பெரியார் பிறந்தநாள் விழா கோபி

IMG_20150917_104808 IMG_20150917_104621 IMG_20150917_100415 IMG_20150917_095004 IMG_20150917_094641

கோபிசெட்டிபாளையம்

தந்தை பெரியார் பிறந்தநாள்விழா…. தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணி……….

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையெட்டி நடைபெற்றது…
ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. பேரணி ல.கள்ளிப்பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்.சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்ததடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், பெரியாரின் கொள்கைகளை ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தும் பேரணியாக வந்தனர். முன்னதாக பேரணியை காந்திமன்றத்தலைவர் பச்சியப்பன் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கிவைத்தார். இப்பேரணியில் அனைத்து அமைப்பைச்சார்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

.

You may also like...