சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா !
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட,
திரைப்பட இயக்குநர்.தோழர் சங்ககிரி ராச்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்..
05.06.16 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர்.சண்முகப்பிரியனின் மகன் இந்தியப்பிரியன் அவர்கள் இயக்கிய ”கேடு” எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா ஈரோடு ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 100 மரக்கன்றுகள் கழக தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.