சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...
