மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு
மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து ஆவணப் படம் திரையிடப்பட்டது. கழகத் தோழர்களும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த உணர்வாளர்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.
பெரியார் முழக்கம் 02012014 இதழ்