கோவையில் சர்வகக்ஷி மகாநாடு
கோயமுத்தூரில் இம்மாதம் 23-ஆம் தேதி அகில இந்திய சர்வகக்ஷி மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வகக்ஷி மகாநாடு கூடப் போகின்றது. அதற்கு காரியதரிசி திரு. சு.மு. ஷண்முகம் செட்டியார் ஆ.டு.ஹ. அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஆ.டு.ஊ. ஆவார்கள். மகாநாட்டு தலைவர் சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆ.டு.ஊ. ஆவார்கள்.
எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்பனரல்லாதார் என்பதில் நாம் எவ்வித ஆnக்ஷபனையும் சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய் தங்கள் சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகத்திற்கும் உண்மையான யோக்கியமான பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமை களை தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்து வார்களா? என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறைகளுக்குப் பின் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று கனவான்களையாவது உத்தேசித்து மகாநாட்டுக்கு எல்லோரும் போய் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை தாராளமாய்ச் சொல்வதற்கும் வலியுறுத்துவதற்கும் முடியாமல் போனாலும்கூட சாக்ஷியினராகவாவது சென்று அக்கனவான் களை கௌரவப்படுத்த வேண்டுகின்றோம்.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 18.11.1928