வினாக்கள்… விடைகள்…!
நாய் வளர்த்தால் குடும்பப் பிரச்சினை வராது; அது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. – அமைச்சர் ஜெய்பால் அரசு விழாவில் பேச்சு
நல்ல யோசனை. அப்படியே அம்மா விடம் சொல்லி விலை இல்லா நாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்கச் சொல்லுங்க. தேர்தலில் குடும்பம் குடும்பமா மகிழ்ச்சியா வாக்களிப் பாங்க!
மும்பையில் ஏழுமலையான் கோயில் கிளையை கட்ட – மகாராஷ்டிரா அரசிடம் நிலம் வாங்க தேவஸ்தானம் முடிவு. – செய்தி
அரசிடம் நிலம் வாங்கிடுவீங்க! ஏழுமலையானை யாரிடமிருந்து வாங்கப் போறீங்க?
முடிகொட்டும் புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிச்சு சென்னை கல்லூரி மாணவிகள் தங்கள் தலையை மொட்டைப் போட்டு முடிக் கொடை வழங்கினார்கள். – செய்தி
“காணிக்கை”யை, “கொடை”யாக மாற்றிய சகோதரிகளே! நீங்களே அழகானவர்கள்!
கெஜ்ரிவால் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும்; சென்னையில் ஆம் ஆத்மி கட்சி அலு வலகம் முன் காங்கிரஸ் போராட்டம். – செய்தி
ஒரு சந்தேகம்! இதுக்குப் போராட வேண்டிய இடம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தானே? அது சரி, எவ்வளவு காலத்துக்குத்தான் காங்கிரசுக்காரர்கள், காங்கிரஸ் அலுவலகத்திலே போராடிக் கொண் டிருக்க முடியும்?
ஒவ்வொரு இந்தியனுக்கும் வகுப்பு, ஜாதி, இனம் பற்றி பார்க்காமல் சமத்துவத்தை வழங்குவேன். – மோடி குடியரசு நாள் செய்தி
‘மதம்’ என்ற வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்துவிட்டீர்களே சும்மா சொல்லக் கூடாது; கொள்கை யில் உறுதியாகத்தான் நிக்குறீங்க…
டெல்லி மாநில ஆட்சிக்கு காவல்துறை அதிகாரம் கேட்டு போராடிய முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது காவல் துறை வழக்கு. – செய்தி
காவல்துறையின் வழக்கை வேணும்னா வாங்கிக்கீங்க… ஆனால், அதிகாரத்தை வழங்க முடியாதுன்னு சொல்றாங்க!
உத்திரபிரதேச மாநில அமைச்சர் அசம்கான் மாட்டுப் பண்ணையில் காணாமல் போன ஏழு எருமை மாடு களைத் தேட போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. – செய்தி
தனிப்படைகள் போதாது; ஹெலி காப்டரில் போய் தேடுங்கள்! காணாமல் போனது சாதாரண எருமை அல்ல! அமைச்சர் வீட்டு எருமை!
இந்தியப் பொருளாதாரம் இயற்கை யாகவே பெண் தன்மை கொண்டது. – பா.ஜ.க. ஆடிட்டர் குருமூர்த்தி
ஓகோ! ‘அடிமைப் பொருளாதாரம்’ என்பதை ‘இந்துத்வா’ மொழியில் இப்படியும் அழைக்கலாமோ! புரியுது!
பெரியார் முழக்கம் 13022014 இதழ்