புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மீதான மற்றொரு கிரிமினல் வழக்கு ரத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
—————————————-
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவாகவும்  காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு  எதிராகவும் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு யிடுதலைப்புலிகளுக்கும்,  ஈழத்தமிழர்களுக்கும் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை  விளக்கி காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை விளக்கும்  துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்ததாக கூறி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்படுதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை எதிர்த்து லோகு அய்யப்பன் உட்பட மூவரும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்கிளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேற்படி வழக்கில் மனுதாரர்களுக்காக மூத்த வழக்கறிஞர் திரு எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர் திரு வை இளங்கோவன் அவர்களும் ஆஜராகி வாதாடினார்கள். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி அதனை  மதிக்காமல் அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்து விட்டார். மேற்படி வழக்கானது இறுதி விசாரணைக்காக நீதியதி திரு எம். நிர்மல் குமார் அவர்கள் முன்பு கடந்த 18.11.2019 அன்று பட்டியலிடப்பட்டது. அப்போது வழக்கறிஞர்கள் துரைசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர் இடைக்கால உத்தரவை மீறி காவல்துறை வழக்கை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ததை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றனர். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக காவல்துறையை நீதியரசர் வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் முதல் தகவல் அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கோடு சேர்த்து இறுதி அறிக்கையும் இணைத்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேற்படி வழக்கானது  28.11.2019 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சட்டப் பிரிவுகள் Representation of People Act, Press Registration Act மற்றும் இந்திய தண்டணைச் சட்டம் ஆகிய பிரிவுகள் மனுதாரர்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டதையும் மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆவணமும் மற்றும் சாட்சியும் இல்லை என்பதையும் வழக்கறிஞர்கள் துரைசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டனர். வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் திரு எம் நிர்மல்குமார் அவர்கள் லோகு ஐயப்பன் உட்பட மூவர் மீதும் பதிவுசெய்யப்பட்ட இறுதி அறிக்கையை முற்றிலுமாக ரத்து செய்து குற்றம் புரிந்ததற்கான சாட்சியம் எதுவும் போலீசாரால் முன்னிருத்தப்படவில்லை என்று குற்ற வழக்கினை ரத்து செய்து அதிரடியாக  உத்தரவிட்டார்.

வை.இளங்கோவன், வழக்கறிஞர்.

You may also like...