திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி நாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிய சேதிக்கும் சென்றவாரக் ‘குடி அரசு’ ‘திராவிடன்’ கட்டுரை களுக்கும் திரு.எ. இராமசாமி முதலியாரவர்கள் பதில் அளித்திருப்பதாவது.
“நான் தனித்தொகுதி சம்மந்தமாக வெளியிட்ட அறிக்கையைப்பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பரும் தலைவருமான திரு. ராமசாமி நாயக்கரின் அபிப்பிராயத்தை நான் படித்துப் பார்த்தேன்.
நான் வெளிப்படுத்திய அபிப்பிராயம் என் சொந்த அபிப்பிராயம் என்று நான் அசோசியேட் பிர° நிரூபரிடம் சொல்லியிருந்தும் அதை அது வெளிப்படுத்தாததற்கு காரணம் இன்னது என்பது எனக்கு தெரிய வில்லை.
தற்கால நிலைமையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரண்டு சமூகங்களுக்கும் உள்ள பலமான மனக்கசப்பானது தனித்தொகுதி ஏற்படுத்து வதன் பயனாய் ஒரு அளவுக்கு பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் சமநிலைமை உண்டாக்கத்தக்கதாகவும் இருக்குமென்று சொல்லியிருந்தேன்.
ஆனாலும் இந்தசமயத்தில் அதை வற்புறுத்துவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமானதல்ல என்று நம்புகின்றேன். ஏனெனில் மேல் கண்ட தனித்தொகுதித் தேர்தல் முறை ஏற்பட்டால் இனி ஏற்படப்போகும் பார்ப்பனர்கள் எவ்வளவு அடையக்கூடுமோ அதை விடவும் அவர்கள் எத்தனை °தானங்களுக்கு உரியவர்களோ அந்த ஸ்தானங்களை விட அதிக மாகவும் அடைந்துவிடக்கூடுமென பயப்படுகின்றேன்.
இந்த காரணங்களாலேயே நாம் தனித்தொகுதித் தேர்தல் முறைகேட்ப தானது பார்ப்பனர்களுக்குக்கூட அனுகூலமானதும் ஆசையுள்ளதுமாக இருக்குமென்றே நான் கருதுகிறேன்.
நான் பம்பாய் மாகாணத்தின் நிலைமையை நன்கு தெரிந்தபிறகுதான் இதைச்சொல்ல முன்வந்தேன் என்பதை எனது நண்பர்கள் அறியவேண்டும்.
இந்தமாதிரி நான் சொல்வதற்கு எனக்கு தைரியமேற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்துவருகின்ற அபாரமான வேலையின் பயனாய் ஏற்படப்போகும் பலனில் எனக்கு ஏற்பட்ட உறுதியான நம்பிக்கையேதான்.
எப்படியிருந்தபோதிலும் நான் எனது தலைவர்களுடைய அபிப்பி ராயப்படி நடக்க எப்போதும் தயாராயிருக்கிறேன். மற்றபடி உத்தியோக சம் மந்தமாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்தில் என்னுடைய அபிப்பி ராயங்கள் எல்லாருக்கும் தெரிந்ததாகும். அதிலிருந்து நான் ஒரு சிறிதும் மாற்றமடையவில்லை.
பம்பாயைப் பொருத்தவரையில் நான் கவலைப்படுவது நல்ல விஷயங்களை சரியான படி எடுத்துச்சொல்லாததால் கெட்டுப்போய் விடுகிறதே என்பது தான்.”
என்பதாக தமது பதிலில் தெரிவித்திருக்கின்றார். இதைப்பற்றிய நமது அபிப்பிராயத்தை பின்னால் வெளிப்படுத்தலாம் என்பதாக எண்ணி யுள்ளோம்.
குடி அரசு- குறிப்புரை – 11.11.1928