தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08122019

தென்காசி மாவட்ட திராவிடர்விடுதலைக்கழக கலந்துரையாடல்கூட்டம்
தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 08.12 2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் கீழப்பாவூர் தோழர் மாசிலாமணி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக் கழக பணிகள் குறித்தும் மாவட்ட கழக தோழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானம் – 1
கழக இதழ்களான . “புரட்சி பெரியார் முழக்கம் ” – வார இதழ் மற்றும் “நிமிர்வோம்” – மாத இதழ்களுக்கான சந்தாகளை அதிகமாக சேர்ப்பது எனவும் தோழர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகம், படிப்பகங்களில் இதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கான தொகையை அந்தந்த பகுதி தோழர்கள் ஏற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 2

எதிர்வரும் டிசம்பர்- 22 ‘2019 அன்று கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டிநடைபெறும் நீலச் சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டில் தென்காசி மாவட்டம் சார்பில் திரளாக கலந்து கொள்வது என்றும் தனி வாகன ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 3

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் கழக பணியினை தொய்வின்றி எடுத்து செல்ல ஏதுவாக பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 10.00 மணியளவில் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துவது என்றும் மூன்றாவது ஞாயிறு மாலையில் ஏதாவது ஒரு பகுதியில் சாலையோர (தெருமுனை) கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

தென்காசி மாவட்டத்தின்புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள்தேர்ந்து எடுக்கப்பட்டனர்

மாவட்டத் தலைவர் : குறும்பலாப்பேரி அ.மாசிலாமணி

மாவட்டச் செயலாளர் : .
கீழப்பாவூர் சு அன்பரசு

மாவட்ட துணைச் செயலாளர் :
கபாலிபாறை சுரேஷ்

மாவட்டப் பொருளாளர் :
மந்தியூர் ந.சங்கர்

தமிழ்நாடு அறிவியல் மன்றம்

மாவட்ட அமைப்பாளர் :
கீழப்பாவூர் *ச*தமிழ்செல்வன்

*கீழப்பாவூர்* *ஒன்றிய* *புதிய* *பொறுப்பாளர்கள்*

தலைவர் :
அருணாப்பேரி *ச*சுப்பையா*

செயலாளர் :
செட்டியூர் *சேர்மத்துரை*

துணைச் செயலாளர் :
கீழப்பாவூர் *ஆ.குமணன்*

பொருளாளர் :
கீழப்பாவூர் *மாதவன்*

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலாவதி* , *தங்கத்துரை* , *மனோஜ்குமார்* , *அழகுதுரை* மற்றும் பலர் கலந்துகொண்டனர்..

You may also like...