காதலர் தின விழா குமரி மாவட்டத்தில் சாதி ஒழிப்பு நாளாக கொண்டாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம்.சார்பாக மாவட்டத் தலைவர் வே.சதா தலைமையில் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு அவருடைய இல்லத்தில் காதலர் தின விழா சாதி ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டது.

கழகத் தோழர்.தமிழ்மதி மற்றும் அவரின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.தோழர்.தமிழ் மதி அவர்கள்
”சாதியை ஒழிக்கவே சாதி ஒழிப்பு நாள் என திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று விளக்கி பேசினார்.

நிகழ்வில்; தோழர்கள் மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,சகிலா பொன் மலர்,அ.மணி கண்டன்,இராசேந்திரன்,சூசையப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

12744500_1701434770140416_3550292743339842071_n 12705473_1701434736807086_4705997810650975098_n 12745638_1701434693473757_6480016395800869458_n

You may also like...