ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’

திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி

10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

தோழமை அமைப்புகளின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று வளர்ந்து வருகிறது நமது இயக்கம்!

தன்னலமின்றி நேர்மையாக கொள்கை சமரசமின்றி நிமிர்ந்து நிற்கும் நமது அமைப்பின் வலிமை தான் பெரியார் கொள்கைக்கு வலிமை சேர்ப்பதாகும்.

ஈரோட்டில் மாபெரும் வெற்றி மாநாட்டை நடத்திக் காட்டிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்வீரர்களே!

மக்களை சந்திக்கும் திட்டத்தில்  விரைந்து களமிறங்கிடுவீர்!

– விடுதலை இராசேந்திரன்

பொதுச் செயலாளர்

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...