கொளத்தூர் ‘புலியூரில்’ மாவீரர் நாள்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் உள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 26.11.2019 அன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவீரர் நாள் பாடல் மாலை 6 மணிக்கு ஒலிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி தோழர்கள் நினைவு கூர்ந்தனர். சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு மாவீரர் நாள் உரையாற்றினார். புலிகள் பஞ்சர் கடை சுப்பிரமணி நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 1000 ற்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்