தேதி குறிக்க ஒரு சோதிடரை கூட்டி வந்தார்கள். அவரிடம் கலைஞர் தோல்வி அடைந்த மாயாவதி படத்திற்கும் நீங்கள் தானே தொடக்க விழாவுக்கு நல்ல நாள் பார்த்தீர்கள் என்று கேட்க சோதிடர் தலை குனிந்து நின்றார். 85. பராசக்தி படம் குறித்து பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு கூறினார், ‘இந்த படம் பார்த்ததும் நின்று விடும் அளவில் ஒரு கலைக்காட்சி அல்ல, பார்ப்போர் உள்ளத்தைத் தடவி அதில் படிந்துள்ள வஞ்சக சூழ்ச்சி கருத்துக்களைத் துடைத்து வெளியேற்றி அங்கு குடிகொள்ளும் அறசக்தி என்று குறிப்பிட்டார் ’ 86. பராசக்தி படத்துக்கு போட்டியாக பக்தியை வளர்க்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம் தான் அவ்வையார். அதில்...

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 22 – கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு விளம்பரத்திற்காக மட்டும் ரூ.2 ஆயிரத்து 700 கோடி அளவிற்கான தொகையை செலவிட்ட நிலையில், இந்த தொகை, ஓராண்டில் 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு இணையான ஒன்றாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய மான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்த னர். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்டு இருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தற்போது பதில ளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் விளம்பரச் செலவு ரூ. 2 ஆயி ரத்து 700 கோடி என தெரிவிக்கப்பட்டு உள் ளது. கடந்த 2014 – 2015 நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.424.84 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு...

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

1925-இல் நீதிக்கட்சியில் இருந்த கிஆபெ விஸ்வநாதன் திருச்சி நகர நீதிக்கட்சி தலைவர் மகனை உடன் அழைத்துச் சென்று முதன்முதலில் பனகல் அரசரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீதிக்கட்சியின் தலைவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். உடனே பனகல் அரசர் மருத்துவக் கல்லூரி அதிகாரியை தனது அறைக்கு அழைத்து விவரம் கேட்கிறார். அந்த மாணவருக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை, அதனால் தான் இடம் கிடைக்கவில்லை என்று அதிகாரி விளக்கம் தருகிறார். அப்படி ஏதும் சட்டம் இருக்கிறதா என்று பனகல் அரசர் கேட்க, சட்டம் ஏதுமில்லை அது மரபாகத்தான் பின்பற்றப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறுகிறார். அத்தகைய மரபுகள் தேவையில்லை, அதை பின்பற்ற வேண்டாம் என்று பனகல் அரசர் கூற மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த தகவல் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று நூலை எழுதியவர், பிரபல எழுத்தாளர் முகம்...

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை –  ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை – ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

நீங்கள் நான்கு வருணங்களாக பிரித்து வைத்தீர்கள், ஊருக்கு வெளியே தான் குடியிருக்க வேண்டும், நல்ல நகை போடக்கூடாது, சூத்திரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும், ஈய பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும், பொன் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று துரத்திய மக்களை ஊருக்குள் அழைத்து சமத்துவபுரம் கட்டிக் கொடுத்தவர் தான் கலைஞர், இதுதான் திராவிடம். மேற்கூறியவை சனாதனம், அதற்கு எதிரானது தான் திராவிடம். ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நீங்கள் தேவதாசி முறையை கொண்டு வந்தீர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மசோதா காரணமாக 1929 இல் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது எங்கள் திராவிடம். சனாதனத்திற்கு நேர் எதிரானது திராவிடம், ‘எதைக் கொடுத்தாலும் கொடு ஆனால் சூத்திரனுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுநீதி’, அதற்கு நேர் எதிராக சென்னை மாகாணத்தில் 1922 முதல் 1926 க்குள் பனகல் அரசர் ஆட்சியில் 12250 தொடக்கப் பள்ளிகள்...

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

  சனாதனம் பற்றி எட்டு வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டு இருக்கிறது. அப்படி ஒரு வளையத்துக்குள் ஆளுநரை சிக்க வைத்தவர் த.பெ.தி.க துணைத் தலைவர், மூத்த பெரியாரியலாளர் நமது வழக்கறிஞர் துரைசாமி.   ஆளுநர் அதற்கு என்ன பதில் சொல்வார், ‘நீதிபதி அவர்களே! சனாதனத்திற்கு காலவறையறைகளே கிடையாது என்று எங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் கூறிவிட்டார், அதைத்தான் நானும் கூறினேன். காலத்தால் வரையறுக்க முடியாத சனாதனத்துக்கு எட்டு வாரங்கள் கெடு விதிக்கலாமா? ’பிராமணியம் கூறுவதைத் தான் நான் பேசுகிறேன். என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள்? இது நியாயமா? சனாதன தர்மமா? என்று பதில் கூறுவாரா? நமக்கு தெரியாது.   ஆனாலும் எங்கள் துரைசாமி சார் அப்போதும் விடமாட்டார் அடுத்து ஒரு தகவலை அதிரடியாக கேட்பார் ’உலகம் தோன்றிய போது சனாதனம் தோன்றி விட்டது என்று கோல்வக்கர் கூறுவதை...

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

ஈரோடு இடைத் தேர்தல் வந்தாலும் வந்துச்சி; அக்கிரகார  (அல்லது மயிலாப்பூர் ஆடிட்டர்) தி.மு.க. எனும் அதிமுக முகத்திரை கிழிஞ்சு தொங்குது என்றார் ஒரு நண்பர். “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்; முகத்திரை ஒன்றை மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அவ்வளவு வீரம். பல ஆண்டுகாலம் ஒன்றாகப் பயணித்த சொந்தக் கட்சிக்காரர்களிடம் முண்டாவைத் தூக்கி கட்டிப் புரண்டு திருப்பி திருப்பி அடிப்பார்கள். தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். ஆனால் பா.ஜ.க. என்று வந்து விட்டால் அவ்வளவு தான்! நீ யார்ரா, முதலில் போய் பா.ஜ.க.வைக் காலைப் பிடிப்பது? எனக்கில்லாத உரிமை உனக்கு வந்து விட்டதா? என்று மீண்டும் யுத்தக் களத்தில் வீரத்துடன் இறங்குவார்கள். ‘அமைதிப் படை’ படத்தில் சத்யராஜ் ஆடையைக் துவைப்பதில் தனது சீனியாரிட்டி உரிமையை விட்டுக் கொடுக்காமல் மணிவண்ணன் போராடும் வீரம்செறிந்த காட்சி நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல. பா.ஜ.க.வின் ‘புனிதத்தலமான’ குஜராத்துக்கே யாத்திரை போயிருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம். அழைக்கச்...

‘சர்வம் நிரந்தரம்!’

‘சர்வம் நிரந்தரம்!’

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக ‘பாரத தேசத்து’ குடிமக்களான வாக்காளர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் – அடுத்த பிரதமர் மோடி தானாம்; பா.ஜ.க. கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தானாம்; அமீத்ஷா ‘ஜீ’ அறிவித்து விட்டார். “தேர்தல் ஆணையமே; மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடு; வாக்கு எந்திரங்களை உடைத்து அதானி துறைமுகத்துக்கு பார்சலில் அனுப்பு” என்று அமீத்ஷா, விரைவில் அறிவிப்பார். எதற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பாழடித்து, ஒரு ‘தேர்தல்’ திருவிழாவை நடத்த வேண்டும்?அந்தப் பணத்தை இராமன் கோயிலில் போட்டாலாவது மக்கள் ‘சுபிட்சம்’ பெறுவார்களே என்கிறார்கள் சங்கிகள். அப்படியானால், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்றெல்லாம் விவாதங்களை தேர்தல் ஆணையம் ஏன் நடத்துகிறது என்று கேள்வி கேட்கக் கூடாது. தேர்தல் ஆணையம் என்று ஒன்று ‘பரத கண்டத்தில்’ இராமன் காட்டிய வழியில் தேர்தலை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது, என்று உலக நாடுகளுக்கு படம் காட்ட வேண்டுமல்லவா? அதற்குத் தான். மோடி, நட்டா...

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

ஜாதி மனிதர்களை மட்டுமல்ல; பறவை விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிளி உயர்ஜாதி, கழுகு கீழ் ஜாதி, ‘கோமாதா’ ‘பிராமணாள்’; கழுதை ‘சூத்திராள்’; கோமாதாவின் சிறுநீர், சாணம் எல்லாம் புனிதம். பசுவைக் கூட செத்தாலும் வெட்டக் கூடாது. அதற்காக சட்டங்களே பா.ஜ. க. ஆட்சிகளில் போடப்பட்டு வருகின்றன. பார்ப்பனர் வாசிக்கும் தாளக் கருவியான மிருதங்கம், இளம் பசு மாட்டுத் தோளில் தான் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் கீழ்ஜாதியினர். பாலக்காடு பார்ப்பன மிருதங்க வித்வான் ஒருவர், காஞ்சி சீனியர் சங்கராச்சாரியிடமே நேரில் போய் பசு மாட்டுத் தோலில் உருவாகும் மிருதங்கத்தை நாம் வாசிப்பது பாவமில்லையா என்று கேட்டாராம். சங்கராச்சாரி, “எல்லாவற்றுக்குமே விதிவிலக்கு உண்டு; தோஷமில்லை” என்று பதில் கூறினாராம். பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசி வரும் டி.எம். கிருஷ்ணா (இவரும் பார்ப்பனர் தான்). தனது நூலில் இதை எழுதி வைத்துள்ளார். பசுவுக்கு புனிதம் பேசும் வேதியர் கூட்டம் அதே பசு செத்துப்...

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

“இந்துவாக இருப்பவர் ஒழுக்கவாதி; ‘இந்துத்துவா’வை ஏற்றுக் கொண் டவர், பலே பலே ஒழுக்கவாதி” என்று நாம் சொன்னால், அண்ணாமலைக்கு கோபம் வந்து விடும். “யாரடா  அப்படி சொன்னது? நீ எந்த ஊடகம்பா? மரியாதையாகப் பேசு; மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்று பொங் கிடுவார். ஏதோ, கிண்டலுக்காக நாம் எழுதவில்லை. அவரது பேச்சை ‘தினமலர்’ (டிசம்.12) வெளியிட்டிருப்ப திலிருந்துதான் கூறுகிறோம். அண்ணா மலைக்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டுமே! “திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை. அவர்கள் கட்சியிலிருந்து விலகி விடலாம்” என்று கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். அதாவது பாலியல் குற்றச்சாட்டிலும் பா.ஜ.க.வை அடிச்சுக்கவே முடியாது; அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை அல்ல; வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன சார் இது – இதெல்லாம் ஒரு பிரச்சினையா… நம்ம இந்து தர்மத்தில் பகவான்...

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

அயோத்தி ‘இராமனு’க்கு அடிக்குது ‘லாட்டரி’; சர்வதேச சுற்றுலா கதாநாயகனாக மாறப் போகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, உ.பி. காவிச் சட்டை ஆதித்யநாத் என்பவருக்கு முதலமைச்சர் என்ற பெயரும் உண்டு. இராமன் தரிசனத்துக்கு கோயிலைச் சுற்றி அமையப் போகும் சாலைக்கு அவரது இராமராஜ்ய உ.பி. ஆட்சி ஒதுக்கியுள்ள தொகை 2000  கோடி ரூபாய். மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, 2000 கோடியை கோயிலுக்கு சாலை போட கொட்டி அழும் ஆட்சியை உலகில் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? இது அந்த இராமனுக்கே அடுக்காது” என்று எதிர்க் கேள்வி கேட்கக் கூடிய மக்கள் அங்கே இல்லை. ‘இந்துத்துவ மாடல்’ இப்படித் தான் சேறு வாரி பூசிக் கொண்டு ஆட்டம்  காட்டும்! உ.பி. மாநிலமே ‘இராமனுக்கு’ பட்டா போட்டாகி விட்டது. இனி அடுத்தடுத்து கீழ்க்கண்ட திட்டங்களும் வரலாம். சர்வதேசப் பயணிகளை கோயிலுக்கு வரவேற்க அனுமார் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். திறமையுள்ள...

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை போடும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராததோடு, தமிழ்நாடு அரசுக்கு சில சட்ட விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 24 மணி நேரத்தில் அதற்கு சட்ட ரீதியான பதிலை தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. அந்த சட்டப் பிரச்சனைகள் எம்மைப் போன்ற பாமர மக்களுக்குப் புரியாது என்ற கவலையோடு ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத கேள்விகளுக்கும் ‘கோடங்குடி மாரிமுத்து’ இந்த பதில்களை பணிவோடு சமர்ப்பிக்கிறார். ஆளுநர் கேட்காத கேள்வி : சில ஆண்டு காலமாவது கிடப்பில் போடாமல் 24 மணி நேரத்தில் எனக்கு பதிலை அனுப்பி என்னை அவமானப்படுத்துகிறீர்களா ? கோடங்குடி மாரிமுத்து பதில் : அப்படியெல்லாம் இல்லை யுவர் எக்சலென்சி! எங்கே நீங்க மகாபாரதத்தில் சூதாட்டம் நடந்திருக்கிறது. அதுவே நமது பாரத கலாச்சாரம் என்று அடுத்தக் கூட்டத்தில் பேசி விடப் போவீர்களோ என்று பக் பக் என்று பதறியது; உடனே பதிலை அனுப்பி விட்டோம். ஆ....

சிறையில் தீட்சதர்கள்

சிறையில் தீட்சதர்கள்

அறநிலையத் துறை சட்டம் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்; நாங்கள் வானுலகத்திலிருந்து நடராசப் பெருமானோடு “பாரா சூட்டில்” வந்து பூமிக்கு குதித்தவர்கள் என்று உச்சநீதி மன்றம் போய் தீர்ப்பு வாங்கி வைத் துள்ளவர்கள் தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள். அரசுக்கு கோயில் உண்டியல் கணக்குக் காட்ட மாட்டோம்; தில்லை நடராசன் வந்து கேட்கட்டும் என்பார்கள். வரவு செலவு கணக்குகளை சரி பார்க்க அறநிலையத் துறை அதிகாரிகள் வந்தால் கோயிலுக்குள் வராதே; போ வெளியே ‘கெட் அவுட்’ என்பார்கள். இப்படித்தான் பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜாவும் அண்மையில் பத்திரிகை யாளர்களைப் பார்த்து ‘கெட் அவுட்’ என்று ஆவேசமாகக் கூறினார். பிறகு தான் தெரிந்தது அவர் அப்படிக் கூறிக் கொண்டது தனக்குத் தான் என்று. ‘பிரம்மா’வால் அந்தக் கால கருத்தரிப்பு மய்யத்தில் நெற்றி வழியாகப் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் ‘பிராமணர்’ களுக்கு ‘பிறவித் திமிர்’ என்ற பண்பும் உண்டு. (விதி விலக்குகள் இருக்கலாம்). தில்லை...

தேவை, தேசபக்தி சட்டத்திருத்தம்

தேவை, தேசபக்தி சட்டத்திருத்தம்

அந்த காலங்களில் கதர் குல்லாவுடன் பிரிட்டிஷ் கால தேச பக்தர்கள் ‘பாரத மாதாக்கி ஜே’ என்று முழக்கம் போடுவார்கள். அவர்கள் கையில் காங்கிரஸ்  கொடி இருக்கும். இது ‘வாடகை’ தேசபக்தியாளர்கள் காலம்! ஒரு கையில் பாதுகையை (அதாவது செருப்பை) வைத்துக் கொண்டு ‘பாரத மாதாக்கி ஜே’ என்று கூச்சல் போடுகிறார்கள். தேசியக் கொடி பறக்கும் அமைச்சர் கார் மீதே அந்த ‘ஆயுதத்தை’ வீசினார்கள். இனி செருப்புக்கு எங்கள் ஆட்சியில் எப்போதுமே ஜி.எஸ்.டி. கிடையாது. அது தேசபக்தியின் அடையாளம் என்றுகூட அமைச்சர் நிர்மலாவிடமிருந்து அறிவிப்பு வரலாம். ஆமாம்! மதுரையில் தேசியக் கொடியுடன் வந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? அதெல்லாம் பா.ஜ.க.வாக இருக்க முடியாது. விசாரணைக்குப் பிறகு தான் தெரியும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் முருகன். பா.ஜ.க.வின் இந்த வெறுப்பு அரசியலை இனியும் சகிக்க முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கே முழுக்குப் போட்டு விட்டேன்...

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

“மதம் மாறுவது தேச விரோதம், ஆனால், வாக்காளர்களுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறுவது மட்டும் தேச பக்தியா?” என்று ஒரு பா.ஜ.க. ‘ஜீ’யிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. “‘சனாதன தர்மம்’ என்கிறீர்கள், அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன்; “என்றும் மாறாதது, நிலையானது” என்றார். “அப்படி யானால் ஆட்சிகள் மாறுவதே சனாதனத்துக்கு எதிரானதா” என்று கேட்டேன்; “இது என்ன விதண்டாவாதம்?” என்றார். “சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்க்கலாம்; அதற்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேசலாம்; சொகுசு ஓட்டல்களில் அடைத்து வைக்கலாம்; இதுவே பாரத பண்பு என்று உங்களது வேதமும் முனிவர் களும் ரிஷிகளும், எந்த புனித நூலிலாவது பறை சாற்றியிருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இதுக்குப் போய் அவுங்களையெல்லாம் இழுக்காதீங்கன்னு” கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார். “ரிஷிகளும் முனிவர்களும் காட்டிய ஆன்மீகப் பாதையில்  தான் உங்க பா.ஜ.க. நடைபோடு கிறதா” என்று  கேட்டேன்; கோபம் கொப் பளித்தது; “ஆமாம். அதில் என்ன...

கோயில் கொள்ளை எங்கள் உரிமை!

கோயில் கொள்ளை எங்கள் உரிமை!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் காளிகோயில் சுடுமண் சிலைகளை ஒரு மர்ம நபர் உடைத்து விட்டார். இதைப் பிடித்துக் கொண்டு வேறு மதத்தினர் மீது பழி போட்டு அரசியல் நடத்தத் துடித்த பா.ஜ.க. வாயில் மண் விழுந்து விட்டது. இடித்தவர் நாதன் என்ற ‘இந்து’ என்று தெரிந்ததும், அண்ணாமலையின் அரசியல் ஆட்டம் கண்டு விட்டது. யு.டியூப் சேனல் நடத்தும் பா.ஜ.க.வின் கார்த்திக் கோபிநாத் என்ற புடம்போட்ட ‘ஆன்மீகக் கொழுந்து’ பக்தி உணர்ச்சி பொங்கி எழுந்ததால் தானே நிதி திரட்டி, சிலை புனரமைப்பு செய்யப் போவதாக அறிவித்து பல இலட்சம் நிதியையும் ‘கோபிநாத் கேர்’ நிதிக்கு திரட்டத் தொடங்கினார். அறநிலையத் துறை உடைக்கப்பட்ட சிலைகளை சீர் செய்யத் தொடங்கிய பிறகு அரசுத் துறையின் பெயரில் பணம் வசூல் செய்வது பக்கா மோசடி. அதனால் இப்போது ‘ஆன்மீகம்’ கைது செய்யப்பட்டவுடன் ‘நானும் ரவுடிடா’ அரசியலைத்  தொடங்கியுள்ளார் பா.ஜ.க. பேர்வழி அண்ணாமலை கைதைக் கண்டித்து கம்பு...

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

காணவில்லை; கண்டா விட்டுடாதீங்க!

தேடப்படும் நபரின் பெயர் : ராஜேந்திர பாலாஜி அடையாளம் :             நெற்றி முழுதும் விபூதி-குங்குமம்;  கைகளில் கலர் கலராகக் கயிறுகள்; கழுத்தில் பக்தியை பறைசாற்றும் சாமிக் கயிறு உடை : காவி சட்டை தொழில் : முன்னாள்அமைச்சர் சமூக சேவை : வேலை வாங்கித் தருவதாக பல கோடி வசூல் செய்தல் கொள்கை : கோட்சே காந்தியை சுட்டார் என்றெல்லாம் பேசக் கூடாது. கோட்சே தியாகி; கோட்சேவை அவமதிப்பது இந்து மதத்தை அவமதிப்பதாகும் என்று பேசுவார். ‘மோடி – எங்கள் டாடி’ என்று அவ்வப்போது சொந்தம் கொண் டாடுவார். பெரியார் – அண்ணா கொள்கைகள் எனக்குப் பிடிக்காது; நான் ‘இந்து’. ‘இந்து’ கடவுள்களை குறை கூறுகிறவனை விட மாட்டேன் என்பார். உருமாற்றம் : கடைசியாக தனது வெள்ளைச் சட்டையைக் கழற்றிவிட்டு காவிச் சட்டை அணிந்தார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வெள்ளை சட்டைக்கு மாறினார். பா.ஜ.க.வின் ‘தீயாக சீலர்’...

சீமானின் ‘செருப்பு வீரம்’

சீமானின் ‘செருப்பு வீரம்’

‘செருப்பால் அடிப்பேன்; காலால் உதைப்பேன்’ என்று பேசுவது அவமானமா என்று கேட்டார், ஒரு தோழர்.  அவர் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது. உடலில் தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளும் சமமானவை தானே? தலை மட்டும் உயர்ந்தது? கால் கீழானதா?  அது எப்படி? உடலையே சுமந்து நிற்பது கால் தான். காலில்  போடும் செருப்பு, அந்தக் காலுக்கு பாதுகாப்பு. பிறகு ஏன் செருப்பால் அடிப்பது என்பது இழி சொல்லாக மாறியது? தலையில் பிறந்தவன் பிராமணன்; காலில் பிறந்தவன் ‘சூத்திரன்’ அடிமை என்று மனுசாஸ்திரம் கூறி வைத்தது தான் இதற்கான காரணம். அப்படித் தான் இருக்க முடியும். ‘பகவானின் பாதார விந்தத்தை’ சரணடைகிறேன் என்று பக்தர்கள் உருகி உருகிப் பாடியிருக்கிறார்கள். பகவான் காலுக்கு அவ்வளவு பெருமை இருக்கும்போது அதே காலிலேயே பிறந்ததாகக் கூறும் சூத்திரனை மட்டும் ஏன் இழி பிறவி என்று கூறுகிறீர்கள் என்று ஒரு கேள்வியை பெரியார் கேட்டார். பழந்தமிழன் பெருமை; பழந்...

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலை ‘வந்து விட்டார்’; ‘தமிழ்நாடு’ நாளை நவம்பர் 1ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும். அதுவே பிறந்த நாள், பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவதா? என்று கேட்கிறார். தமிழ், தமிழ்நாடு உணர்ச்சி அண்ணாமலைக்குப் பீறிட்டு விட்டது போலும்! பிறந்த நாளுக்கு நாள், நட்சத்திரம், நாழிகை பார்த்து ஜாதகம் பார்க்க  வேண்டும் என்ற கட்சிக்காரர் ஆயிற்றே! அதனால் பிறந்த நாள் தான் இவர்களுக்கு முக்கியம். நோயுடன் சவலையாகப் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து முழுமையான குழந்தையாக மாற்றிய நாளை, பிறந்த நாளாக ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டால், அதற்கு நாள், நட்சத்திரம் எப்படிப் பொருந்தும் என்று தான் இவர்கள் கேட்பார்கள். ‘சனாதனம்’ அப்படித்தான் பார்க்கும். ஆனால்,  அரசியல் சட்டம் சூட்டிய ‘இந்தியா’ என்ற பெயரை இவர்கள் ஏற்க மாட்டார்கள். ‘பாரத்’, ‘பாரதியம்’, ‘பாரத தேசம்’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். எந்தத் தாய்க்கு மாநிலம் பிறந்தாலும்...

‘ஆளுநர்’ – ‘பிரதமர்’ பதவி வேண்டுமா?

‘ஆளுநர்’ – ‘பிரதமர்’ பதவி வேண்டுமா?

கிரிமினல் குற்றங்களில்கூட ‘மனுசாஸ்திரம்’ பதுங்கி இருக்குது சார், என்றார் ஒரு நண்பர். அது எப்படி என்று கேட்டேன். நண்பர் – ஒரு நீண்ட பட்டியலையே போட்டார். “சீனிவாச அய்யங்கார் – நடுவீதியில் கட்டிப் புரண்டு சண்டை; குப்புசாமி சாஸ்திரி – வீச்சரிவாள் தூக்கினார்; ராமச் சந்திர அய்யர் – சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினார்; எம். பிச்சுமணி குருக்கள்-பிக்பாக்கெட் அடித்தார்” என்றெல்லாம் செய்திகளைப் படித்திருக்கிறீர்களா? என்றார். அப்படி ஒன்றும் அண்மையில் படித்ததாக நினைவில் இல்லையே. அவர்கள் ஒழுக்க சீலர்கள்; வேதம் படித்தவர் களாயிற்றே – என்றேன். உடலில் வலிமை தேவைப்படும் கிரிமினல் குற்றங்களுக்கு  அவர்கள் வரமாட்டார்கள் சார். ஏன் உடல் உழைப்புக்கே வரமாட்டாங்க. சாலை போடுவது, மூட்டை தூக்குவது போன்ற உடல் உழைப்புக்கும் அவர்களுக்கு வெகுதூரம். உடல் நலுங்காமல், குலுங்காமல் மூளையை மட்டுமே பயன்படுத்தும் ‘கிரிமினல்’ கலை அவர்களுக்கு தெரியும்” என்றார். தெளிவாகப் புரியும்படி சொல்லுங்க சார், என்றேன். “அவர்கள் பங்கு...

“கோயில் புரட்சி”

“கோயில் புரட்சி”

மதுரை திருமங்கலம் அருகே டி. குன்னத்தூர் என்ற ஒரு கிராமம். இங்கே 12 ஏக்கர் நிலத்தில் புதிய இந்து கோயில் ஒன்று ‘எழுந்துள்ளது’; அதாவது கட்டப்பட்டிருக்கிறது. கோயிலை ‘எழுப்பியவர்’ உதயகுமார் என்ற அமைச்சர். சேர, சோழ, பாண்டியர்கள் தான் கோயில் கட்ட வேண்டுமா, என்ற  மரபை உடைத்திருக்கிறார். அந்த காலத்து மன்னர் களுக்கு நாங்கள் குறைவானவர்கள் அல்ல; அவர்களைப் போலவே மக்களைச் சுரண்டிய பணம், காசுகள் எங்களிடமும் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். சபாஷ், சரியான வீரம்! கோயிலுக்குள் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட தெய்வங்கள், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா! இந்த தெய்வங்களுக்கு உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு ‘மகிமை’ உண்டு. மக்கள் நேரிலேயே பார்த்த கடவுளும் பழகிய கடவுளும் குடியிருக்கும் கோயில் இது ஒன்று தான்! இது ஒன்று மட்டுமே தான் என்பது நிச்சயம் என்கிறார், ஒரு பெரியாரிஸ்ட். இன்னும் ஏராளமான சிறப்புகளும் உண்டு. கோயில் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட ‘தெய்வச் சிலை’களுக்கு வேத பண்டிதர்கள்...

‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை!

‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை!

‘முருகன்’ தேர்தல் களத்துக்கு வந்து விட்டான்; ‘முருகன் வேல்’ இப்போது அரசியல் மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது; திருத்தணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய மக்கள் கிராம சபையிலும் அவரது கட்சிக் காரர்கள் அவரிடம் ‘வேலை’ கொடுத்து விட்டார்கள். எல்லாம் ஓட்டு அரசியல் தான்; தி.மு.க.வையும் விட்டு வைக்கவில்லை. ஸ்டாலின் ‘வேல்’ ஆயுதத்தை எடுத்த பிறகு பழனிச்சாமி அலறுகிறார்; பா.ஜ.க. முருகன் துடிக்கிறார். “ஸ்டாலின் வேல் தூக்கியிருப்பது பா.ஜ.க. வேல் யாத்திரைக்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் முருகன். முருகக் கடவுளின் வேல் பா.ஜ.க.வுக்கு மட்டுமே ‘பேட்டன்ட்ரைட்’ மற்ற கட்சிகள் பயன்படுத்தினால் அது பா.ஜ.க. தயவால் கிடைத்தது, என்கிறார். முருகக் கடவுள் ‘மிஸ்டு கால்’ வழியாக பா.ஜ.க. உறுப்பினராகி விட்டார்  போலிருக்கிறது. “யாரெல்லாம் கடவுளை இழிவாகப் பேசினார்களோ, அவர்கள் கையிலேயே முருகன் வேல் ஆயுதத்தைக் கொடுத்து காட்சி அளிக்க வைத்திருக்கிறார்” என்கிறார் முதல்வர் பழனிச்சாமி முருகப் பெருமான் சக்தியைப் பக்திப் பரவசத்தோடு பேசியிருக்கிறார்....

‘கங்கையும் சாக்கடையும்’

‘கங்கையும் சாக்கடையும்’

‘பகவான் நாராயணமூர்த்தி மீண்டும் தமிழ்நாட்டுக்கு ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பதாக மயிலாப்பூரில், ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர்கள் சங்கத்தில் கார்ப்பரேட் டைரக்டர்கள் கூட்டத்தில் டி.வி.எஸ். அலுவலகங்களில் பிராமணர் சங்கத்தில் எல்லாம் பலமான பேச்சு அடிபட்டு வந்ததாக கூறுகிறார்கள். எதற்கு ‘அவதாரம்’ எடுத்திருக்கிறார் தெரியுமோ? தமிழ்நாட்டில் திராவிட இயக்கமான தி.மு.க.வை அழித்து, ‘பிராமண’ தேசமாக்க அவதாரம் எடுத்திருக்கிறாராம். நாராயணமூர்த்தி – குருமூர்த்தி என்று பெயர் சூட்டிக் கொண்டு வந்திருக்கிறாராம்! அவா, பல தொழில் அதிபர்களுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு ‘கணக்குப் பிள்ளை’யாக (ஆடிட்டர் என்றும் சொல்வார்கள்) இருந்து ‘சேவை’ செய்த ‘பிராமண’ குல உத்தமராம்! ‘அசுரர்’கள் என்ற திராவிடர்களை அழிக்க ‘அவதாரங்கள்’ – பல்வேறு ‘மேக்-அப்’களோடு போட்டுக் கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மீன் வேடம், ஆமை வேடம், பன்றி வேடம், பாதி மிருகம்-பாதி மனிதன் வேடம் என்று பல்வேறு வேடம். இப்போது அவையெல்லாம் எதற்கு? எப்போதுமே வேடம் போடுவதையே தொழிலாளாகக் கொண்ட ஒரு நடிகரையே இழுத்து வந்தால்...

‘சரியான பெயர்’

‘சரியான பெயர்’

“முருகா, இந்த சங்கிகளை அடக்க வர மாட்டாயா?” என்று உண்மையான சைவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். “நீ இந்துவாக இருந்தால் மட்டும் போதாது; நீ விபூதியணிந்து சைவக் கோலம் பூண்டால் மட்டும் நாங்கள் மதிக்க மாட்டோம்; இந்த பக்தி கோலத்தோடு மோடிஜிக்கு ‘ஜே’ போட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.யை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க. ஒழிக என்று கூற வேண்டும்; அப்போதுதான் நீ இந்து; இல்லையேல் இந்து துரோகி” என்று சங்கிகள் பேசும்போது, உண்மை பக்தர் கள் வேறு என்னதான் செய்வார்கள்? கலையரசி நடராசன், சைவத்தில் ஊறி நிற்பவர். நெற்றியில் விபூதி கோலத்துடன் காட்சியளிப்பவர். சைவம் – இந்து மதம் அல்ல என்று ஓங்கி முழங்கு கிறார். என்னுடைய ‘தமிழ்’ மொழி யோடு ‘இந்து’வையும் சமஸ்கிருதத்தை யும் இணைக்கவே கூடாது என்கிறார். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறார். கலையரசியைப் போல் எத்தனையோ சைவர்கள் – தமிழர் என்ற உணர்வோடு களத்துக்கு...

ஆன்மிகத்துக்கே வரியா!

ஆன்மிகத்துக்கே வரியா!

“இதோ பாருங்க சூப்பர் ஸ்டார் இப்படியான வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து எங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டி இருக்கும்” என்று முகத்தில் அடித்துக் கூறிவிட்டது உயர்நீதிமன்றம். (‘நான் அடிச்சா தாங்கமாட்ட வீடு போயி சேர மாட்ட’ என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அடியேன் அதற்கு பொறுப்பு அல்ல). ‘அப்படியெல்லாம் அபராதம் போட்டுராதீங்க; இதுக்கும் ஒரு கூடுதல் செலவா ? இதோ வழக்கு வாபஸ்’ என்று கூறிவிட்டார் சூப்பர்ஸ்டார். என்ன சார் நிலைமையைப் பாத்தீங்களா ? அரசியலில் ஒரு வாய்ஸ் கொடுத்தால் ‘அப்படியே அதிரும்’, இப்போ சுருதி இறங்கிப் போச்சே என்று கேட்கக் கூடாது. பாவம் அவர் நிலை அப்படி. மண்டபத்திற்கு அவர் சூட்டியது இராகவேந்திரா பெயர். அவர் மிகப் பெரிய மகான் ஆச்சே ! மகான் பெயரை தாங்கியிருக்கும் மண்டபம் இப்படி மாநகராட்சி நோட்டீசுக்கும் நீதிமன்ற எச்சரிக்கைக்கும் உள்ளாகி விட்டதே என்று  மனம் புழுங்குகிறார்கள்...

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

வீரம் பேசி விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பதற்குக்கூட ஒரு ‘வீரம்’ வேண்டும்; “அடிச்சிட்டல்ல; இப்ப… நான் எப்படி வேகமாக ஓடுறேன்னு மட்டும் பாரு…” என்று வடிவேலு ஒரு படத்தில் வீரத்துடன் கூறுவார். அப்போது வடிவேலு எடுத்த ஓட்டம் கூட – “சும்மா… சாதா ரகம் தான் இப்போது நம்ம பா.ஜ.க. ‘ஜீ’க்கள் எடுக்கும் ஓட்டம் இருக்கே… அப்பப்பா… ‘இதை தலைதெறிக்க’ ஓடும் ஓட்டம் என்றும் கூறலாம். கடந்த வாரம் தான் பொன். ராதா கிருஷ்ணன், ‘நானும் அரசியலில்தான் இருக்கேன்’ என்று  அடையாளப்படுத்த, ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். “நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது; அது தி.மு.க.வாகக்கூட இருக்கலாம்” என்றார். அவ்வளவுதான்; “பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணியா” என்று தொலைக்காட்சிகள் ‘அரட்டை கச்சேரி’களை (அதற்கு விவாதம் என்றும் பொருள் கூறலாம்) நடத்தி முடித்து விட்டன. கூட்டணியில் பா.ஜ.க.வுக்காக 60 இடங்களைப் பெறுவோம் என்றார், ஒரு ‘ஜி’;...

“சமூக விரோதிகள்”

“சமூக விரோதிகள்”

‘மாப்பிள்ளை இவருதான்; ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையதல்ல” என்று நடிகர் செந்திலை, ரஜினிகாந்த் கலாய்ப்பார். அந்தக் கதை இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளாகவே வரத் தொடங்கி விட்டன. கரசேவகர்களாக அத்வானி, ஜோஷி என்று 32 பேர் கொண்ட ஒரு கும்பலே அயோத்தியில் கூடியிருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் இராமன் ‘சத்தியமாக’ மசூதியை இடித்தவர்கள் அல்ல – லக்னோ சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. இது என்ன புதுக் கதை? அப்படின்னா, மசூதியை இடிச்சது யாரு பாஸ்? அதுவா, அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஒரு கவுரவப் பட்டத்தையே வழங்கி யிருக்கிறது. ‘சமூக விரோதிகள்’ என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டம்! இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக் கணக்கில் இரயில் ஏறி அயோத்திக்கு கடப்பாறை, இரும்புத் தடிகளோடு வந்து சேர்ந்த இராம பக்தர்கள் – சமூக விரோதிகளா?   இராம பக்தர்களை இப்படியா புண்படுத்துவது? என்று ராம பக்தர்கள் கொந்தளிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நீதிமன்ற அவமதிப்பு...

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

உ.பி. மாநிலத்தில் கோயில் ஒன்றில் ஒருவர் இராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் என்பதற்காக பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டது. ராமன் வேடம்போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்ற ‘தன்மான’ப் பிரச்சினைக்காக இவர்கள் எதிர்க்கவில்லை. வேடம் போட்டவர் ஒரு முஸ்லிம். நாடக நடிகர். நடிப்புத் தொழில் இல்லாதபோது குடும்பத்தைக் காப்பாற்ற ‘ராமன்’ வேடம் போட்டு பிச்சை எடுப்பது அவரது வழக்கமாம். ஒரு இஸ்லாமியர் பிச்சை எடுப்பதற்குக்கூட ராமன் வேடம் போடக் கூடாது என்கிறது ‘பஜ்ரங்தள். “கடவுள் வேடம் போட்டு பிச்சை எடுக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; இது இந்து நாடு; எங்கள் நாடு” என்று பொங்குகிறார்கள். ஆனால், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் ‘இந்து’க்கள்தான் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்...

ஓம் ‘ரபேல்’ நமஹ!

ஓம் ‘ரபேல்’ நமஹ!

பிரான்ஸ் துறைமுக நகரான போர்டோவில் பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் விஜயதசமி. முதல் ரபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் எப்படி பெற்றுக் கொண்டார்? விமான டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வைத்தாராம். இந்தி மொழியில் ‘ஓம்’ என்று விமானத்தில் எழுதி பூஜை செய்திருக்கிறார். “உள்ளே இருக்கிற 250 ‘ஸ்பேர்பார்ட்ஸ்’ல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம் பழத்திலேயடா, ஓடப் போவுது?” என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் கேட்பார். பிரான்ஸ் தேசத்தில் விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் இந்தக் காட்சியைப் பார்த்து திக்குமுக்காடியிருப்பார்கள். தேங்காய், பூ, எலுமிச்சை எல்லாம் ரபேல் போர் விமானத்தைவிட சக்தி வாய்ந்ததா? இது என்ன புதிய கதை என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். சரசுவதி பூஜையின்போது குழந்தைகள் பாட நூல்களை வைத்து பூஜை செய்யச் சொல்லுவார்கள்....

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

அரசின் அறநிலையத் துறை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட தில்லை நடராசன் கோயில் பார்ப்பன தீட்சதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சில காலம் இருந்தபோது வசூலான உண்டியல் தொகையில் நூறில் ஒரு சதவீதம்கூட இப்போது கணக்கில் வருவது இல்லை; தீட்சதர்கள் சுருட்டிக் கொண்டு விடுகிறார்கள். அரசு அதிகாரி மேற்பார்வையின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.  அவர்களுக்காக வாதாடியவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீட்சதப் பார்ப்பனர்கள் சரிகட்டி விட்டார்கள். அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு இந்த வழக்கில் உறுதியாக எதிர் வழக்காடாமல் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. தீட்சதர்களுக்கு வாதாடிய சுப்பிரமணிய சாமியும் எதிர்த்து வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும் கைகோர்த்தே நின்றார்கள். ‘தீட்சதர்கள் மானுடப் பிறவிகள் அல்ல; அவர்களின் மூதாதையர் வானுலகில் இருந்து...

பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...