Category: ஈரோடு வடக்கு

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும். 22.9.2015 அன்று முதல் 2.12.2015 அன்று வரை வாரம் ஒரு நாள் பரப்புரை பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22.09.15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழகக் கொடிகம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே காவை இளவரசன் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என...

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும்  தெரு முனை பிரச்சாரம்

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெரு முனை பிரச்சாரம்

தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்றுவிழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் பிரச்சார பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆதன் அடிப்படையில் கடந்த 22-09-15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே தோழர் காவை இளவரசன் அவர்கள் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என பல்வேறு செயதிகளை கூறிக்...

பெரியார் பிறந்தநாள் விழா கோபி

கோபிசெட்டிபாளையம் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா…. தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணி………. கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையெட்டி நடைபெற்றது… ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. பேரணி ல.கள்ளிப்பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்.சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்ததடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய...

0

ஈரோடில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

ஈரோடு வடக்கு மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா தோழர் பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா, ஈரோடு வடக்கு மாவட்டத் தோழர்களால் மிகச் சிறப்பாகக் கொ ண்டாடப் பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , பின்னர் பெரியாரின் இல்லத்திற்குச் சென்று பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மரப்பாலத்தில் கழகக் கொடியேற்றினர். அதன் தொடர்சியாக ரங்கம்பாளையத்திலும் கழகக் கொடியேற்றி கேக் வெட்டி யும் பொங்கல் வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சூரம்பட்டி வலசிலும், சத்யாநகரிலும், மரவபாளையத்திலும் கழகக் கொடியேற்றப்பட்டது். இறுதியாக சித்தோடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கங்கினர் . மேலும் சித்தோடு நான்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

0

பவானி பிரச்சாரப் பயண துவக்க விழா பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலைக் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்; எங்கள் சந்திக்கு வேலை வேண்டும் பிரச்சார பயண துவக்க விழா பொதுக்கூட்டம் 26082015 பவானியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பவானி வேனுகோபால் தலைமையேற்க, முன்னிலை பொறுப்பை மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் ஏற்க, கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். கூட்டத்தில் சிறப்புரை வழங்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைநர் தோழர் ப.பா. மோகன் அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக மேட்டூர் மவுசு பன்னீர் இசை குழவினரின் ஜாதி ஒழிப்பு பாடல் நிகழ்வுகளும்,தோழர் கோவிந்தராஜ் அவர்களின் மந்திரமல்ல! தந்திரம் என்கிற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை தோழர் வேல்முருகன் அவர்கள் வரவேற்று பேசினார்....