சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி
“மதம் மாறுவது தேச விரோதம், ஆனால், வாக்காளர்களுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறுவது மட்டும் தேச பக்தியா?” என்று ஒரு பா.ஜ.க. ‘ஜீ’யிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. “‘சனாதன தர்மம்’ என்கிறீர்கள், அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன்; “என்றும் மாறாதது, நிலையானது” என்றார். “அப்படி யானால் ஆட்சிகள் மாறுவதே சனாதனத்துக்கு எதிரானதா” என்று கேட்டேன்; “இது என்ன விதண்டாவாதம்?” என்றார். “சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்க்கலாம்; அதற்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேசலாம்; சொகுசு ஓட்டல்களில் அடைத்து வைக்கலாம்; இதுவே பாரத பண்பு என்று உங்களது வேதமும் முனிவர் களும் ரிஷிகளும், எந்த புனித நூலிலாவது பறை சாற்றியிருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இதுக்குப் போய் அவுங்களையெல்லாம் இழுக்காதீங்கன்னு” கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார். “ரிஷிகளும் முனிவர்களும் காட்டிய ஆன்மீகப் பாதையில் தான் உங்க பா.ஜ.க. நடைபோடு கிறதா” என்று கேட்டேன்; கோபம் கொப் பளித்தது; “ஆமாம். அதில் என்ன...