ஈரோடு, ஏற்காட்டில் பரப்புரைப் பயண எழுச்சி

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்னும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 20.03.2015 அன்று பரப்புரைப் பயணம் தொடங்கி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டத்தில் கடந்த 25.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு பவானி அந்தியூர் பிரிவு, மதியம் 12 மணிக்கு சித்தார், மாலை 3 மணிக்கு அம்மாபேட்டை என பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரைக்கு ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் நாத்திகஜோதி தலைமையில், ஈரோடு மாவட்ட செயலாளர் அருச்சுணன், பவானி கோட்ட பொறுப்பாளர் வேணுகோபால், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, குமாரபாளையம் வெங்கட், பவானி வினோத், தோழியர்கள் மைவிழி, கமலம் ஆகியோர் பயணத்தில் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் “ஜாதியை ஒழிக்கும் வழிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பயணத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
25.03.2015 அன்று இரவு 7 மணிக்கு குருவரெட்டியூர் ரங்கநாதன் நினைவு அரங்கத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் க.சு.வேலுச்சாமி உரையாற்றினார். அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன் நன்றி கூறினார். தோழர்களுக்கு குருவரெட்டியூர் நாத்திக ஜோதி இல்லத்தில் அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
26.03.2015 அன்று காலை 10 மணிக்கு வெள்ளித் திருப்பூரில் தொடங்கிய பரப்புரை, மதியம் 12.00 மணிக்கு அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. பயணத்தில் நாத்திக ஜோதி அருச்சுணன், வேணுகோபால், கீழ்வானி தோழர்கள் அர்ஜுன், யுவராஜ், கவின், கோகுல்ராஜ், பூர்ணச்சந்திரன், விமல், கோபி, ஆனந்தராஜ், அலிங்கியம் சிவக்குமார், நம்பியூர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்களுக்கான மதிய உணவுக்கு அந்தியூர் தோழர் மாதேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
மாலை 3.00 மணிக்கு கீழ்வானி பகுதியில் பரப்புரை நடைபெற்றது. இரவு
7 மணிக்கு கோபி செங்கோட்டையன் நகரில் கோபி கோட்ட அமைப்பாளர் ஆனந்தராசு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில், காவை இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பவானி கோட்ட அமைப்பாளர் வேணுகோபால் உரையாற்றிய பின், மோகன் நன்றி கூறினார். தோழர்களுக்கான இரவு உணவை தோழர் ஆனந்தராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
ஏற்காட்டில் பரப்புரை
சேலம் மண்டலம் சார்பில் 9 நாள்கள் பரப்புரைப் பயணம் நடந்தது. ஏற்கெனவே 5 நாள் பரப்புரைப் பயண செய்திகள், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளிவந்துள்ளது. பயணத்தின் தொடர்ச்சியான செய்திகள்:
ஏற்காடு ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பரப்புரை 29.03.2015 ஞாயிறு அன்று ஏற்காடு பேருந்து நிலையத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.
மேட்டூர் டி.கே.ஆர் கலைக்குழுவினரின் பறை இசையுடன் பரப்புரை நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து மேட்டூர் ஜி.பி., ஆத்தூர் மகேந்திரன் ஆகியோரின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இடையே ஏற்காடு பெருமாள் மற்றும் மேட்டூர் ஆசிரியர் மா.தேவதா° ஆகியோர் இப்பயணம் குறித்து விளக்கிப் பேசினர்.
மாலை 3 மணிக்கு ஏரிப் பூங்கா அருகில் பறை இசையுடன் தொடங்கி, ஜாதி ஒழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. தோழர்கள் கிருஷ்ணன், பிரபு ஆகியோரின் வீதி நாடகம் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வு ஏற்காடு ஒன்றியத் தலைவர் கு. சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஏற்காடு இரா.கார்த்திகேயன் மாவட்ட பொறுப்பாளர்கள் இலுப்பூர் சக்தி, சேலம் டேவிட் மற்றும் சேலம் நகரத் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். ஏற்காடு ஞான சேகரன், நிகழ்விற்கு ஒலிபெருக்கி சிறப்பாக அமைத்துக் கொடுத்து உதவினார்.

பெரியார் முழக்கம் 09042015 இதழ்

You may also like...

Leave a Reply