Category: பெரியார் முழக்கம் 2017

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் 90 ஆவது பிறந்தநாள் விழா 15.02.2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன், கழக வளர்ச்சிக்கு ரூ. 1000  வழங்கினார். பெரியார் முழக்கம் 23022017 இதழ்

ஹிட்லர் – முசோலினியை ஆதரித்த-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத் திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது  நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார். ஹிட்லரின்...

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

12.2.2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந் திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக் கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப் பட்டன. இல்ல உரிமையாளர் கீதாவின் அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சிக்கு ரூ.2000/- நிதி பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அரியலூர் தலித் சிறுமி நந்தினி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு  மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் தலைமை ஏற்க,  நங்கவள்ளி அன்பு கண்டன உரையாற்றினார். அவரை தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர்களான சக்திவேல்,  விழுப்புரம் அய்யனார் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். கண்ணன் நகர செயலாளர் நன்றியுரை கூறினார் .அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . பேருந்து நிலையத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கவனிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி, மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கத் தலைவர் கா.சு. நாகராசன் தாக்கப் பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3 மணி வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ. அபுகசிர், சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர் செல்வம், சமத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர் முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார்...

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு. கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால்   வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். – ‘விடுதலை’ 12.1.1956 சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்...

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம்  தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுது மிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசு தேவுக்கு ஆட்சி...

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதையே பண்பாட்டின் அடிப்படையில் நாகாலாந்தில் எதிர்க்கிறார்கள். பழம் பெருமை பண்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாக ஏற்பது சமூகத்தையே சீரழித்து விடும் என்பதற்கு நாகாலாந்து கலவரமே உதாரணம். ஒரு வார காலம், கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து. பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் – இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டு களுக்குப் பின்,...

வெளி வந்துவிட்டது!

வெளி வந்துவிட்டது!

‘நிமிர்வோம்’ பிப்ரவரி இதழ் பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் – பேராசிரியர் நன்னன் அவர்களுடன் நேர்காணல் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் சதி. – பூங்குழலி ‘டிரம்ப்பின்’ இந்துத்துவம். உலகையே கூறுபோடும் அக்கிரகாரங்கள். – சுப. உதயகுமார் நூற்றாண்டுகாணும் எம்.ஜி.ஆர் : நிறையும் குறையும் பஞ்சாங்கம் அறிவியலா? – புரட்சிகர விஞ்ஞானி மேக்நாத் சாகா தந்த பரிந்துரை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16022017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கம்

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “யார் தேச விரோதிகள்” கருத்தரங்கம் 5/2/2017 சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே உள்ள கழக தலைமை அலுவலகத்தில் மாலை 5.45 மணிக்கு துவங்கியது. தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமை தாங்கினார். தேன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விவேக் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர். கருத்துரை வழங்கிய தோழர்கள் :- பாரி சிவக்குமார் (அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), அன்பழகன் (‘தேசத்தின் குரல்’ பத்திரிகை), மணி (தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு), இராமசாமி (அகில இந்திய மாணவர் பெருமன்றம்), வீ. மாரியப்பன் (மாநில தலைவர், இந்திய மாணவர் சங்கம்), அப்துல், சிவா ஆகியோர் பேசினர் . சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் இராமு மணிவண்ணண் பேசியதை அடுத்து, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுமார் 1.30 மணி நேரம் உரையாற்றினர். அருண் நன்றியுரை கூற...

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழகத்தின் மாத இதழான ‘நிமிர்வோம்’ இரண்டாவது இதழ் (பிப்ரவரி) வெளி வந்து விட்டது. இதழுக்கான பதிவு – அஞ்சல் கட்டணச் சலுகைகளுக்காக செய்யப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகின்றன. அஞ்சல் கட்டண சலுகைக்கான அனுமதி கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். இப்போது ஓர் இதழை அஞ்சல் வழியாக அனுப்பிட முத்திரைக் கட்டணமாக ரூ.8 செலுத்த வேண்டும்.  நடைமுறையில் இது இதழ் தயாரிப்புக்கான செலவுகளை சுமையாக்கி விடும். எனவே, கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது. எனவே தோழர்கள், கூடுதல் எண்ணிக்கையில் இதழ்களைப் பெற்று விற்பனை செய்ய தலைமைக் கழக முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி, ‘நிமிர்வோம்’ பெரியார் முழக்கம் 16022017 இதழ்

ஆத்தூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

06.01.2017 திங்கள்கிழமை மாலை 5.00 மணியளவில், ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்த தலித் சிறுமி ‘நந்தினி’யை இந்துமுன்னணி கழிசடைகளால் மிகவும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதைக் கண்டித்து, ஆத்தூர் திராவிடர் விடுதலைக் கழகம் ந.மகேந்திரன் தலைமையில் நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் இராமர், சபரிநாதன்,  ஆகியோர் கலந்து கொண்டு நந்தினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்கி கண்டன உரையாற்றினர். பிடல் சேகுவேரா ராசிபுரம் பகுதியில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.  சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இறுதியாக ஆத்தூர் தி.வி.க பொறுப்பாளர் கணபதி கூறினார். பெரியார் முழக்கம் 16022017 இதழ்

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி! இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம்...

காதல்

காதல்

கற்றுக் கொள் – பறவை, விலங்குகளிடம்… காதல் அருகைப் போல் முடிவற்றத் தாவரம். காதல் உயிர்களின் நியதி. அணுக்கமும்..இணக்கமும் புரிதலும்..உறுதியும் சமைந்த உணர்வு.   பறவைகளையும், விலங்கையும்போல் காதலைக் கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும் மனித இனம்.   ஏனெனில்,   பறவை தத்தம் குஞ்சுகள் இணை தேடுகையில் .. தலை அறுத்து .. தண்டவாள ஓரம் எறிவதில்லை.!   மிருகங்கள் தன் குட்டியின் காதலுக்கெதிராய்.. கும்பலாய் சென்று ஊர் எரிப்பதில்லை. படுகொலைகள் புரிந்து .. ஜாதீயத் திமிரோடு சவங்களை வீசிவிட்டு வருவதில்லை.!   ஜாதி மதங்களை ஒழிக்கும் உபாயங்களில், காதலின் பணி உன்னதமானது.   காதல் புரிவோரே!   பூக்களும் மினுமினுப்புத் தாள் சுற்றிய பரிசுப் பொருள்தாண்டி.. நேசத்தையும், பரிவையும் கொள்கையும், முற்போக்கையும் பகிருங்கள்.! ரத்தவெறி கொண்டு அலைகிற ஜாதி, மதவெறி சக்திகளை வெட்டிச் சாய்த்திடுங்கள். காதல் ஆயுதத்தால்! -பெ.கிருட்டிணமூர்த்தி, ஈரோடு பெரியார் முழக்கம் 16022017 இதழ்

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும்  கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர். உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர். ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத்...

கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்

காதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக் களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது. கலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு – மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய  உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும்,...

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம் ஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆளுநராக இருப்பவர் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்து கடும் விவாதங்கள் நடந்துள்ளன. முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்: கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள். பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள். அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும். அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனை வரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம்...

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?  விடுதலை இராசேந்திரன் கேள்வி (நிகழ்ச்சி காணொளி இங்கே சொடுக்கவும்) தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்: மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய வரலாறு காணாத எழுச்சிப் போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டதாக பா.ஜ.க.வினரும், காவல் துறையும் கூறுகிறார்கள். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், சட்டமன்றத்தில் இதே கருத்தை மத்திய உளவுத் துறை தயாரித்துத் தந்திருந்த அறிக்கையை படித்தார். ‘தேச விரோதிகள்’ குறித்து நாம் பேசுவதற்கு முன்பு ‘தேச பக்தர்கள்’ குறித்து விவாதிக்க வேண்டும். உண்மையில் தேசபக்தி என்பதற்கான விளக்கம்தான் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுபட் டிருந்தபோது, தேசபக்தியின்  அர்த்தம் வேறு; பாகிஸ்தான்...

கொளப்பலூரில்  தமிழர் திருவிழா

கொளப்பலூரில் தமிழர் திருவிழா

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழகத் தலைவர்  சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அவரின் தலைமை உரையின் போது, சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்குழு சார்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘ஒன்னுமில்லை’ எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள். கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் உரை நிகழ்த்தினார். அவர் உரையாற்றும் போது, உயிரின் தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார். தொடர்ந்து இரவு 10.30 மணி வரை கலை...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்த ‘மதவெறி’ ‘வகுப்புவாத’ செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர்  டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை...

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், பா.ஜ.க. தமிழக அரசை மிரட்டிப் பணிய வைக்க திட்டமிடுகிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். ‘ஒன் இந்தியா’ இணையதள இதழுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டி: கேள்வி : ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண் இது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கொளத்தூர் மணி பதில் :  மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதற்கான முன்முயற்சிகளில் உதவுவது என்பதின் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களது போராட்டமாக காண்பிக்க முயற்சி மேற்கொண்டதன் அடையாளமாகத்தான் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால்தான் விவேகானந்தர் படத்தை வைத்துக் கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு என்ன வேலை என்று...

இனி ‘ஆசீர்வாதம்’ அஞ்சல் வழியாக…

இனி ‘ஆசீர்வாதம்’ அஞ்சல் வழியாக…

திருமணமான புதுத் தம்பதிகள் – இனிமேல், ஆசீர்வாதம் வாங்குவதற்கு திருப்பதிக்கு நேரடியாக வர வேண்டாம்; திருமணப் பத்திரிகையை தபாலில் அனுப்பினாலே போதும்; அதில் மஞ்சள், குங்குமம் வைத்து, வேதம் ஓதி, பகவான் ஆசிர்வாதத்தையும் தபால் உறைக் குள்ளேயே போட்டு அஞ்சலில் அனுப்பி வைப்பார்களாம். திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. கடவுள்கள் எல்லாம் காலத்துக் கேற்பவே மாறி விட்டார்கள். அஞ்சல கங்கள், ஸ்வைப் எந்திரங்கள், ‘சிசி டிவி’ காமிராக்கள் என்று நவீன வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள். “ஆசீர்வாதத்தைத் தபாலில் அனுப்பு வதற்கு பதிலாக ஆண்டவனே நேரடியாக புறப்பட்டு வந்து பக்தர்களை சந்திக்க லாமே” என்று ஒருவர் கேட்டார்; நியாயமான கேள்விதான். உண்மையிலேயே கடவுளின் உணர்ச்சி களை பக்தர்களோ, அர்ச்சகர்களோ மதிப்பதாகத் தெரியவில்லை. “பகவானே இப்படி ஒரே இடத்தில் அசையாமல் இருப்பதை தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டால், கடவுள் என்ன கூறுவார்? “போதுமடா சாமி; இனியும், இந்த கர்ப்பகிரக இருட்டறையில் முடங்கிக் கிடக்கத் தயாராக இல்லை....

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு தேசாபிமானியல்லன். அது மாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்று சொல்லியும், எழுதியும் வரும் தேசத் துரோகியாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபி மானியாய் இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லு கிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை. இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ‘நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது’ என்பதுதான் தேசாபிமானிகளின், மகாத்மாக் களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து. இன்றைய பரராஜ்யத்தில் தோட்டி சுமக்கும் வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக் கூடும். ஆனால், அவனவன் சாதித்...

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

20.1.2017 காலை 10 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டத்தைச் சேர்ந்த கழக ஆதரவாளர் தங்கவேலு-பங்கஜவள்ளி ஆகியோரின் மகன் த.அருண் பிரச்சன்னாவுக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-உஷாராணி ஆகியோரது மகள் ஆ.சுபமங்களத் துக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார். திருமண விழாவில் கழகத் தோழர்களும், மணமக்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.3000/- கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 09022017 இதழ்

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதி கேட்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 30.1.2017 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மு. முத்துப்பாண்டி (மாவட்ட பொருளாளர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மா. வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்), மு. சரவணன் (மாவட்ட செயலாளர்), இரா. ஃபிடல் சேகுவேரா (இராசிபுரம் நகர அமைப்பாளர்) கண்டன உரையாற்றினர்.   பெரியார் முழக்கம் 09022017 இதழ்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

தமிழகத்தின் பல ஊர்களில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அரியலூர் : கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில்  சிறுகடம்பூரில் 04-01-2017 அன்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பின்புறம் காலை 10.00மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தை விழுப்புரம் அய்யனார், கழகத் தலைமை செயற் குழு உறுப்பினர் தொகுத்து வழங்கினார் . முன்னதாக புதுச்சேரி சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, நாமக்கல் மாவட்ட திவிக செயலாளர் வைரவேல், புதுச்சேரி திவிக அமைப்பாளர் இளையரசன், சமூக ஆர்வலர் தமிழரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், மக்கள் கண்காணிப்பகம் இராமு, பெரம்பலூர் மாவட்ட திவிக. செயலாளர் துரை.தாமோதரன்  ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பெரியார் திராவிடர் கழகம் – சுயமரியாதை சமதர்ம...

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23.01.2017 அன்று மாலை 3 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உண்மையான கொலைக் குற்றவாளிகளை  உடனே கைது செய் ! தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய் ! குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு ! – என காவல் துறையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி (16) கடந்த டிச.29 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட் டுள்ள இந்து முன்னணியைச் சேர்ந்த உண்மையான கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும்,குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த...

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

முகில் ராசு – மாவட்டத் தலைவர். நீதிராசன் – மாவட்டச் செயலாளர். அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் . தனபால் – மாநகரத் தலைவர் மாதவன் – மாநகரச் செயலாளர். முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள். கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர். ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் . 11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022017 இதழ்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ பட்டுக் கோட்டை வளவன் (எ) சதாசிவம் முதலா மாண்டு நினைவு நாளான 19.1.2017 அன்று மேட்டூர் அணை தந்தை பெரியார் படிப்பகத்தில் அவரின் உருவப் படத்திற்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, நகர செயலாளர் அ. சுரேசுகுமார், மாவட்ட அமைப்பாளர் அ. அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு. குமரப்பா, மாவட்ட பொருளாளர் சு. சம்பத் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

பெரியார் தொண்டர் கோபி நாகப்பன் மறைவு

பெரியார் தொண்டர் கோபி நாகப்பன் மறைவு

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழகத் தோழர் மணிமொழி தந்தையும், நம் கழகத் தோழர் நிவாஸ்  மாமனாருமான தோழர் நாகப்பன் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக் குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார்.  அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்போடு எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன்நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர். வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதி உள்ளிட்ட எந்த நிகழ்வும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.  தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன்,...

பீட்டா அமைப்பு என்ன செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்

பீட்டா அமைப்பு என்ன செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்

சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘பீட்டா’ நிறுவனம், 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. செல்லப் பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 இலட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இலாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த ‘பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது. அதாவது கிட்டத்தட்ட இந்தியப் பணம் 300 கோடி ரூபாய். அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு அனாதையாக மீட்கப்படும்  செல்லப் பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் மீட்டுச் செல்ல  வில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணைக் கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை...

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழருக்கான ஆண்டு கணக்கு. இதற்கு மாறாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் தமிழர்கள் மீது திணித்தனர். அந்த தமிழ்ப் புத்தாண்டுகளுக்கு 60ஆம் ஆண்டு கணக்குகள் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுகூட தமிழ்ப்  பெயரே இல்லை. அத்தனையும் வடமொழிப் பெயர்கள். 60 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் வாழ்வோரை இந்த வடமொழிப் பெயரை வைத்து வயதைக் கணக்கிட முடியாது. ‘சஷ்டியப்தப்பூர்த்தி’ என்று 60 ஆண்டை பார்ப்பனர்கள் விழாவாகக் கொண்டாடுவதன் நோக்கம் 60க்கு மேல் ஆண்டுகளுக்கு பெயர் கிடையாது என்பதால்தான், சித்திரையில் தொடங்கும் “தமிழ்ப் புத்தாண்டு” என்று பார்ப்பனர்கள் கூறும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ விபவ சுக்ல பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய பிரமாதி விக்கிரம விஷு சித்திரபானு...

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு  பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர்...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான். இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே – சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்...

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

மாணவர், இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் குறித்து வெளி வந்த சில முகநூல் பதிவுகள். ஜல்லிக்கட்டு ஆதரவு, பீட்டா எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு கநனநசயட அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சதி காரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு விதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவை யாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்க தாய், சற்றே ஆபாசமாய்… வெகுமக்கள் தன்மையின் அனைத்து பலங்களுடனும், பல வீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை.. பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.                                      – அ. மார்க்ஸ் அண்ணா ஒரு நிமிஷம்ணா… ஆங்காங்கே...

தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...

எழுந்தது இளைஞர் எழுச்சி! தமிழன்டா!

தமிழ்நாடு இதுவரை கண்டிராத எழுச்சி; புரட்சி என்றும் கூறலாம். புரட்சித் திருவிழா என்றும் அழைக்கலாம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். தொடர்ந்து தமிழர்கள் டெல்லி, அந்நிய ஆட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக எழுந்த ஆவேசம். கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காகக் கல்வி உரிமை கோரி 1950ஆம் ஆண்டுகளில் தொடங்கிய சமூக நீதிப் புரட்சியின் தாக்கங்கள். தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கல்விப் புரட்சி உருவாக்கிய தன்னம்பிக்கை, தன்மான உணர்வு, சமூக வலைதளங்கள் வழியாக இந்த சக்திகளை இணைத்தது. “இந்த அரசியல் கட்சிகள் மீதோ, அரசியல் தலைவர்கள் மீதோ, திரைப்பட பிரபலங்கள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை; விலகிச் செல்லுங்கள்” என்று அறிவித்து, தன்னெழுச்சியாகத் திரண்ட இலட்சக்கணக் கான இளைஞர்கள் 24 மணி நேரமும் மெரினா கடற்கரையை புரட்சிக் களமாக மாற்றினர். ‘தமிழன்டா’ என்ற ஒற்றை வாசகத்துக்குள்ளே பீறிட்டது இந்த உணர்வு. இந்தக் குறிச் சொல்லுக்குள் ஆண் அடையாளம் பதிந்திருக் கிறது என்பது...

என் சுதந்திரத்தை மறுக்க நீ யார்?

இந்தியாவோடு நம்மை (தமிழ்நாட்டை) இணைத்து சட்டத்தால் கட்டி விட்டதால் நாம் பூரண சுதந்திரம் கேட்கக் கூடாது என்பது தேசக் கட்டளையா என்று கேட்கிறேன். நான் (தமிழ்நாடு) பூரண சுதந்திரம் பெறக் கூடாது என்பதற்கு வடநாட்டானா அதிகாரி? இது அடிமைநாடா? சுதந்திர நாடா? ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வேறு நாட்டான்களா அதிகாரிகளாய் இருப்பது? இது சொந்த நாட்டானுக்கு எவ்வளவு அவமானம்! “எனக்கு இந்த காட்டாட்சி வேண்டாம்.” “எனக்கு இந்தி மொழி வேண்டாம்” என்றால் இதுசட்ட விரோதம் என்று பதிலளித்தால் இது அடிமை நாடா? சுதந்திர நாடா? எனது சுதந்திரத்தை மறுக்க அன்னியனுக்கு என்ன அதிகாரம்? ஒரு ஊரில் ஒரு பகுத்தறிவுவாதி (அடங்காப் பிடாரி) இருந்தான். அவன் மீது நம்பிக்கைக் காரர்களுக்கு வெறுப்பு. அவனுக்கு ஒரு நாள் ஒரு மயக்கம் வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அங்குள்ள டாக்டரைக்...

கருகி நிற்கிறோம்!

கருகி நிற்கிறோம்!

எங்களின் தானியக் குதிர்கள்.. அடகுக் கடை ரசீதுகளும், வங்கி அனுப்பிய “ஜப்தி” நினைவூட்டல் கடிதங்களாலும், மூழ்கிப் போன நகைகளின் விபரக் காகிதக் குறிப்புகளாலும் நிரம்பியுள்ளன…. ஏர்முனை தூக்குமேடை ஆகிவிட்டது பயிர் பூச்சிகளை அழிக்கும் நஞ்சுகள் எங்கள் உயிர்மூச்சை நிறுத்தும் நிவாரணிகளாகி விட்டன… விதைமணிகளை கொன்றாகிவிட்டது, நுகத்தடிகளையும், கால்நடைகளையும் விற்று தின்றாகிவிட்டது. இங்கு… நீர்தருவாரும் இல்லை கண்ணீர் துடைப்பாரும் இல்லை! கருகி நிற்கிறோம் எரியும் பயிர்களுக்கு துணையாக..! ஏறு தழுவதற்கு போராடும் தமிழரே! சோறு தரும் எங்களை சாவு தழுவ விடாதிருக்க இணைவீரா? போராடவில்லை என்றாலும் போகிறது… பொங்கல் வாழ்த்து சொல்லிவிடாதீர்கள் …. பச்சையமுள்ள பயிரைக் காணாதவரை, உழவனுக்கு பொங்கலின் நிறம் எல்லாம் கருப்பே..! -பெ.கிருஷ்ணமூர்த்தி பெரியார் முழக்கம் 19012017 இதழ்

தி.மு.க. நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா: கழகத் தலைவர் பங்கேற்பு

தி.மு.க. நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா: கழகத் தலைவர் பங்கேற்பு

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபத்தில் மேனாள் மேயரும் மாவட்ட செயலாளருமான மா. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “சமஸ்கிருத திணிப்பு” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். இக்கருத்தரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேரா. சுபவீரபாண்டியன் ‘நீட் தேர்வு’ எனும் தலைப்பிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ‘பண்பாட்டு படையெடுப்பு’ எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

தென்தமிழகத்தில் அதிக எண்ணிக்கை யில் இருக்கும் ஆதிக்க ஜாதியினரான முக்குலத்தோரின் விளையாட்டுதான் ஜல்லிக் கட்டு, இது ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டுகள் அல்ல என்று பெரியாரிய வாதிகள் சொன்னபோது, தமிழ்த் தேசிய வாதிகள் அதை மறுத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். 09.01.2017 அன்று நியூஸ் 18 தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரிய லாளர் அன்பு செல்வம் பேசும்போது – “1996இல் தென் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷன்,  ‘ஜாதிக் கலவரங்களுக்கான காரணிகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று’ எனக் கூறியது என்றும், ஜல்லிக்கட்டுக்குப் பின்புலத் தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அதிகார அரசியல் இருக்கிறது என்றும், இது தொடர்ச்சியாக தலித் மக்களின் மீது வன் கொடுமைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக் கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த ஜல்லிக்கட்டு மீட்புக் குழுவின் உறுப்பினர் இராஜேஷ், 1996இல் ஜாதிக் கலவரம் ஏற்படுவதற்கு...

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மோடி ஆட்சியின் அனைத்து  செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது. சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (ssun) – கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை. இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய பாடத்...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

மயிலை கழகத் தோழர் மனோகரன் தந்தை மணி முடிவெய்தினார் : பெண்களே சடலத்தைச் சுமந்து சென்றனர்

மயிலை கழகத் தோழர் மனோகரன் தந்தை மணி முடிவெய்தினார் : பெண்களே சடலத்தைச் சுமந்து சென்றனர்

மயிலாப்பூர் பகுதி கழக அமைப்பாளர் மனோகர் தந்தை மணி (60) உடல்நலக் குறைவால் ஜன.2ஆம் தேதி முடிவெய்தினார். இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சடலத்தைப் பெண்களே சுமந்து சென்றனர். எவ்வித சடங்குகளுமின்றி உடல் எரியூட்டப்பட்டது.   பெரியார் முழக்கம் 19012017 இதழ்

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக  நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு  வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு!

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராக திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு. பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் – அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும் கலை நிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த  தெளிவான புரிதல் அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார...