மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!
தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...