கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.

மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ தயாரித்த கோரிக்கை மனுவை அளித்தார். உள்துறை அமைச்சரிடம் தொலைபேசி வழியாகவும், வைகோ கழகத் தலைவர் மீதான பொய் வழக்குகளை விவரித்துக் கூறி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்ய வலியுறுத்தினார். மாநில அரசு முறைகேடாகப் பிறப்பிக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய உள்துறைக்கு நீக்கம் செய்யும் உரிமை உண்டு. கடந்த காலங்களில் பலமுறை இதேபோல் உள்துறை அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் இதழ் 12122013

You may also like...