உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்: நீதிபதி சந்துருவுக்கு பதில்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம் அர்த்தமில்லாதது என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தமிழ், ஆங்கில ‘இந்து’ நாளேடுகளில் எழுதிய கட்டுரைகள், அதற்கான வலிமையான மறுப்புகளை முன் வைக்கவில்லை. காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே – இப்போது நடக்கும் போராட்டத்தின் நோக்கம்; தமிழ் ‘இந்து’ கட்டுரையில் அதை நீதிபதி சந்துருவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த பிப். 19ஆம் தேதி தலைமை நீதிபதியை சந்தித்த ‘சமூக நீதிக்கான போராட்டக் குழு’வின் அமைப்பாளர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது. முதல் கோரிக்கை என்னவென்றால், இனி உயர்நீதிமன்ற பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில் பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெறக் கூடாது என்பதே. அவர்களின் இரண்டாவது கோரிக்கை பிரதிநிதித்துவம் பெறாத ஜாதியைச் சார்ந்தவர்கள் இனி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது” – இப்படி கோரிக்கையை தெளிவாக...
