ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இணையரை சந்தித்து ஆறுதல்
நேற்று 04.03.2016 திங்கள் அன்று ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் இணையர் கவுசல்யா அவர்களைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் சந்தித்து ஆறுதலும்,தைரியமும் கூறினர். உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் எனும் ஊரில், கொல்லப்பட்ட தனது கணவர் சங்கர் அவர்களின் வீட்டில் வாழ்ந்து வரும் கவுசல்யா அவர்களைத் தோழர்கள் சந்தித்தனர். தலை,கைகள் மற்றும் உடல் முழுவதும் ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார் கவுசல்யா. சங்கர் வீட்டில் கவுசல்யா வாழக்கூடாது எனும் ஒரே நோக்கத்தில் ஜாதிவெறியர்கள் சங்கரைப் படுகொலை செய்து கவுசல்யாவை கொடூரமாகத் தாக்கினார்களோ அவர்களின் நோக்கத்திற்கு எதிராக நெஞ்சுரத்துடன் சற்றும் அஞ்சாமல் அதே சங்கர் வீட்டில் மனதைரியத்துடன் திரும்ப வந்து வாழ்கிறார் கவுசல்யா. இனி ‘நான் சங்கர் வீட்டில்தான் வாழ்வேன்’...