‘முகமூடி’ மோடியின் உண்மை முகம் பாரீர்!
நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே வந்து விட்டதைப் போலவே தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கருத்துகளைப் பரப்புகின்றன. ‘தேசத் தந்தை’யாகவே மோடி, மக்கள் மீது திணிக்கப்படுகிறார்.
முகமூடி தரித்துவரும் ‘இந்த கதாநாயகன்’ எப்படி நடிக்க வேண்டும்? எதைப் பேச வேண்டும்? உடை எப்படி அணிய வேண்டும்? மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும்? இதற்காகவே ஒரு சர்வதேச நிறுவனத்தை (யயீஉடி றுடிசடனறனைந) மாதம் ரூ.25,000 அமெரிக்க டாலர் செலத்தி, வாடகைக்கு எடுத்துள்ளார் மோடி. இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு நிபுணர்கள் தான் ‘தேச பக்த’ மோடிக்கு மக்களை ஏமாற்றும் தந்திர நடவடிக்கைகளை உருவாக்கித் தருகிறார்கள்.
மோடியின் முகமூடியை அகற்றிப் பார்த்தால் உண்மை முகம் அம்பலமாகிவிடும்.
- இந்தியாவை இந்துக்களின் நாடாக்கும் கொள்கைக்காக செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்று அரசியலுக்கு வந்தவர் மோடி. ‘இந்தியாவை இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்பதே ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளின் முழக்கம். இப்போது முன்னாள் இராணுவ தளபதிகள் அதற்காகவே பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
- நினைவிருக்கிறதா? அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அதற்காக அத்வானி நாடு முழுதும் ரத யாத்திரை நடத்தியதும் நினைவிருக்கிறதா? அந்த யாத்திரைக்காக திட்டங்களை வகுத்து செயல்பட்டவர்தான் மோடி!
- 2002 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொடூரமாக மோடி ஆட்சியில் இனப் படுகொலைக்கு உள்ளானர்களே, மறக்க முடியுமா? இந்தப் படுகொலைகளை தடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டவர் இந்த மோடிதான். அப்போது மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன்பாடியா எனும் அமைச்சர் விசாரணைக் குழுவின் முன் இந்த உண்மையைப் போட்டு உடைத்தார். இதன் காரணமாக அடுத்த சில மாதங்களிலேயே அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலையுண்ட ஹரேன்பாடியாவின் தந்தை, இந்தக் கொலைக்குக் காரணம் மோடிதான் என்று குற்றம் சாட்டினார்., மோடியோ, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி என்று கதை கட்டி 17 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தார். பொய் வழக்கு என்று கூறிய நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.
- கலவரத்தின்போது பிணையில் வெளிவர முடியாத ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் மோடி கைது செய்த – அனைவருமே இஸ்லாமியர்கள்தான்.
- மூன்று முறை முதல்வராக இருந்த மோடி, எந்த ஒரு தேர்தலிலும் ஒரு வேட் பாளராகக்கூட முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை நிறுத்தியதில்லை. அவர் தான் இப்போது முஸ்லிம்களின் வாக்குக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
- குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை, தனது காரில் ஒரு நாய் குட்டி சிக்கியதைப்போல் உணர்ந்தேன் – என்று கூறியவர் தான் மோடி.
- இந்தியாவின் முதல் நிலையில் இருக்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர். மக்களைச் சுரண்டி கொள்ளையடிக்கும் மோடி பெருமுதலாளிகளின் வேட்பாளர்.
- ‘குஜராத்தில் கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் மோடி மீது நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை’ என்று பேசித் திரிகிறார்கள், மோடியின் பிரச்சாரப் புலிகள். இது முழு உண்மையல்ல. மோடிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்வதற்கு போதுமான அளவில் சாட்சிகள் கிடைக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களிடம் மற்றொரு கேள்வி! மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாயா கோத்னானி; அவர் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏன்? நரோ பாட்டியா என்ற இடத்தில் 69 இஸ்லாமியர்கள். (பெண்கள், குழந்தைகள் உட்பட) வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தப் பெண், இந்தக் கொலைக்கு உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்தப் படுகொலைகளை நடத்தியதற்காக 2007இல் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர்தான் ‘தேசபக்தர்’ மோடி!
- குஜராத் படுகொலைகள் உலகத்தையே அதிரச் செய்தன. மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன; இனி எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன் என்று பிரதமராக இருந்த இவர்கள் கட்சியைச் சார்ந்த வாஜ்பாயே கூறினார். அது மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழையவே மோடிக்கு அனுமதி மறுத்தன. அந்தத் தடை இப்போதும் நீடிக்கிறது. இந்த மனிதர்தான் பிரதமராகி, இந்தியாவின் கவுரவத்தை உலகத்தில் உயர்த்திப் பிடிக்கப் போகிறாராம். இதை மக்கள் நம்ப வேண்டுமாம்!
- குஜராத் காவல்துறை மோடியைக் காப்பாற்றுவதாகக் கூறி ஒரு ‘போலி என்கவுண்டர்’ நடத்தியது. கல்லூரி மாணவி உள்ளிட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக மோடி கூறினார். நீதிமன்றம் இது பொய்யாக நடத்தப்பட்ட ‘என்கவுண்டர்’ என்று கூறியது. அதற்காக 32 காவல்துறை அதிகாரிகள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை அதிகாரி வன்சரா என்பவரும் ஒருவர். அவர் சிறையிலிருந்து மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். “அரசாங்கம் கூறியதற்காகவே நாங்கள் கொலை செய்தோம்; தண்டனை எங்களுக்கு மட்டும்தானா! அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று கடிதத்தில் கேட்டுள்ளார். ஊர் ஊராகப் போய் ‘சவால்’ விடும் மோடி, வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.
- “குஜராத்தைப் பாருங்கள்… அடேங்கப்பா… என்ன வளர்ச்சி?” என்று ஆர்ப்பரிக்கிறார்கள், மோடியின் சீடர்கள். அவை எல்லாம் கட்டுக்கதை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள்தான் கொழுக்கிறார்கள். ஆனால் மக்கள்…? வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களில் குஜராத் இந்தியாவில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்குக் கீழே 5 ஆவது மாநிலம். குழந்தைகள் மரண வீதத்தில் இந்தியாவிலேயே முதலிடம் குஜராத்துக்குத்தான். பெண் குழந்தைகளை வெறுப்பதிலும், பெண் குழந்தைக் கொலைகளும் குஜராத்தில் அதிகம். ஆண்களுக்கு இணையாக பெண்கள் மிகக் குறைவாக இருப்பதில் இந்தியாவிலேயே 11 ஆவது இடத்தில் நிற்கிறது குஜராத். இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இந்தியாவிலேயே அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இன்னும் ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
- குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 641 பேர். இவர்கள் விபத்தில் பலியானவர்கள் என்று காவல்துறை பொய்யாக வழக்குப் பதிவு செய்ய மோடி ஆட்சி கட்டாயப்படுத்துகிறது.
- மனித மலத்தை மனிதன் எடுப்பது புனிதமான தொண்டு என்று மோடி கூறினார். அது நூலாகவும் வெளிவந்து பிறகு திரும்பப் பெறப்பட்டது. மனித மலத்தை மனிதர்கள் எடுப்பது அங்கே பெருமளவில் நடைமுறையில் உள்ளது. பாதாள சாக்கடையில் இறங்கி, மூச்சுத் திணறி இறந்து போன துப்புறவுத் தொழிலாளர் எண்ணிக்கை 641 பேர்.
- குஜராத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடருகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது. தேனீர்க் கடைகளில் தலித் மக்களுக்கு தனிக் குவளை. அதற்குப் பெயர் ‘இராம பாத்திரம்’. உயர்சாதியினர் கடைகளில் பொருள் வாங்க அவர்கள் நடத்தும் பேருந்துகளில் பயணிக்க, மதிய உணவுத் திட்டத்தில் பிற ஜாதிக் குழந்தைகளுடன் இணைந்து உணவருந்த…. என்று, தடைகள் நீடிக்கின்றன. ஆமதாபாத் போன்ற நகரங்களிலேயே ‘தலித்’ பிரிவினருக்கு ‘வீட்டுக்குடியிருப்புகள்’ தனியாகவே அமைக்கப்பட்டுள்ளன. அய்.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள்கூட இந்தக் குடியிருப்புகளில்தான் வாழ வேண்டும். ‘ஆமதாபாத்’ தொழில் நகரத்தில் மட்டும் இதேபோல் 300 குடியிருப்பு காலனிகள் உள்ளன. மூன்று முறை முதல்வராக இருந்த மோடி ‘தேனீர்க்கடை’யில் வேலை செய்து உயர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும் மோடியின் கண்களுக்கு இந்த அவலங்கள் தெரியவில்லையா?
- குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள் வளருகிறார்கள் என்பதுதான் உண்மை. டாட்டா, அதானி, சத்ரலா, லார்சன் அண்ட் டூட்ரோ போன்ற பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்களை ‘தாரை’ வார்த்துள்ளார் மோடி! 2011-2012ஆம் நிதி ஆண்டில் பெரும் ‘பகாசுர’ தொழில் நிறுவனங்களுக்கு சந்தேகப்படும் வகையில் நியாயமில்லாமல் ரூ.1275 கோடியை மோடி, வாரி இறைத்ததை மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ரூ.160 கோடியை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றிய அதானி நிறுவனத்துக்கு மோடி ஆட்சி ரூ. 240 மட்டும் அபராதம் விதித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது. ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
- எரிவாயுக்கு ஒரு யூனிட் விலையை மத்திய காங்கிரஸ் கட்சி 4 டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தியது. மோடியின் குஜராத் ஆட்சி 16 டாலராக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஏன்? சூரிய மின்சக்தியை எல்லா மாநிலங்களிலும் ஒரு யூனிட் ரூ.8க்கு வாங்கப்படும்போது குஜராத்தில் மட்டும் ரூ.15க்கு வாங்குவது ஏன்? சுரங்க ஊழலில் சிக்கி 3 ஆண்டு தண்டனை பெற்று பிணையில் வெளி வந்துள்ள பாபு பொக்கிரியா, மோடி அமைச்சரவையில் அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரூ.450 கோடி மீன் வள ஊழலில் சிக்கிய புருசோத்தம் சோலங்கி ‘கேபினட்’ அமைச்சர், அம்பானி குடும்பத்தின் மருமகன் சவுராவ் பட்டேல், குஜராத்தில் எரிவாயு, பெட்ரோலிய எரிசக்தித் துறை அமைச்சர், ஏன்? கெஜ்ரிவால் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு மோடியிடமிருந்து பதில் இல்லை.
- இந்திய மருத்துவக் கவுன்சில்தலைவராக இருந்த கேதன் தேசாய் என்ற பார்ப்பனர், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டவர். 2010 ஏப்ரலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டில் சோதனையில் சுமார் 1500 கோடி ரூபாய் நோட்டுகளும் 250 கிலோ தங்கமும் பிடிபட்டன. நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த இந்த பார்ப்பனர் ஊழலால் இந்திய மருத்துவ கவுன்சிலே கலைக்கப்பட்டது. பிணையில் வெளி வந்துள்ள தேசாய் மீது வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மோடி ஆட்சி குஜராத் பல்கலை வழியாக இவரை (மீண்டும் மருத்துவக் கவுன்சிலுக்கு உயிரூட்டப்பட்டு), அதன் கவுன்சில் உறுப்பினராக்கியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் உடந்தை. இதற்கு எழுத்து மூலம் எதிர்ப்பு தெரிவித்த சுகாதாரத் துறை செயலாளர் கேசவ் தேசிகராஜ் – வேறு துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சணமா?
இந்த பார்ப்பன பாசிச சக்திகளிடம் தமிழர்களே, ஏமாறாதீர்! – திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 13032014 இதழ்