மதம் எனும் சமுதாயக் கொள்கை
மதம் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அதாவது நான் சொல்லும் மதம், கடவுளுக்கும் மக்களுக்கும், சம்பந்தமும் மோட்சமும் விதியும் மன்னிப்பும் சமாதானமும் மேல் லோகத்தில் அளிப்பது என்கிற மதம் அல்ல. மற்றெதுவென்றால், மனிதனுக்கு மனிதன் மரியாதையாய், (பணிவாய்) அன்பாய், ஒற்றுமையாய், ஒழுக்கமாய், உதவியாய், வாழும் கொள்கை என்று சொல்ல எனக்கு இஷ்டம். இதை நீங்கள் மதம் என்று சொல்ல வேண்டும் என்றாலும் ஆட்சேபிக்கவில்லை. இப்படிப்பட்ட மதம் இல்லாமல் மனிதன் சமுதாயத்தில் வாழ்வது சங்கடமாகும்.
பெரியார்
பெரியார் முழக்கம் 15062023 இதழ்