தில்லை நடராசன் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் காஞ்சி ஜெயேந்திரன் நுழையத் தடை
தில்லை நடராசன் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் (இது தில்லைக் கோயிலில் சித்சபை என்று அழைக்கப்படுகிறது) காஞ்சி ஜெயேந்திரன் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று பொது தீட்சதர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது தீட்சர் சபை – ஜெயேந்திரன் நுழைவை அனுமதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருக் கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி, ஜெயேந்திரன், தன்னுடன் நெருக்கமாக உள்ள சில தீட்சதப் பார்ப்பனர்கள் ஆதரவுடன், “சித் சபைக்குள்” நுழைந்து விட்டார். கடந்த மே 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கோயிலில் கடந்த மே முதல் தேதி நடந்த ‘கும்பாபிஷேகத்தை’த் தொடர்ந்து, ‘மண்டலாபிஷேக’ பூஜைகள் நடந்து வருகிறதாம். இதில் பங்கேற்க வந்த காஞ்சிபுரம் ஜெயேந்திரன், குறுக்கு வழியில் ‘சித் சபைக்குள்’ நுழைந்து விட்டார். செய்தியறிந்த தீட்சதப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர், அங்கேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயேந்திரனை உள்ளே அழைத்துச் சென்ற ஒரு சில தீட்சதப் பார்ப்பனர்களுக்கும் ஏனைய...
