ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்: கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு
23-02-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-00 மணியளவில், ஈரோடு பெரியார் மன்றத்தில் ‘மரணதண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்’ நடை பெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார். தமிழ்த் தேச மக்கள் கட்சி நிலவன் அறிமுக உரை ஆற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அற்புதம் அம்மாள், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், எழுத்தாளர் பாமரன், தமிழின பாதுகாப்பு இயக்கம் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் – லெனினிஸ்ட் ஏ.கோவிந்தராசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். த.பெ.தி.க குமரகுருபரன் நன்றி கூறினார். அரங்கில் “உயிர்வலி” படம் திரையிடப்பட்டது.
தஞ்சையில் : 01-03-2014 சனிக்கிழமை காலை 9-30 மணி முதல், இரவு 8-00 மணிவரை, தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் “காவிரி எழுச்சி மாநாடு” நடை பெற்றது. காவிரி உரிமை மீட்பு, வேளாண் பொருளியல், வேளாண் சூழலியல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகளும், மாலை நிறைவரங்க மும் நடைபெற்றது. முதலில் உழவர் எழுச்சி இசை யோடு துவங்கிய இந்த மாநாட்டின் தொடக்க வுரையை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார்.
பெரியார் முழக்கம் 06032014 இதழ்