லாலா லஜபதி
திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று “தியாக
பூமி”யில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால் பட்டா
பிராமய்யர் அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரிக்க அனுப்பியிருந்ததை எளிய நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். அதில் சென்னை அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக் கின்றார். எனவே வாசகர்கள் தயவு செய்து பொறுமையுடன் ³ விஷயம் முழுதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 18.11.1928