முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு !

சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்..

மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர்

12799114_1707500532867173_1879067918242944615_n 12794495_1707500519533841_7769556247187397933_n 12804780_1707500566200503_2369339135566965263_n

பெரியார் முழக்கம் 10032016 இதழ்

You may also like...