Category: குடி அரசு 1928

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அசுபம் – தீமை அதிதிகள் – விருந்தினர்கள் அநர்த்தம் – பேரழிவு அடைப்பம் – சவரக்கருவிகள் வைக்கும் பெட்டி, வெற்றிலைப்பாக்குப் பெட்டி ஆக்ஞை – கட்டளை, ஆணை உபதானம் – பிச்சை எடினமாக – கடினமாக சள்ளைக்காரன் – தொல்லை செய்பவன் சாகவாசம் – நட்பு, தோழமை சேதித்து – வெட்டி, அறுத்து நிஷ்காரணமாய் – காரணமில்லாமல் பரத்துவம் – கடவுள் தன்மை பரிவாரம் – சுற்றி இருப்போர், உடன் இருப்போர் பர்த்தி – இணை, ஒப்பு, நிரப்பல் மித்தை – பொய் யாதாஸ்து – அறிக்கை, குறிப்பு விக்கினம் – இடையூறு, தீது வியாகரணம் – இலக்கணம்

பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம் 0

பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம்

நமது தலைவர் பனக்கால் அரசர் காலமான பிறகு கக்ஷி நிலையைப் பற்றிய உண்மைகளை பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும். தலைவர் பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றிய யோசனை ஒவ்வொருவர் மனதிலும் ஊசலாடுவது அதிசயமல்ல. சில பிரமுகர்கள் தாங்கள் தலைவராகவேண்டும் என்று ஆசைப் படுவதிலும் அதிசயமொன்றுமில்லை. அவரவர்களுக்கு வேண்டிய நண்பர்களை தலைவராக்க முயற்சிப்பதிலும் அதிசயமொன்றுமில்லை. ஆனால் நமக்கு இப்போது அவசரமாய் ஆகவேண்டிய காரியமென்ன வென்றால், “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் நடக்க வேண்டும், ஆங்காங்கு இயக்க பிரசாரங்களும் ஸ்தாபனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பனவே. தற்காலம் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” கட்டடத்தின் மீதுள்ள 75000 ரூ. கடன் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு விதத்தில் முடிவு பெற்றாலொழிய அடுத்து வரும் தேர்தலில் நாம் நிலை கொள்ள முடியாது என்பது நிச்சயம். அது மாத்திரமல்லாமல் நமது ஸ்தாபனமும் செல்வாக்கோடு இருக்க முடியாமல் போய்விடும் என்று கூடச் சொல்லுவோம். திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் இன்றைய...

காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் 0

காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்

கல்கத்தாவில் இது சமயம் கூடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் என்னும் கூட்டம் இந்த வருஷத்திய மற்றொரு ஏமாற்றுத் திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருஷமும் நமது இந்தியப் பாமரமக்கள் ஆயிரக்கணக்காகக் கூட்டம் கூடுவதும் நாலைந்து கூட்டுக் கொள்ளை சுயநல ஆசாமிகள் சேர்ந்து இப்பாமர மக்கள் ஏமாறும்படி ஜாலவித்தைபோல் இரண்டொரு சதியாலோசனைத் தீர்மானங்கள் செய்வதும் “அதற்குள் இதுவும் இருக்கின்றது, இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம், எனினும் பொருந்தும், அதற்கு இதுவே முதற்படி, முதற்படிக்கும் இதுவே முதற்படி” என்பது போன்ற தந்திரவார்த்தைகளால் அத்தீர்மானங்களை அரண் செய்வதும், வாலிபர்களை இளம் பெண்களைக் காட்டி ஏமாற்றுவது போல் பாமர மக்களை திரு காந்தியவர்களைக் காட்டி ஏமாற்றி வருவதுமே காங்கிரஸ் நாடகமாக நடத்திக் காட்டப்பட்டு வருகின்றது. இதைப் போன்ற ஒரு மோசமான ஏமாற்றுத் திருவிழா நமது நாட்டில் வேறு எதன் பேராலும் நடத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. பார்ப்பனர்களோ, அல்லது ஆங்கிலம் படித்து உத்தியோகத்திற்கு காத்திருக்கும் படித்தவர்கள் என்பவர்களோ, அல்லது...

நமது பத்திரிக்கை 0

நமது பத்திரிக்கை

‘குடி அரசு’ பத்திரிகையானது அபிமானிகள் பெருக்கத்தால் வாராவாரம் கிட்டத்தட்ட 10000 பதினாயிரம் பிரதிகள் வரை பதிப்பிக்க வேண்டியிருப்பதாலும், சமீப காலத்திற்குள் பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சுப்போட வேண்டியிருக்குமாதலாலும். தற்போது நம்மிடம் இருக்கும் அச்சு இயந்திரம் அவ்வளவு பிரதிகள் அச்சியற்றபோதுமானதாய் இல்லாத தாலும், இதற்காக வாங்கப்பட்ட மற்றொரு பெரிய அச்சியந்திரம் ‘திராவிடன்’ பத்திரிகையின் வாசகர்களின் பெருக்கத்தால் ‘திராவிட’னுக்கு வேண்டியிருந் ததாலும் கொஞ்சநாளைக்கு “குடி அரசை” 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்திவரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங் களுக்கு அதிகப்படாமல் செய்து விட்டு சற்றேக்குறைய 12 அல்லது 13 பக்கங் களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக் கலாம்; ஆனாலும் அவர்களையும் திருப்தி செய்ய சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யப்படும்....

மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர் 0

மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர்

தேடற்கரிய ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம் பனகால் ராஜா சர். ராமராய நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால் பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முனைந்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர் வீரர் களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப் பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மையான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில்...

செங்கல்பட்டில்  தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு 0

செங்கல்பட்டில் தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாடு

தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்தி ருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப் ராயத்தை வரவேற்கின்றோம். தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப் பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும். அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும், அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரசாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானதுமான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதுவரை பல...

நாஸ்திகம் 0

நாஸ்திகம்

(தூய வெழிலழகனார் எழுதி சித்திரபுத்திரன் திருத்தியது) மகன் :- அம்மா! இதென்ன விபரீதம்? நமது தந்தை சதா சர்வகாலம் “குடி அரசு” “குடி அரசு” என்று “குடி அரசு”ம் கையுமாகவே இருந்து சதாகாலமும் படித்துக் கொண்டு வந்தது போதாமல் இப்போது “குடி அரசு” ஆபீசுக்கே போய்ச் சேர்ந்து விட்டாரே இதென்னம்மா! அநியாயம்! அவருக்கு நாஸ்திகம் தலைக்கேறிவிட்டது போல் இருக்கின்றது. தாய் :- மகனே! இவ்வாறு கேட்பதற்குக் காரணமென்ன? “குடி அரசு” பத்திரிகை நாம் இழந்த சுயமரியாதை, அறிவு, செல்வம், நாடு ஆகியவை களை மறுபடியும் பெறுவதற்கு வேண்டிய வேலை என்ன? என்ன செய்யவேண்டுமோ அவைகளை உயிர்க்கு துணிந்து செய்து கொண்டும், மனிதர்களுக்குள் பரவி நிற்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே இவ்வுலகமெங்கணும் வெற்றிக் கொடியோடு உலவிக் கொண்டும் வருகின்றது. உமது தந்தை அக் ‘குடி அரசின்’ கொள்கைகளை நன்கு அறிந்தவராதலால், நான்தான் அங்கே போய் அதற்கு ஏதாவது உதவி செய்யலாமே எனக்கருதி போகும்படி...

கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்! 0

கிருஷ்ணசாமி பிள்ளை மறைந்தார்!

நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும் இயக் கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும் கோயமுத்தூர் மகாநாட்டுக்கு காரியதரிசியாய் இருந்தவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்திற்கு காரியதரிசியும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத் திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது உண்மை நண்பர் திரு. கோவை, நெய் மண்டி கிருஷ்ணசாமிபிள்ளை அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப்படத்தக்க சம்பவமாகும். குறிப் பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும் மற்றொரு நண்பரை கோவையில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல வேண்டும். அவர்களின் அருமை மனைவியாருக்கும் தாயாருக்கும் தம்பிமார்களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம் ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 16.12.1928

சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் 0

சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

நமது நாட்டில் தற்சமயம் உண்மையானதும் சுயநலமற்றதுமான பொது நல சேவை செய்கின்றவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நமது நாட்டு மக்களுக்குள் கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பு-உயர்வு-தாழ்வை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை சுயமரியாதையுடன் வாழச்செய்ய வேண்டியதேயாகும். இதை நாம் பலதடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். எனினும் மக்களுக்குள் சமத்துவமும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டுவிட்டால் வாழமுடியாத நிலையில் நமது நாட்டில் சில சமூகமும் சில தனிப்பட்ட மக்களும் இருப்பதால், அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையை இவ்வித்தியாசத்தின் மீதே நிலைநிறுத்திக் கொண்டதால், அவர்கள் மற்ற வர்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக இருந்தே தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதான நிலைமை அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம் மறைத்துப் பேசுவதில் பயனில்லை. எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இப்படிப்பட்டஒரு கூட்டம் இருந்தே வந்து தங்கள் சுயநலத்தின் பொருட்டு மக்களின் நலத்தை பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும். எனினும் சமத்துவமும் சுயமரியாதையும் பெற்று முன்னேற்ற மடைந்து வரும் நாடுகளின் சரித்திரங்களைப்...

சென்னை  தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

சென்னை தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரர்களே! சகோதரிகளே! நமது மகாநாட்டின் நடவடிக்கைகள் எல்லாம் அநேகமாய் முடிவு பெற்றுவிட்டன. மகாநாடுகளின் வழக்கப்படி பார்த்தால் மகாநாட்டுத் தலைவர் என்கின்ற முறையில் எனது முடிவுரை என்பதாக சில வார்த்தை களையாவது நான் சொல்லியாக வேண்டும். நீங்களும் அதை குறிப்பாய் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை உணருகிறேன். மகாநாட்டு நடவடிக்கைகளில் ஆதி முதல் இதுவரை ஊக்கத்தோடும் உணர்ச்சியோடும் இடையறாக் கவனத்தோடும் கலந்திருந்த உங்களுக்கு இனி நான் அதிகமாய் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கின்றேன். ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே சீர்திருத்தம் என்பதைப் பற்றி பேசப்பட்டு வருகிறதாய் அறியக் கிடக்கின்றது. எவ்வித சீர்திருத்தத்தைப் பற்றி பேசப்பட்டு வந்ததோ அது ஒரு சிறிதும் காரியத்தில் வெற்றிபெறவில்லை. சீர்திருத்தக்காரர்களும் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி வாயளவில் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்களே யொழிய காரியத்தில் கொண்டு வருவதில் வெற்றியடையவே இல்லை. ஆனாலும் இப்போதும் அம்மாதிரி யாகவேதான் வாய்ப்பேச்சிலும் வெறும் தீர்மானத்திலும் நடைபெறுகின்றதே யொழிய காரியத்தில் நடைபெறச் செய்யும் மார்க்கத்திற்கு கொண்டுபோய் விடும்படியான சீர்திருத்தம் செய்வதற்கு ஆட்களைக்...

தம்பட்டம்  மேயோக்கள் 0

தம்பட்டம் மேயோக்கள்

– சித்திரபுத்திரன் ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி. இந்த நாட்டில் பார்ப்பனீயம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும், இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும் வரையும், விஷ்ணு புராணமும் சிவமகாபுராணமும் சிவ பராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும் பாராசர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும், சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களை கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர் களையும் திருட்டுத்தனமாக விபசாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ளவரையும், 2 பெண் ஜாதி 3 பெண் ஜாதி 100...

பிரம்மஞான சங்கமும்  பார்ப்பனரல்லாதாரும் 0

பிரம்மஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும்

உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும், அறிவின் அற்புதத்தின் கரைகாணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து ஒற்று மையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம் பிற நல அலக்ஷியம், துவேஷம் முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள் அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும், சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம். இந்த மதங்களேதான் மக்களுக்கு கொடுங்கோன்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக் கின்றது. உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக் குழம்பு, பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல் ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும் மனித சமூக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள் என்பவைகளும் தோன்றிக் கொண்டே வருவதுமுண்டு. இம்மதக்கேடுகளை...

தென் இந்திய  சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

தென் இந்திய சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே! இந்த பெரியதும் முக்கியமானதுமான மகாநாட்டிற்கு என்னை தலைவ னாக தெரிந்தெடுத்ததன் மூலம் தாங்கள் எனக்களித்த கௌரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றி அறிதலை தங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன். இம்மகாநாடு சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு என்று சொல்லப்படுகிறது. எனவே, இத்தகைய ஒரு மகாநாட்டுக்கு சீர்திருத்தத்தில் மிகுதியும் நம்பிக்கையுள்ள ஒருவரைத் தலைவராக தெரிந்தெடுத்திருப்பீர்களானால் அது மிகவும் பொருத்தமுடையதாக இருந்திருக்கும் என்று நான் சொல் வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏனெனில் வரவர எனக்கு சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை மறைந்து கொண்டே போகின்றது. அன்றியும் நமது நாட்டை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கும், நமது நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கும், எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். மற்றென்னை யெனில் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின்...

சென்னை சட்டசபை 0

சென்னை சட்டசபை

இந்த வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மந்திரி கனம் முத்தய்யா முதலியார் அவர்கள் தமது இலாக்காவில் உள்ள உத்தியோகங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தியது பற்றி அவரைக் கண்டிப்பதற்காக சட்டசபையை ஒத்தி வைக்கவேண்டும் என்று ஒரு அவசரப் பிரேரேபனை பார்ப்பனர்களால் திரு. சாமி வெங்கிடா சலத்தைப் பிடித்து சுயராஜ்யக் கட்சி தலைவர் என்கிற முறையில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கக்ஷி என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கக்ஷி என்றும், அவைகளுக்கு சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதும், முட்டுக்கட்டை போடுவதுதான் கொள்கைகள் என்றும் சொல்லி பார்ப்பன ரல்லாதாரிலேயே சில கூலிகளை விட்டு பிரசாரம் செய்யச் செய்து பாமர மக்களை ஏமாற்றி சட்டசபைக்குப்போய் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பன ரல்லாதார் சமூகத்திற்கே விரோதமாய் பல கெடுதிகள் செய்து வந்திருப் பதுடன் இப்போது தைரியமாய் வெளியில் வந்து உத்தியோகப் பிச்சை கேட்கவும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு அளிக்கப்படும் சம சந்தர்ப் பத்தை ஒழித்து தங்கள் ஆதிக்கத்தையே எப்போதும் நிலை...

சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு 0

சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு

தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு சென்னை விக்டோரியா மண்டபத்தில் திருவாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்தேறிய விபரமும் தலைவர் உபன்யாசமும் மற்றும் பல விபரங்களும் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களும் இத்துடன் வரும் அநுபந்தத்தில் காணலாம். அக்கிராசன உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில் சீர்திருத்தக்காரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களும், சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய விஷயங்களும், செய்யவேண்டிய முறைகளும், தெளிவாய் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, அக்கிராசனர் தாம் சீர்திருத்தத்தில் நம்பிக்கையுடைய வரல்ல வென்றும் அழிவு வேலையிலேயே நம்பிக்கையுடையவ ரென்றும், அதாவது ஒன்றை மாற்றியோ அல்லது யெடுத்துவிட்டோ அந்த ஸ்தானத்தில் மற்றொன்றை வைக்க வேண்டுமென்கிற விஷயத்தில் கவலை யில்லாதவரென்றும், அவசியமில்லாததும் கொடுமை விளைவிப்பதுமான விஷயங்களை அழித்து விட வேண்டியது என்கின்ற கருத்தின் பேரில் கவலை கொண்டிருக்கும் அழிவு வேலைக்காரரென்றும் சொல்லியிருக் கிறார். அதற்கேற்ப இப்போது சமுதாய முற்போக்குக்கும் சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் புதிதாக நாம் கைக்கொள்ளவேண்டியது என்னவென்றால், அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாய் இருப்பவைகளை அழித்து விட வேண்டுமென்பதேயாகும். இவ்விதம் அழிவு...

திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து   என்றும் கண்டிராத காக்ஷி 0

திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து என்றும் கண்டிராத காக்ஷி

கனவான்களே, சில உபசாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி அவருக்குக் கிடைத்ததற்கு திரு. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டுகளையும் கெடுத்துவிடும் எனக்கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன். அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும்...

சம்மத வயது விசாரணையின் அதிசயம் 0

சம்மத வயது விசாரணையின் அதிசயம்

ஆண் பெண் மக்களின் கல்யாண வயதைப் பற்றியும், கலவி வயதைப் பற்றியும் சட்டத்தின் மூலம் ஒரு நிபந்தனை ஏற்படுத்த வேண்டி பொது மக்களின் கருத்தை அறிவதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அது பல மாகாணங்களில் விசாரணை செய்து விட்டு இப்போது நமது மாகாணத்தில் விசாரணை நடைபெறுகின்றது. இவ்விசாரணையின் மூலம் முடிவில் ஏற்படப் போகும் நன்மையை விட விசாரணை நடுவில் வெளிப்படும் பல அதிசயங்கள் மக்களின் பொது அறிவிற்கு மிகவும் பயன்படுமென்று கருதுகின்றோம். விசாரணை துவக்கத்திலிருந்து நாம் மேல் வாரியாகத்தான் கவனிக்க முடிந்தது. அநேக சாக்ஷிகள் வாக்குமூலத்தை நாம் படிக்கவே இல்லை. என்றாலும் சில விஷயங்கள் வெளியானது நமது தகவலுக்கு வந்தது. அவைகளில் மிகவும் கவனிக்கத்தக்கவை என்னவெனில், பெண்கள் பக்குவமடைந்த பிறகு வீட்டில் வைத்திருந்தால் அவர்களது கற்புக்கு இடையூறு ஏற்படும் என்றும் பூப்பு அடைந்தவுடன் பெண்களுக்கு கலவி இச்சை ஏற்பட்டு விடுகின்றது என்றும், அதற்கு உடனே பரிகாரம் செய்யாவிட்டால் மோசம் வந்துவிடும் என்றும்...

லாலா லஜபதி 0

லாலா லஜபதி

திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று “தியாக பூமி”யில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால் பட்டா பிராமய்யர் அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரிக்க அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள் தயவு செய்து பொறுமையுடன் ³ விஷயம் முழுதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 18.11.1928

கார்பொரேஷன் தலைவர் 0

கார்பொரேஷன் தலைவர்

சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சி யடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும். மேலும் இந்த முடிவானது, சென்னை பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாகவோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ காங்கிரஸ் வேஷத்தாலோ தேசீய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த முடியாமல் போனதைப் பொருத்தவரையில் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும் வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். திரு. ராமசாமி முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத்தைவிட ஒரே கட்சியில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் வருந்தத்தக்கதேயாகும் என்றாலும் திரு. ராமசாமி முதலியார் அவர்களை தலைவராகக் கொண்ட சென்னை கார்ப்பொ ரேஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. சென்னை கார்ப்பொ ரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும்...

மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா? 0

மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா?

மேல்நாட்டில் கூட சிலர் சுவாமி என்றும் மோக்ஷம் என்றும் நரகம் என்றும் சூக்ஷ&ம சரீரம் என்றும் சொல்லுகின்றார்களென்றும் ஆதலால் அவைகள் நிஜம் என்றும் ஒரு ‘சூக்ஷ&ம சரீரக் காரர்’ தனது பத்திரிகையில் எழுதுகிறார். நாம் அதற்கு ஒரு பதில் தான் சொல்லக்கூடும். அது, முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்தியாவும் சிறப்பாக தமிழ் நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான். குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

கோவையில் சர்வகக்ஷி மகாநாடு 0

கோவையில் சர்வகக்ஷி மகாநாடு

கோயமுத்தூரில் இம்மாதம் 23-ஆம் தேதி அகில இந்திய சர்வகக்ஷி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வகக்ஷி மகாநாடு கூடப் போகின்றது. அதற்கு காரியதரிசி திரு. சு.மு. ஷண்முகம் செட்டியார் ஆ.டு.ஹ. அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஆ.டு.ஊ. ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆ.டு.ஊ. ஆவார்கள். எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்பனரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆnக்ஷபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமை களை தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்து வார்களா? என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறைகளுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களையாவது...

இதற்கு என்ன வால் என்று பெயர் 0

இதற்கு என்ன வால் என்று பெயர்

திரு. நேரு, திரு சீனிவாசய்யங்கார் ஆகிய இருவரையும் ஆதரிப் பவர்களுக்கு வெளவால் என்கின்ற பெயரானால், திரு. நேருவும், திரு சீனிவாசய்யங்காரும், திரு. பெசண்டம்மையும் ஆகிய மூவரை திருட்டுத் தனமாக ஆதரிப்பதற்கு என்ன வால் என்று சொல்லுவது? குடி அரசு – சிறு குறிப்பு – 18.11.1928

“ரிவோல்ட்” ஆரம்ப விழா 0

“ரிவோல்ட்” ஆரம்ப விழா

ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும் சகோதரர்களே! நம் பிராமணரல்லாதார் கக்ஷி எவ்வளவோ முக்கிய அடிப்படையான நோக்கங்களைப் பற்றி ஆரம்பிக்கப்பட்டிருப்பது நம் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்ததே. ஆனால் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய ஏது இல்லாததும் வட நாட்டினர் இவ்வியக்கத்தைப் பற்றிச் சிறப்பாக அறிந்து கொள்ளாமலிருப்பதும் அவ்வளவு ஆச்சரியமல்ல. சிறிது நாட்களுக்குமுன் இப்பக்கங்களுக்கு வந்திருந்த வடநாட்டுத் தலைவரில் ஒருவராகிய திருவாளர் கோஸ்வாமி அவர்கள் சில நண்பர்களுடன் பேசிகொண்டிருக்கும் பொழுது திரு. கோஸ்வாமி கேட்டதாவது:- “என்ன, இம் மாகாணத்தில் முக்கியமாக 2,3 பேர்கள் சேர்ந்துகொண்டு, பிராமணரல்லாதார் கக்ஷி என்று வைத்துக் கொண்டு இருக்கிறார்களாமே? அதன் அர்த்தமென்ன? அது வேண்டியது அவசியம் தானா” என்று கேட்டார். ஏனென்றால் அவருக்கு தென்னாட்டின் சமாச்சாரமே தெரியாது. உடனே நான் (ஈ.வெ.ரா) திரு. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ. அவர்களைக் காட்டி “இவர்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆகா! நன்றாகத்...

தஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம் 0

தஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்

தஞ்சை ஜில்லா போர்டுக்கு சம்மந்தப்பட்ட ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாக இவ்வளவு காலம் பொறுத்தாவது ஒரு தீர்மானம் செய்ய முன் வந்ததைப்பற்றி அதன் தைரியத்தை நாம் பாராட்டுகின்றோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்த விஷயம் தஞ்சை ஜில்லா போர்டின் யோசனைக்கு வந்ததில் ஜில்லா போர்டார் ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள். அது சமயம் அவர்கள் அப்படிச் செய்தது தப்பு என்ற சொன்னதுடன் ஜில்லா போர்டு தலைவரையும் சில அங்கத்தினர்களையும் நேரிலும் கண்டு பேசினோம். அப்படிப் பேசியதிலிருந்து லைனை ரயில்வே போர்டாருக்கு ஒப்புக் கொடுக்க மறுத்ததின் காரணம் எல்லாம் அப்போர்டிலுள்ள பார்ப்பன விஷமத்திற்கு பயந்தும் கட்சிப் பிரதிகட்சி ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதைக் கருதியுமே அப்படிச் செய்ய வேண்டியதாக ஏற்பட்டது என்பதை அறிய நேர்ந்தது. முதலாவதாக இதுவரை எந்த ஸ்தாபனமாவது சர்க்காரார் நடத்தி வந்ததை விட யோக்கியமாகவோ திறமையாகவோ பொது ஜனங்களின் பிரதிநிதித்துவ சங்கத்தால்...

தென்னிந்திய சீர்திருத்தகாரர்  மகாநாடு 0

தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு

தென்னிந்திய சமூகச் சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26,27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப்போகிறது. இம் மகாநாடானது தென்னிந்திய சமூகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமூக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப்பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள்கைக்கு அடிமையாகாத மனிதர்களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்யமுடையவர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது மனிதத் தன்மையில் முக்கியமான கடனென்றும் சொல்லுவோம். நிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ்செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானியென்றும் சமூக சீர்திருத்தக்காரன் என்று சொல்ல பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் மதத்தின் பேராலும் வருணாசிரமத்தின்...

அரசியலும் சத்தியமும் 0

அரசியலும் சத்தியமும்

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் “பூரண சுயேச்சையே வேண்டுமென்று கேட்பவர்களான தாங்கள் ராஜபக்திப் பிரமாணம் செய்யலாமா” என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் “நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை” என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் “பொய்ச்சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையாக சத்தியம் செய்யவில்லை” என்று சொன்னாராம். உடனே திரு. லாலாஜி “அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசியதாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன” வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம். நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர்களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு விதம். அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தியாசங்கள் இருந்தால் இனி சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல்...

பாஞ்சால சிங்கம் 0

பாஞ்சால சிங்கம்

நமது பத்திரிகை முடிந்து கடைசித்தாள் அச்சுக்குப் போகுந் தருவாயில் பாஞ்சாலசிங்கம் முடிசூடா மன்னர் உண்மைத் தலைவர் லாலா லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தா ரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில், இருந்த – இருக்கிற – தலைவர் களில், லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு எண்ணம் அவரது எதிரியாலும் கற்பிக்க முடியாத உத்தம வீரர் இவர் ஒருவர்தான் என்றே சொல்லவேண்டும். இவரது மரணத்தால், தனது மனத்திற்குப்பட்டதை தைரியமாயும் ஒளிக்காமலும் வெளியிடக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் இந்தியாவில் இல்லை என்றும் சொல்லும்படியான நிலைமை உண்டாகி விட்டது. சுயராஜ்யக் கக்ஷியாரைப்பார்த்து, “பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எல்லா தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன். யாராவது வந்து என்னுடன் போட்டி போடுவதாயிருந்தால் வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்ன தீரர், திரு. மோதிலால் நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்குள் அடிக்கவிடாமல் செய்த தனி...

“ ரிவோல்ட் ” 0

“ ரிவோல்ட் ”

ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும். “ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்? உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப் படவில்லை” என்று சொன்னபோது “திரு....

திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை 0

திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி நாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிய சேதிக்கும் சென்றவாரக் ‘குடி அரசு’ ‘திராவிடன்’ கட்டுரை களுக்கும் திரு.எ. இராமசாமி முதலியாரவர்கள் பதில் அளித்திருப்பதாவது. “நான் தனித்தொகுதி சம்மந்தமாக வெளியிட்ட அறிக்கையைப்பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பரும் தலைவருமான திரு. ராமசாமி நாயக்கரின் அபிப்பிராயத்தை நான் படித்துப் பார்த்தேன். நான் வெளிப்படுத்திய அபிப்பிராயம் என் சொந்த அபிப்பிராயம் என்று நான் அசோசியேட் பிர° நிரூபரிடம் சொல்லியிருந்தும் அதை அது வெளிப்படுத்தாததற்கு காரணம் இன்னது என்பது எனக்கு தெரிய வில்லை. தற்கால நிலைமையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரண்டு சமூகங்களுக்கும் உள்ள பலமான மனக்கசப்பானது தனித்தொகுதி ஏற்படுத்து வதன் பயனாய் ஒரு அளவுக்கு பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் சமநிலைமை உண்டாக்கத்தக்கதாகவும் இருக்குமென்று சொல்லியிருந்தேன். ஆனாலும் இந்தசமயத்தில் அதை வற்புறுத்துவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமானதல்ல என்று நம்புகின்றேன். ஏனெனில் மேல் கண்ட தனித்தொகுதித் தேர்தல் முறை ஏற்பட்டால் இனி ஏற்படப்போகும் பார்ப்பனர்கள் எவ்வளவு அடையக்கூடுமோ அதை விடவும் அவர்கள் எத்தனை...

நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம் 0

நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்

திராவிடன்” பத்திரிக்கை 26.10.28ல் தலையங்கத்தில் எழுதுவதாவது:- “நம் மாகாணத்தில் பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமையால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் படுந்துயரை என்னவென்று எடுத்து ரைப்பது?பார்ப்பன ஆசிரியர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களை வகுப்புகளில் சரியாய் நடத்துவது கிடையாது; பாடம் செவ்வனே சொல்லிக் கொடுப்பதும் கிடையாது. ஒரு மாணவன் “குடி அரசு” படிக்கின்றவனாகவோ அன்றி “திராவிடன்” படிக்கின்றவனாகவோ அல்லது “ஜ°டி°” படிக்கின்றவனாகவோ இருந்து விட்டால் அவன் பாடும் திண்டாட்டந்தான். அதுவும் இராமசாமி நாயக்கர் பிரசங்கத்திற் குப் போய்விட்டால் இன்னும் திண்டாட்டம். அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக விருந்தபோதிலும் அவனை பரீiக்ஷயில் மொட்டையடித்து விடுவார்கள். இத்தகைய கொடும் நிகழ்ச்சிகள் இம்மாகாணத்தில் பல இடங்க ளில் நேர்ந்துள்ளனவென்பதை நாம் அறிவோம். இன்று லால்குடி போர்டு ஹை°கூலில் அப்பள்ளிக் கூடத்துப் பார்ப்பன ஆசிரியர்களால் பார்ப்பன ரல்லாத மாணவர்கள் எவ்வளவு கொடுமையாக நடத்தப்படுகின்றார்கள் என் பதை ஒரு கமிட்டியார் விசாரணை செய்வார்களாயின் திரு. நாவேல் அவர் கள் சைமன் கமிஷன் முன்பு கூறியது உண்மையென்பது புலனாகிவிடும்.”...

மந்திரி ளு.முத்தையா முதலியார் 0

மந்திரி ளு.முத்தையா முதலியார்

வாழ்க! வாழ்க! வாழ்க! உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமது மந்திரி திரு. ளு. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத் தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து      5 பார்ப்பனர்களிலிருந்து      2 மகம்மதியர்களிலிருந்து      2 ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள் அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து      2 தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து      1 ஆக      12 நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார். எனவே மேல்படி இலாக்காவுக்கு எவ்வளவு பேர் தேவை இருந்தாலும்...

பிரசாரப் பள்ளிக்கூடம் 0

பிரசாரப் பள்ளிக்கூடம்

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப் பிரசார பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31-தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித்திருந்ததில், அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக் கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சௌகரியப்படவில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதன் பேரில் தள்ளிவைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டியதாயிற்று. திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்பவிழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப் பட்டு முன் தெரிவித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாரா யிருக்க வேண்டும் என்பதை...

எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் 0

எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

திருவாளர் எ. இராமசாமி முதலியார் அவர்கள் வகுப்புவாரித் தொகுதியைப் பற்றி தமது அபிப்பிராயத்தை பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அவ்வறிக்கை வருமாறு:- “நான், சைமன் கமிஷன் முன்பாக பார்ப்பனரல்லாதார் கொடுத்த சாட்சியங்களை கவனத்துடன் கவனித்து வந்தேன். பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாதாரின் குறைகளைப் பற்றி நான் முடிவாக ஒன்றும் கூற முடியாத நிலைமையில் இருக்கிறேன். தனித் தொகுதிகள் பார்ப்பன ரல்லாதார் அடைவதற்கு 1919ல் பாராளுமன்றக் கமிட்டியினர் அனுகூலமாக இருக்கவில்லை. என்றாலும் அதைப் பார்ப்பனரல்லாதார் சமாதானத்துடன் சகித்து வந்தனர் என்று எனக்கு நினைவிருக்கிறது. சென்ற பத்து வருடங்களின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்க்கையில் முன் செய்த தீர்மானம் இப்போது சைமன் கமிஷனால் மாற்றமடைதல் வேண்டு மென்பதற்கு முதிர்ந்த காரணங்களைக் காட்டியதாக எனக்குத் தென்பட வில்லை. எங்களுடைய கட்சியாவது, நானாவது எவ்வகுப்பேனும் வகுப்பு வாரித் தேர்தலடையும் நோக்கத்திற்கு மாறுபட்டிருக்கவில்லை. வகுப்புவாரித் தொகுதித் தேர்தல்களால், பல கெடுதிகள் விளையுமென்ற கூற்றினை நான் நம்பவில்லை. ஐக்கியத்தேர்தலாலும் பிரத்தியேக ஸ்தானங்கள்...

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம் 0

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம்

ராமனாதபுரம் ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு. ராமநாதபுரம் ராஜா பா°கர சேதுபதியவர்கள் காலமான பிறகு அந்த °தானத்திற்கு அந்த ஜில்லாவில் கொடுமைப்படுத்தப்பட்டவரும் சமூகப்பிரமுகர்களில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்று நியமன அதிகாரங்களை சர்க்கார் தங்களுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பதே அதற்காகத் தான் என்பதையும் சர்க்காருக்கு கொஞ்சநாளைக்கு முன்பாக பல பத்திரிகைகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அன்றியும் அச்சில்லாவில் செல்வாக்கும் நாகரீகமும் செல்வமும் அறிவு வளர்ச்சியும் பெற்ற சமூகங்களில் ஒன்றாகிய நாடார் சமூகப் பிரதிநிதி களான பல கனவான்கள் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவையும் °தல ஸதாபன இலாக்கா மந்திரியையும் தூது சென்று கண்டு தங்கள் குறைகளை தெரிவித்ததும் அதற்கு அவர்கள் நம்பிக்கையான பதில் அளித்ததும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே சர்க்கார் இது விஷயத்தில் பிரதிநிதித்துவப் பத்திரிகை களினுடைய யோசனைகளை ஏற்றும் பிரதிநிதித் தூதுக் கூட்டத்தாரினுடைய ஆசையை மதித்தும் அந்த °தானத்திற்கு தென்னிந்திய நாடார் சமூகத்தில் ஒரு பிரமுகரான திருவாளர் று.ஞ.ஹ.சௌந்திரபாண்டிய...

காந்தியும் கடவுளும் 0

காந்தியும் கடவுளும்

திரு. காந்தியவர்கள் சென்ற வாரத்திய தமது ‘யங் இந்தியா’ வில் தம்மை ஒரு நண்பர் கடவுளைப்பற்றிக் கேட்ட சில கேள்விகளை பிரசுரித்து அவைகளுக்கு தமது அபிப்பிராயத்தையும் எழுதியிருக்கின்றார். கேள்விகளின் சுருக்கம் யாதெனில்:- “கடவுளைத் தவிர மற்றதெல்லாம் நிச்சயமற்ற தென்றும், சத்தியம் தான் கடவுள் என்றும், துன்பத்தை சகித்துக் கொண்டு பொறுமையாயிருப்பதே கடவுள் என்றும், அயோக்கியர்களை எச்சரிக்கை செய்து அவர்கள் தமக்குத்தாமே கேடு விளைவித்துக்கொள்ளும்படி செய்து விடுகிறார் என்றும், “யங் இந்தியா”வில் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கடவுள் இருக்கின்றார் என்கின்ற உறுதி எனக்கு இல்லை. ஏனெனில் அப்படி கடவுள் என்பதாக ஒன்று இருக்கும் பக்ஷத்தில் உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்துவதே அவரது லக்ஷியமாகவல்லவா இருக்கவேண்டும். ஆனால், உலகம் எங்கு பார்த்தாலும் பலவிதமான அயோக்கியர்களாலும் கொடுமைக்காரர்களாலும் நிரப்பப்பட்டிருப்பதுடன் ஒழுக்க நடவ டிக்கைகளைப் பற்றி சிறிதும் கவலையே எடுத்துக் கொள்ளாத அயோக்கியர் களான அவர்கள் சௌகரியமாகவும் nக்ஷமமாகவும் வாழ்கின்றார்கள். அயோக்கியத்தனம் என்பது ஒருவித தொத்துவியாதி போல்...

அந்தோ! பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார் 0

அந்தோ! பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்

சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10 ம் நாள் புதன் கிழமையன்று, அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்- சுவாமிகள் தென்மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் கால நிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார். கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவைகளை பல இன்னல்களுக் கிடையிலும் உபதேசித்து வந்தவர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும் படிகட்டியும் சிதம்பரவாசிகளுக்கு உதவினவர். சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதிதிராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே. ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளு கிறோம். குடி அரசு – இரங்கல்செய்தி –...

யாகத்தின் ரகசியம் 0

யாகத்தின் ரகசியம்

ஓர் சம்பாஷணை சங்கரன் : ஏது நண்பனே, இன்று அவசரமாய்ச் செல்கின்றாய். வயிறு பசித்துவிட்டதோ? கிருஷ்ணன் : அப்படியில்லை. நாளையத்தினம் எங்கள் கிராமத் தில் ஓர் யாகம் நடக்கப் போகிறது; இன்று மாலையிலேயே ஆரம்பம், அதற்காகப் போகிறேன். சங்கரன் : யாகம் என்றால் எனக்குப் புரியவில்லை. அதை எப்படிச் செய்வார்கள்? கிருஷ்ணன் : அதை எல்லாம் உனக்குச் சொல்வது கூடாது, அந்தரங் கமானது; அது எங்கள் பரம்பரை பரம்பரை வழக்கமாயுள்ளது; யாகம் செய்தால் ஊர் செழிக்கும். பிராமணர்களுக்குச் செல்வம் வளரும். சங்கரன் : நண்ப, எவ்வளவு அந்தரங்கமானாலும் பலர் சேர்ந்து செய்தால் எப்படியும் வெளிவந்துதானே தீரும். அன்றியும் நீ சொல்வதைப் பார்த்தால் நல்ல காரியமாகத்தானே தெரிகிறது. அதை நான் தெரியும்படி சொல்லவேண்டுகிறேன். கிருஷ்ணன் : ஏது என்னைச் சீக்கிரம் போக விடமாட்டாய் போலிருக் கிறது. எனக்கு முக்கிய நண்பனாதலால் சுருக்கமாகக் கூறுகிறேன். மற்றவர்க ளிடம் சொல்லாதே. சங்கரன் : அப்படியே கிருஷ்ணன்...

சீர்திருத்தமும்  இந்துமத ஸ்மிருதியும் 0

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்

திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு “ஸ்ரீமுகம்” வெளியிட்டிருக்கின்றார். அதை “சுதேசமித்திரன்” பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்தியமூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப் படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம். திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லிவிடலாமானாலும் அவருக்கு இம் மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே. அதாவது “தேசீய அரசியல்” இயக்கம் என்று சொல்லப்படுவதில் ஒரு குறிப் பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப்பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யூனிவர்சிட்டி பிரதிநிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத்தினராகவும்,...

சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் ஐ 0

சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் ஐ

சர்வகக்ஷி மகாநாடு எனப் பெயர் வைத்துக்கொண்டு சிலர் கூடி செய்துவரும் ஜெகஜாலப் புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் மக்கள் ஏமாறத்தக்கவண்ணம் வேண்டுமென்றே நம் நாட்டில் சில தேசீயப் பத்திரிகைகள் என்னும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் செய்து வந்த புரட்டுகளெல்லாம் இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டதை யாவரும் அறிந்திருக்கலாம். இதன் காரணம் அப்பத்திரிகைகள் தங்களுக்கென யாதொருவித கொள்கையும் இல்லாமல், சற்றும் விவகார ஞானமும் இல்லா மல் சமயத்திற்குத் தகுந்தபடியும் காசு கொடுப்பவர்கள் சொல்கின்ற படியும் நடக்க வேண்டியிருப்பதால், சற்றும் மானம் ஈனம் வெட்கமின்றி தினத்திற்கு ஒரு குட்டிக்கரணம் வீதம் போட்டு மாறி மாறி எழுத வேண்டிய வைகளாகவே இருக்கின்றன. உதாரணமாக சர்வகக்ஷி மகாநாட்டைப் பற்றியும் அதன் தீர்மானங்களைப் பற்றியும் இக்கூலிப் பத்திரிகைகள் ஒரே அடியாக வானமளாவப் புகழ்ந்ததும், அதை உலகமே ஒப்புக் கொண்டாய் விட்டது என்றதும், இனி தேசத்திற்கு விடுதலை ஒரு விரக்கடை தூரம் தான் இருக்கின்றது என்றதும், அதில் கலந்து வேலை செய்தவர்களையெல்லாம் பாராட்டி எழுதி...

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் 0

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள்! இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள்- இந்த இயக்கத்தினால் தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச்செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப்படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம் உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின்றவர்கள் இக் காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர் செய்வதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர் களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ் வியக்கம் தாக்கப்பட்டாலும்,...

சைவ சமயம் 0

சைவ சமயம்

சமயம் என்பதைப்பற்றி சென்ற வாரம் ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். இவ்வாரம் சைவ சமயம் என்பது பற்றி எழுதுகின்றோம். கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்கு மேல் போகின்றது. சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று கட்சி சேர்க்கின்றார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள் சிலர் அப்படித்தான், அதாவது, “சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் , அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைபட்டுப் போகும்” என்று கூச்சல் போட்டார்கள். கூலி கொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார் கள். அவ்வளவு கூச்சல்களையும் அடக்கிக்கொண்டு இப்போது நமதியக்கம் தலைநிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கிவிட்டார்கள். இப்போது சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலர் கிளம்பி சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென பிரசாரம் செய்து வருகின் றார்கள். இச்சைவ சமயத்தார்கள் என்பவர்கள், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும், வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக்...

பழியோரிடம் பாவமோரிடம் 0

பழியோரிடம் பாவமோரிடம்

காலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின் தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று “தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது. சென்னை அரசாங்கத்தார் ³ நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று “தமிழ்நாடு” கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் ³ நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ³ ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டி ருப்பதால்...

சமயம் 0

சமயம்

சமயம் என்பதைப் பற்றி இவ்வாரம் ஒரு நீண்ட வியாசம் எழுத வேண்டிய அவா ஏற்பட்டதின் காரணம் என்னவென்பதை முதலில் குறிப்பிட்டுவிட்டு பின்னால் சமயத்தைப்பற்றி எழுதுவோம். இதுசமயம் சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையை தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள் மூலமாகவும் விஷமப் பிரசாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டுமிருக்கின்றார்கள். இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட் டத்தவருள் பெரும்பாலானவர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு அம்மன் காசோ செலவழிக்காத “தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரசாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு...

‘புண்ணிய ஸ்தலங்கள்’ 0

‘புண்ணிய ஸ்தலங்கள்’

-சித்திரபுத்திரன் “புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தின் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் “புண்ணிய ஸ்தலத்தின்” யோக்கியதையையும் விளக்கி இருக்கிறது. பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது குறிப்பிட்டிருக்கக்கூடுமோ என்பதாக சந்தேகப்படகூடுமானாலும் வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லும் பக்தவிஜயம் என்னும் புஸ்தகத்தின் சுருக்கமாகிய பக்தலீலாமிர்தம் என்னும் புத்தகமானது சைவர்களுக்கு எப்படி சைவ பக்தர்களின் சரித்திரத்தைச் சொல்லக் கூடிய தான சைவபுராணமாகிய பெரிய புராணமோ, அதுபோல் – ஏன்? ஒரு விதத்தில் அதைவிட முக்கியமானதென்று கூட சொல்லலாம். எப்படி எனில், பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்திசுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிருந்த பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக நம்பியாண்டார்...

இளம் வயது விவாக விலக்கு மசோதா 0

இளம் வயது விவாக விலக்கு மசோதா

தேசீய வாதிகள் யோக்கியதை மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க வேண்டுமென்பதாகவும் முயற்சி எடுத்தும் வருகின்றோம். இதைப்பற்றி பல சமூக மகாநாடுகளிலும், பல சீர்திருத்த மகாநாடுகளிலும் பேசி தீர்மானங்களும் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் அதை அனுசரித்து அது அமுலில் வரத் தக்க ஏற்பாடுகள் ஏதாவது செய்ய ஆரம் பித்தால் உடனே அங்கு மதம் வந்து குறுக்கே விழுந்து அம்முயற்சிகளை அழிப்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றதும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே பெரிதும் நாம் மனித இயற்கைக்கு விரோதமான மதங்களும் கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டுமென்று முயற்சித்து வருகின்றோம். இம்முயற்சிக்கு யார் எதிரிடையாக இருந்தபோதிலும் நாம் ஒருசிறிதும் லக்ஷியம் செய்யாமல் இடையூறான மதங்களையும் அதற்கு ஆதாரமான சாமிகளையும்...

சென்னையில் மாபெருங்கூட்டம் 0

சென்னையில் மாபெருங்கூட்டம்

“தற்கால ராஜீயநிலைமை” சகோதரர்களே! இன்று நான், இன்ன விஷயத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமென்று நான் முடிவு செய்யவில்லை, ஆகிலும் கமிஷன் பகிஷ்காரம் என்னும் பொருள் பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் இப்போது அரசியல் உலகத்தில் முக்கியமாக அடிபடுகிறது. அதாவது நமக்கு இதற்குமுன் சர்க்காரால் அளிக்கப்பட்டு நாம் அனுபவித்து வருகிற சீர்திருத் தத்தைக் குறித்தும், இந்தியர்களுக்கு இன்னும் அதிகப்படியான சீர்திருத்தம் கொடுக்கலாமா, அவர்கள் அவற்றை அடைய லாயக்குதானா என்பவை களைக் குறித்தும் விசாரித்து அறிவிக்கும்படி பிரிட்டிஷ் பார்லிமெண்டு இப்போது ஒரு கமிஷனை அனுப்பியிருக்கிறது என்பதைப் பொருத்தவரை அரசியல் வாதிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். எனவே, நாம் இதை இப்போது பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது அதனிடம் நமது குறைகளைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப் பதால் நாட்டுக்கு நன்மையுண்டா அல்லது பகிஷ்கரித்தால் நன்மையுண்டா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு சிலர் ஆரம்பித்திருக்கும் கமிஷன்...

திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம் 0

திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு. செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர் களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர்(நகைப்பு). பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகின்றது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு). மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார். நம்நாட்டு மூட பழக்க வழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார்...

ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா 0

ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா

வீரர் திரு. ஆரியா அவர்களின் வாழ்க்கைத்துணை நல்லார் ( பாரியை) ஆகிய ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா ஆ.ஹ.க்ஷ.னு.,ஆ.னு சர்ஜன் அன் பிசிஷன் அவர்கள் குழந்தை வைத்திய விஷயத்திலும் °தீரிகள் வைத்திய விஷயத் திலும் சிறப்பாக மருத்துவ விஷயத்திலும் தேர்ச்சி பெற மேல்நாடு சென்று ஜெர்மனி முதலிய இடங்களில் உள்ள உயர்தர வைத்திய காலேஜுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்கு இரண்டு மாதத்திற்கு முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் இது சமயம் அரசாங்க உத்தி யோகம் பெற சம்மதிப்பார்களானால் தக்க பதவியும் உத்தியோகமும் கிடைக் கக்கூடுமானாலும் தேசத்திற்கும் ஏழைமக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்கின்ற அவாவின் பேரில் தனியே சொந்தத்தில் ஒரு வைத்திய சாலை ஏற்படுத்தி இருப்பதுடன், யாவருக்கும் வைத்திய உதவி செய்யவும் தயாராயிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தயாளகுணமும் தாராள நோக்கமும் உள்ள அம்மையார் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் அவர்கள் எடுத்த காரியம் சித்தி பெற்று யாவருக்கும் பயன்படவேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம்....

“புண்ணியஸ்தலங்கள்” 0

“புண்ணியஸ்தலங்கள்”

பண்டரிபுரம் -சித்திரபுத்திரன் இதிகாசங்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் கடவுள்களை பற்றியும் தனித் தனி மகுடமிட்டு “குடி அரசில்” எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணு கின்றேன். அவற்றை எழுதி வருவதின் நோக்கமெல்லாம், ஒரு சில சுயநலக் காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவை களையும் அசம்பாவிதமானவைகளையும் வெகு சாதாரணமானவை களையும் எழுதிவைத்துக்கொண்டு பிரமாதப்படுத்தி, அவற்றையே மதம் என்றும் பக்தி என்றும் மோக்ஷத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும் சுதந்திரத்தையும் சுயமரியாதை யையும் ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி மக்கள் யாவரும் சமம் என்பதையுணர்ந்து சுயமரியாதை யோடு வாழ வேண்டுமென்பதுதான். ³ சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து அவற்றிற்கு ஏராளமான யோக்கியதைகளைக் கற்பித்திருப்பதை பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணியஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து...

பழிவாங்கும் குணம் 0

பழிவாங்கும் குணம்

திருச்சி ஜில்லா நியாயாதிபதியவர்கள் திரு. ஞானப்பிரகாசம் என்கின்ற ஒரு தொழிலாளருக்கு 10 வருஷம் கடின காவல் தண்டனை விதித்ததாக தெரியவருகின்றது. இந்த வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதா அல்லது பழிவாங்கும் பேய்தன்மை நியாயம் வழங்கப்பட்டதா என்பது நமக்கு விளங்கவில்லை. என்ன சமாதானம் சொன்னபோதிலும் இத் தீர்ப்பு எழுதிய நியாயாதி பதி மனிதத்தன்மையுடன் நடந்துக்கொன்டிருக்கிறாரா என்பதை வாசகர் கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வேலைநிறுத்தத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் பலனாக சற்றும் ஈவு இரக்கமற்று பழி வாங்கும் தண்மையோடு வழக்குகள் ஜோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் யாவருக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிந் திருக்கும். நியாயாதிபதிகள் என்பவர்கள் தங்களுக்கு கிரமமாய் இருக்க வேண் டிய மனிதத்தன்மையை மறைத்துவிட்டு ஏதோ சில சுயநலப் பத்திரிகை காரர்கள் சுமத்திய அநியாயப் பழியையும் சில சுயநல அதிகாரிகள் ஜோடித்த விஷயங்களையும் ஆதரவாய் கொண்டு இம்மாதிரி நடப்பதென்றால் பிறகு வாயில்லா பூச்சிகளுக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பது நமக்கு விளங்க வில்லை. அஸெஸர்கள் ஏகோபித்து...