மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதந்திர கலந்துரையாடல் கூட்டம் 04092016 ஞாயிறு அன்று கோபியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவானி ஒன்றிய பொறுப்பாளர் வினோத் தலைமை ஏற்க மாநில வெளீயிட்டு செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாள் அன்று கோபியின் அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்துவது எனவும்,  செப்டம்பர் 20 ஆம் தேதி கோபி ஒன்றியம் முழுதும் இருசக்கர வாகன ஊர்வலம் மூலம் கழக கொடிகம்பங்களில் கொடி ஏற்றுவது எனவும், தொடர்ந்து மற்ற ஒன்றியங்களில் அச்சம் போக்கும் அறிவியல் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த  நம் கழக ஆதரவாளர் பரசுராம் அவர்களின் தந்தையார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கழக பொறுப்பாளர்கள், தமிழ் நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

-செய்தி நிவாஸ்.

You may also like...